10 பேர் உயிரை பலி வாங்கிய ரயில் விபத்துக்கு காரணம் இது தான்! வெளியானது முழு ரிப்போர்ட்!
கஞ்சன்ஜூங்கா ரயில் விபத்திற்கு ரயில் போக்குவரத்தில் இருக்கும் பிரச்சினைகள் தான் முக்கியமான காரணம் என்பது தற்போது விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் நடந்த ரயில் விபத்தில் சுமார் 10 பேர் பலியான நிலையில், இது குறித்து நடந்த விசாரணை குறித்த முழுமையான அறிக்கையை வெளியாகி உள்ளது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இப்படியாக இந்த ரயில் விபத்துக்கான காரணம் என்ன? இதை தவிர்ப்பதற்காக இனி எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி மேற்குவங்க மாநிலம் சல்பைக்குரியில் இருந்து சியாள்டா செல்லும் வழியில் கஞ்சன்ஜூங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறம் சரக்கு ரயில் ஒன்று மோதியது இந்த விபத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் இந்த விபத்தில் சேதம் அடைந்தன.

இந்தியாவில் ரயில் விபத்து மிக மோசமான சம்பவம் என்பதால் இப்படியான ரயில் விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு இந்த ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு தரவுகளும் சரிபார்க்கப்பட்டன.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்த முழுமையான விபரங்களை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் வெளியிட்டுள்ளார். இதில் ரயில் செயல்பாட்டில் இருக்கும் பிரச்சினை தான் இந்த ரயில் விபத்திற்கு மிக முக்கியமான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் விபத்து குறித்து அவர் கூறிய விபரங்களை பார்ப்போம்.

கஞ்சன்ஜூங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இது சரக்கு ரயிலில் பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு போதுமான அளவு ஓய்வு வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு பணிக்கு முன்பு முப்பது மணி நேரம் ஓய்வு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் இந்த காரணத்தால் ரயில் விபத்து நடந்திருக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கஞ்சன் ஜூங்கா ரயில் மீது மோதிய சரக்கு ரயில் சுமார் 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. அந்த ரயிலின் ஓட்டுநர்கள் கஞ்சன்ஜூங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருப்பதை பார்த்தவுடன் எமர்ஜென்சி பிரேக் அழுத்தியுள்ளார்கள். இதனால் ரயிலின் வேகம் 40 கிலோமீட்டராக குறைந்துள்ளது. இதனால் ரயிலில் ஓட்டுநர்கள் விழிப்புணர்வுடன் இருந்தார்கள் என்று தெரிகிறது.
ஒரு ரயில் சென்று கொண்டிருந்த ரூட்டில் அடுத்த ரயில் செல்வதற்கு அனுமதிக்கான சிக்னல் பிரச்சனை இருந்துள்ளது. இப்படியாக சிக்னல் பிரச்சனை இருக்கும் போது மேனுவலாக அனுமதி வழங்கப்படும். இப்படியாக சரக்கு ரயிலுக்கு டி/ஏ912 என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி சிக்னலில் பிரச்சனை இருக்கும் போது வழங்கப்படும் அனுமதி தான். இந்த அனுமதி வழங்கப்பட்ட பேப்பரில் ரயில் என்ன வேகத்தில் பயணிக்க வேண்டும் என்ற எந்த தகவலும் இடம் பெறவில்லை.
எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் விபத்திற்கு முன்னதாக அந்தப் பாதையில் சிக்னல் கோளாறு ஏற்பட்ட பிறகு 5 ரயில்கள் கடந்து சென்றுள்ளன. அத்தனை ரயில்களும் வெவ்வேறு விதமான வேகத்தில் சென்றுள்ளது. இதனால் விபத்து நடக்கவில்லை. கஞ்சன்ஜூங்கா ரயிலை பொறுத்தவரை 15 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணித்துள்ளது. ஒவ்வொரு சிக்னலிலும் ஒரு நிமிடம் ரயில் நின்று பயணம் செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் ரயிலின் ஓட்டுநர்கள் ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் சிக்னல் வழங்கும் பிரிவினர் இடையே புரிந்துணர்வு இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொருவரும் விதிமுறையை ஒவ்வொரு விதமாக புரிந்து கொண்டதால் வெவ்வேறு விதமாக செயல்பட்டுள்ளார்கள். இதனால் சரியான நடைமுறை எது என தெரியாமல் ஒவ்வொருவரும் ரயிலை ஒவ்வொரு விதத்தில் இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த ரயிலை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல் காரணமாகவே இந்த ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையின் மூலம் இப்படியான ஆட்டோமேட்டிக் சிக்னல் கோளாறு ஏற்பட்டால் எப்படி செயல்பட வேண்டும் என்ற நடைமுறையை ரயில்வே நிர்வாகம் வகுக்க வேண்டும். இப்படியாக வகுத்தால் இனி எதிர்காலத்தில் இது போன்ற சிக்கல்கள் மற்றும் ரயில் விபத்துக்கள் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட ரயில் பாதையில் கவச் மற்றும் ரயில் விபத்தை தடுக்கும் தொழிற்நுட்பத்தை பொருத்த வேண்டும் எனவும், இந்த விசாரணை குழு ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஆட்டோமேட்டிக் சிக்னல் சிஸ்டம் பிரச்சனை ஏற்பட்டால் அதை ரயில்வே நிர்வாகம் மிக முக்கியமான பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அதை விரைவாக சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ரயில் விபத்தில் சரக்கு ரயில் ஓட்டி வந்த ஓட்டுநர்கள் இருவரும், கஞ்சன்ஜூங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டுவும் இறந்துள்ளனர். மற்றவர்கள் கடைசி பட்டியில் இருந்த பயணிகளும் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகாவது ரயில்வே நிர்வாகம் இந்த விதிமுறைகளை மாற்றி இனி இது போன்ற ரயில் விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








