கமல், டிரைவர் ஷர்மிளாவுக்கு கொடுத்த காரின் விலை இவ்வளவா? பெரிய காரா பார்த்து பரிசு கொடுத்திருக்காரே!

பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவிற்கு நடிகர் கமலஹாசன் கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். பேருந்து ஓட்டுனர் பணியிலிருந்து ஷர்மிளா சர்ச்சைக்குரிய வகையில் விலகிய நிலையில் நடிகர் கமலஹாசன் இந்த கார் பரிசை அவருக்கு வழங்கியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

கோவையைச் சேர்ந்த 24 வயதான பெண் ஷர்மிளா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் சிட்டி பஸ்ஸில் முதல் பெண் ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டார். அப்பொழுது ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை என சமூகம் கருதும் பஸ் ஓட்டுநர் வேலையை ஒரு பெண் அசாதாரணமாக செய்வதை கண்டு பலர் அவரை பாராட்டினார்.

Kamal Gifted Car

சமூக வலைதளங்களில் அவர் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகள் எல்லாம் வைரலாக பரவியது. பலர் இது குறித்து பேசி பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷர்மிளா அந்த ஓட்டுநர் பணியில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் நீக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.

எம்பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டி சென்ற பஸ்ஸில் பயணிக்கும் போது ஷர்மிளாவிற்கும் அதில் கண்டக்டராக இருந்த மற்றொரு பெண்ணிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினையால் ஷர்மிளா பணியில் இருந்து நின்றதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்திகள் எல்லாம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

Kamal Gifted Car

அவர் வெளியேறியதற்கான காரணம் குறித்து ஷர்மிளாவும் அவர் வெளியேறியது குறித்து பஸ் உரிமையாளரும் அளித்த பேட்டிகள் எல்லாம் பரபரப்பாக வைரலாகின. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் பஸ் ஓட்டுனர் பணியில் இருந்து விலகிய ஷர்மிளாவிற்கு சொந்தமாக தொழில் செய்ய கார் ஒன்றை வாங்கி பரிசளிக்க முடிவு செய்தார்.

இதை எடுத்து கமல் பண்பாட்டு மையம் சார்பில் ஷர்மிளாவிற்கு மாருதி சுஸூகி நிறுவனத்தின் எர்டிகா காரை வாங்கி பரிசளிக்க முடிவு செய்யப்பட்டது. இதை எடுத்து நடிகர் கமலஹாசன் ஷர்மிளாவையும் அவர்கள் பெற்றோரையும் நேரில் வரவழைத்து அவர்களிடம் பேசி தனது வாழ்த்துக்களை கூறி எர்டிகா காருக்கான முன் பணத்தை காசோலையாக வழங்கினார்.

எர்டிகா கார் வாங்கும்போது மீதமுள்ள பணத்தையும் கமலஹாசனே வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸூகி நிறுவனத்தின் எர்டிகா காரை பொறுத்தவரை தற்போது டாக்ஸியாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால்தான் இந்த காரை வாங்கி கமலஹாசன் ஷர்மிளாவிற்கு பரிசு அளித்துள்ளார். இதை வைத்து ஷர்மிளா தொழில் முனைவோராக மாறவுள்ளனார்.

மாருதி எர்டிகா காரை பொருத்தவரை ஷர்மிளா டாக்ஸி பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டியது இருப்பதால் அதில் உள்ள டூர் எம் வேரியண்ட் காரை தான் அவர் வாங்க வேண்டும். டூர் எம் காரைப் பொறுத்தவரை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு வேரியன்ட்களிலும் இருக்கிறது.

இதன் விலையை பொறுத்தவரை பெட்ரோல் வேரியன்ட் ரூ 9.75 லட்சம் என்ற விலையிலும், சிஎன்ஜி வேரியண்ட் ரூ 10.70 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்த தகவலின் படி நடிகர் கமலஹாசன் ஷர்மிளாவுக்கு ரூ 10 லட்சம் விலையிலான காரை பரிசாக வழங்க உள்ளதாக தெரிய வந்தது.

அப்படி என்றால் அது பெட்ரோல் காராக தான் இருக்கும். இதன் இன்ஜினை பொறுத்தவரை கே 15 சி ஸ்மார்ட் ஹைபிரிட் 1462 சிசி இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 6000 ஆர்பிஎம் இல் 75 கிலோ வாட் பவரையும், 4300 ஆர்பிஎம்மில் 135 என்எம் டார்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்படுகிறது. மேலும் இந்த காரில் எலெக்ட்ரோ ஸ்டேட்டிக்ஸ் டச் பட்டன்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நான்கு ஸ்பீக்கர்கள் யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் கனெக்ட்டிவிட்டி, ஸ்டிரிங் மௌண்டெட் ஆடியோ மற்றும் காலிங் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓட்டுனர் துறைக்கு பெண்கள் வேலைக்கு வருவது மிக அரிய விஷயமாக இருக்கிறது. ஆண்களுக்கென தனியான துறை என கருதப்பட்ட இந்த துறையில் சமீப காலமாக பெண்கள் அதிக அளவில் ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகின்றனர். இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.

More from DriveSpark

Article Published On: Monday, June 26, 2023, 18:25 [IST]
English summary
Kamal haasan presents car to sharmila bus driver from coimbatore
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+