மனைவிக்கு பரிசுனு சொல்லிட்டு எப்படியிருந்தாலும் நீங்களும் பயன்படுத்த போறீங்க! கார் கொடுத்து ஐஸ் வைக்கும் கணவர்
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் மிக பிரபலமான எஸ்யூவி (SUV) ரக கார். இதற்கு போட்டியாக மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற மற்ற கார் நிறுவனங்கள் புதியது புதியதாக எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்தாலும், அவற்றின் விற்பனை சில காலத்திற்கு மட்டுமே கிரெட்டாவுக்கு இணையாக உள்ளது; அதன்பின் குறைந்துவிடுகிறது. ஆனால், ஹூண்டாய் கிரெட்டா கார்களின் விற்பனை மட்டும் எப்போதுமே டாப் கியரில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், கிரெட்டா காரை அவ்வப்போது ஹூண்டாய் நிறுவனம் மறக்காமல் அப்கிரேட் செய்வது ஆகும்.
இதன் மூலமாக, பவர்ஃபுல்லான என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை பெறுவதால் கிரெட்டா மீது மக்கள் பலருக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. 10, 12 லட்சத்தில் கார் வாங்க விரும்புபவர்களில் பலரது முதல் சாய்ஸ் கிரெட்டாவாகவே உள்ளது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள கிரெட்டா கார்களை மிடில்-கிளாஸ் மக்கள் மட்டுமின்றி, செல்வந்தர்களும் ஆர்வமாக வாங்குகின்றனர்.

அதாவது, வீட்டில் ஏற்கனவே ஒன்றுக்கு பல சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் கூட தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஹூண்டாய் கிரெட்டா கார் ஒன்றை வாங்கி போடுகின்றனர். இந்த வகையில், சினிமா (Cinema) பிரபலங்கள் மத்தியிலும் பிரபலமாக கிரெட்டா இருக்கும் நிலையில், திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் தற்போது பிராண்ட்-நியூ கிரெட்டா காரை வாங்கி உள்ளார்.
யார் இவர் என்பதை பார்ப்பதற்கு முன்னர், எதற்காக இவர் இந்த காரை வாங்கினார் என்பதை பார்த்துவிடுவோம். சமீப காலமாக பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், தனது மனைவிக்காக புதிய கிரெட்டா காரை வாங்கி கொடுத்துள்ளார். "எனது கனவுகளை முன்னோக்கி கொண்டு சென்றவளுக்காக" என மனம் நெகிழ்ந்து கிரெட்டா காரை மனைவிக்கு பரிசளித்துள்ளார்.

இதன் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள இந்த இசையமைப்பாளரின் பெயர், திபு நினன் தாமஸ் (Dhibu Ninan Thomas) ஆகும். கேரளாவின் கோட்டயத்தில் மலையாளியாக பிறந்தவருக்கு, இசையமைப்பாளராக முதல் வாய்ப்பை கொடுத்தது நம் தமிழ் சினிமா ஆகும். 'மரகத நாணயம்' திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
பிரபலமான "நீ கவிதைகளா" பாடல் உள்பட இந்த படத்திற்கு இசையமைத்தவர் திபு நினன் தாமஸ் ஆவார். இதுதான், சினிமா துறையில் இவரது முதல் படம் ஆகும். அதன்பின் மலையாளத்தில் ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்தவருக்கு, சிவகார்த்திகேயனின் 'கனா' திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், இடையிடையே தெலுங்கு, மலையாளம் படங்களில் பணியாற்றினாலும் திபு நினன் தாமஸ் அதிகமாக தமிழ் திரைப்படங்களுக்கே இசையமைத்துள்ளார்.
தற்சமயம், நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் 'டீசல்' திரைப்படத்திற்கும், 'மிஸ்டர் எக்ஸ்' என்கிற மற்றொரு தமிழ் திரைப்படத்திற்கும் இசையமைத்துவரும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், மனைவி மற்றும் குழந்தைகள் உடன் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ ஹூண்டாய் கிரெட்டா காரை டெலிவிரி பெற்று இருப்பதை படங்களுடன் ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மனைவிக்காக இந்த இசையமைப்பாளர் வாங்கியிருப்பது, முற்றிலும் கருப்பு நிறத்திலான ஹூண்டாய் கிரெட்டா கார் ஆகும். இது இல்லாமல், பச்சை, சிவப்பு, வெள்ளை என பல்வேறு கலர் ஆப்ஷன்களில் கிரெட்டா விற்பனை செய்யப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிரெட்டா காரை ஹூண்டாய் விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பயன்படுத்துவதற்கு ஹூண்டாய் கிரெட்டா உண்மையில் அருமையான கார் ஆகும். சொகுசு வசதிகள், சிறந்த மைலேஜ் என அனைத்தும் ஒருசேர கலந்த கிரெட்டா ஆனது ஒருவருக்கு பரிசாக வழங்குவதற்கு மிகவும் ஏற்ற கார் ஆகும். மனைவிக்கு பரிசாக வழங்கி இருப்பினும், எப்படியிருந்தாலும் சில நேரங்களில் இந்த கிரெட்டா காரை இசையமைப்பாளர் திபு நினன் தாம்ஸும் பயன்படுத்துவார்.


Click it and Unblock the Notifications








