15 பேர் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு சிக்னல் ஒவர் ஷாட் தான் காரணமா? அப்படின்னா என்ன தெரியுமா?

மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக ரயிலின் பின்பக்கம் மற்றொரு ரயில் மோதியதால் பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இந்த ரயில் விபத்து எப்படி நடந்தது இதற்கு காரணம் யார் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

அசாம் மாநிலம் சில்ச்சீர் ரயில் நிலையத்திலிருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு அருகே உள்ள சீல்தா ரயில் நிலையத்திற்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்துக் கொண்டிருந்தது. வழக்கமான பயணமாக தான் இது துவங்கியது. இந்த ரயில் சரியாக மேற்குவங்க மாநிலம் புதிய ஜல்பாய் பூரி என்ற பகுதியை அடுத்த ரங்காபாணி ஸ்டேஷன் அருகே இன்று காலை 9 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

kanchanjunga express accident

அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கும் அதே தண்டவாளத்தில் பின்பக்கமாக சரக்கு ரயில் ஒன்று வந்தது. இந்த ரயில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடைசியில் இருந்த இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் இதில் பயணித்த பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழு மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் பல்வேறு வகையான மீட்பு குழுவினர் வந்து விபத்தில் சிக்கிய ரயிலில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க பணியாற்றி வருகிறார்கள்.

kanchanjunga express accident

விபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கும்போது சரக்கு ரயிலின் இன்ஜின் மேலே எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஏறி நிற்பது தெளிவாக தெரிகிறது. இதனால் இந்த விபத்து எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பின்னால் சரக்கு ரயில் வந்து மோதியதால் தான் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்த விபத்தில் சரக்கு ரயில் ஓட்டி வந்த பைலட் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட இந்த பகுதி ஆட்டோமேட்டிக் சிக்னல் முறையில் ரயில்களை இயக்கும் பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் ரயில் இயங்க மனித உள்ளீடுகள் எதுவும் தேவையில்லை. தானியங்கி முறையில் சிக்னலின் செய்யப்படும். குறிப்பிட்ட இந்த ரயில் விபத்தை பார்க்கும் போது சரக்கு ரயில் சிக்னலை ஓவர் ஷாட் செய்து கடந்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

kanchanjunga express accident

சிக்னல் ஓவர் ஷாட் என்றால் ரயில் நிறுத்துவதற்காக சிவப்பு சிக்னல் இருந்த போதும் அதை மதிக்காமலோ அல்லது கவனிக்காமலோ ரயிலின் ஓட்டுனர் தொடர்ந்து சிவப்பு சிக்னலையும் மீறி பயணம் செய்தால் அது ஓவர் ஷாட் என கூறப்படும். இந்த சம்பவத்தில் கஞ்சன்ஜங்கா ரயில் சென்று கொண்டிருந்த தண்டவாளத்தில் அடுத்து செல்ல வேண்டிய சரக்கு ரயிலுக்கு சிவப்பு சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் சரக்கு ரயிலில் ஓட்டுநர் அதை கவனிக்காமல் தொடர்ந்து சென்றிருக்கலாம்

இதன் காரணமாக முன்னே சென்ற கஞ்சன்ஜங்கா ரயிலின் பின்பகுதியில் இது சரக்கு ரயில் சென்று மோதி இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் சிக்னல் சிஸ்டத்தை கொண்ட செக்ஷன் என்பதால் இதில் சிக்னல் கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவு தான் என கூறப்படுகிறது.

அதேநேரம் விபத்து நடந்த குறிப்பிட்ட பகுதி குறைவான விசிபிலிட்டி கொண்ட பகுதியாக இருக்கிறது. இதனால் என்னதான் சரக்கு ரயில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பின்னால் சென்றாலும் குறிப்பிட்ட தொலைவிலேயே சரக்கு ரயில் ஓட்டுனர் கஞ்சன்ஜங்கா ரயிலை பார்த்து நிறுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் குறிப்பிட்ட பகுதி விசிபிலிட்டி குறைவான பகுதி என்பதால் அந்த ரயில் இவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட தண்டவாளத்தில் இருப்பது பின்னால் வரும் சரக்கு ரயில் ஓட்டுநருக்கு தெரிய வரும் போது ரயிலின் வேகம் அதிகமாக இருந்திருக்கும். அதனால் அவர் ரயிலில் வேகத்தை குறைத்து இருக்க போதிய நேரம் இருந்திருக்காது. அடுத்தடுத்து என்ன செய்வது என்று அவர் யோசிப்பதற்குள் இந்த விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ரயில்வேயில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குறைவான விசிபிலிட்டி பிரச்சினை தான் இந்த பிரச்சனைக்கு நீண்ட நாட்களாக தீர்வு காணாமல் இருக்கிறது. குறிப்பிட்ட இந்த விபத்து விசிபிலிட்டி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருந்தால் நிச்சயம் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். அல்லது கவர்ச்சி தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்கும் இதனால் கவர் தொழில்நுட்பத்தை விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் பொருத்த ரயில்வே நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 17, 2024, 12:39 [IST]
English summary
Kanchanjunga express accident cause train disaster details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X