கமல் இப்படியொரு கப்பல் மாதிரியான காரை வச்சிருக்காரா! எங்களுக்கு தெரிஞ்சத எல்லாத்தையும் இங்கே சொல்லியிருக்கோம்!

நடிகர் கமலஹாசன் கப்பல் மாதிரியான ஓர் காரை பயன்படுத்தி வருகின்றார் என்பது உங்களில் எத்தனை பேருக்கும் தெரியும். சமீபத்தில் அவர் அந்த காரில் பயணித்த வீடியோ ஒன்றே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. சென்னை ஆழ்வார்பேட்டை அருகேயே அவர் அந்த காரில் வலம் வந்திருக்கின்றார். வீடியோவின் அடிப்படையில் அவர் வைத்திருக்கும் அந்த கார் மாடல் லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) என்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலையே இந்தியாவில் ரூ. 2.10 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதுவே, இதன் உயர் நிலை தேர்வோ ரூ. 2.62 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படுகின்றது. அதாவது, நான்கு இருக்கைகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் தேர்வே இந்த அளவு அதிக விலையில் விற்கப்படுகின்றது.

Kamal lexus lm 350h luxury mpv

இத்தகைய காஸ்ட்லியான காரையே நடிகர் கமலஹாசன் பயன்படுத்தி வருகின்றார். காரின் பதிவெண்ணை வைத்து வாஹன் தளத்தில் ஆராய்ந்ததில் அந்த கார் கமலின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதை வைத்தே இந்த ஆடம்பர கார் அவரின் சொந்த வாகனம் என்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது.

பொதுவாக விலை உயர்ந்த ஆடம்பர கார்களை வாங்கும்போது நடிகர்கள் தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை தங்களின் நிறுவனங்களின் பெயரிலேயே வாங்குவார்கள். ஆனால், நடிகர் கமலோ தன்னுடைய சொந்த பெயரிலேயே இந்த காரை வாங்கி இருக்கின்றார் என்பது ஆச்சரியமளிக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது.

லெக்சஸ் எல்எம் 350எச் ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இது சாலையில் பயணிக்கும்போது கப்பல் இறங்கி சாலைக்கு வந்ததைப்போல இருக்கும். அதன் வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல ரைடு அனுபவமும் கப்பலில் பயணிப்பதைப் போன்றதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரை இந்தியாவில் இரண்டு வேரியண்டுகளில் வாங்கிக் கொள்ள முடியும். 4 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய ஆப்ஷன்களே அது ஆகும். இதில் 4 சீட்டரே பணக்காரர்களின் மிகவும் பிரியமான கார் மாடலாக இருக்கின்றது. மிகவும் அதிக இட வசதி மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்டதாக இந்த ஆப்ஷனே இருக்கின்றது.

அதேவேளையில், எஞ்சின் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். ஹைபிரிட் வசதியுடன் கூடிய 2.5 லிட்டர், 4 சிலிண்டர், இன்லைன் 16 வால்வு, டிஓஎச்சி, செயின் டிரைவ் மோட்டாரே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 142 kW மற்றும் 242 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.

இத்துடன் முன்பக்கத்தில் 134 kW திறனையும், பின் பக்கத்தில் 40 kW திறனையும் உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். இதற்கான மின்சார ஆற்றலை வழங்க 259.2 V திறன் கொண்ட நிக்கல் மெட்டல் ஹைட்ரைட் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

தொடர்ந்து பயணிகள் சௌகரியமான மற்றும் அட்வான்ஸ்டு டிராவல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும் விதமாக 14 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 23 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், 4 ஜோன் ஏசி கன்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமல்ல வெண்டிலேஷன், ஹீட் மற்றும் மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகளையும் இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல்வேறு அட்வான்ஸ்டு அம்சங்களை இந்த கார் மாடல் தன்னுள் தாங்கியிருக்கின்றது. இத்தகைய காரையே கமல் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த காரை நடிகர் கமல் சென்ற ஆண்டிலேயே வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், மிகவும் அரிதாகவே இந்த காரை அவர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு சமீபத்தில் பயன்படுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோவே இப்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 8, 2025, 18:50 [IST]
English summary
Kamal haasan s luxury lexus lm 350h car gains attention viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+