இப்பதான் எம்பி ஆனாங்க அதுக்குள்ள இந்த கார வாங்கிட்டாங்களா! கங்கனா ரனாவத் வாங்கிய அரண்மனை மாதிரியான கார்!
முன்னணி நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) சொகுசு காரையே அவர் வாங்கி உள்ளார். இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டே 3 கோடி ரூபாக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
கங்கனா ரனாவத் வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூ (Range Rover Autobiography LWB) ஆகும். இதன் விலை ரூ. 3.81 கோடிக்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய நம்ப முடியாத விலைக் கொண்ட காரையே நடிகையும், பாஜக எம்பி-யுமான கங்கனா ரனாவத் வாங்கி இருக்கின்றார்.

இவர் சமீபத்தில்தான் அவருடைய 32 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை விற்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. மும்பையின் பாலி ஹில்ஸ்-இல் இருந்த பங்களா வீட்டையே அவர் விற்றார். தன்னுடைய பட தயாரிப்பு பணிகளுக்காக இந்த வீட்டை அவர் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையிலே அவ்வீட்டை அவர் விற்றிருக்கின்றார்.
தற்போது அரண்மனைக்கு இணையான வசதிகளைத் தாங்கிய ஆடம்பர காரை அவர் வாங்கியிருக்கின்றார். இந்த காரை கங்கனா ரனாவத் வாங்கி இருப்பதை லேண்ட் ரோவர் மோடி மோட்டார்ஸ் ஒர்லி (Land Rover Modi Motors)-யும் உறுதி செய்திருக்கின்றது. மேலும், கங்கனா ரனாவத் அக்காரை டெலிவரி பெறும் படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.
இந்திய பணக்காரர்களின் பிரியமான சொகுசு கார் மாடலாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, அதிக சொகுசான டிராவல் அனுபவத்தை விரும்புவோரின் தேர்வாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூபி இருக்கின்றது. இது ஓர் 5 சீட்டர் சொகுசு கார் மாடல் ஆகும். இதன் பெரிய உருவத்திற்கு ஏழு பேர்கூட பயணிக்க முடியும்.
ஆனால், இத்தகைய வசதிக் கொண்ட காரை லேண்ட் ரோவர் நிறுவனம் 5 இருக்கைகளை மட்டுமே கொண்டதாக தயார் செய்திருக்கின்றது. இதனையே தன்னுடைய சொகுசு டிராவலுக்காக கங்கனா ரனாவத் வாங்கி இருக்கின்றார். இந்த கார் அதிக இட வசதியை வழங்கக் கூடிய மட்டுமல்ல மிகுந்த அட்வான்ஸ்டான பயண அனுபவத்தை வழங்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 13.1 அங்குல அளவுக் கொண்ட தொடுதிரை ஆகும். செல்போன் இணைப்பு தொடங்கி பல்வேறு அட்வான்ஸ்டான வசதிக் கொண்ட திரையே இதுவாகும். இத்துடன், டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சம், சப் ஊஃபருடன் கூடிய 34 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், பின்பக்க இருக்கையாளர்களுக்கு என தனி 8 அங்குல தொடுதிரையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும்.
இதுதவிர, டோருடன் டோராக இருக்கக் கூடிய ஹேண்டில், 3டி சரவுண்டு கேமிரா, 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீட் மற்றும் வெண்டிலேட் வசதி கொண்ட இருக்கை போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இருக்கைகளில் கூடுதல் சொகுசு வசதியாக மசாஜ் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கும்.
இதுபோன்று இன்னும் ஏராளமான அம்சங்களைக் கொண்டதே இந்த லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி கார் மாடலும். இதையே கங்கனா ரனாவத் வாங்கி இருக்கின்றார். இந்த காரில் கூடுதல் சிறப்பாக, அடாப்டீவ் ஆஃப்-ரோடு க்ரூஸ் கன்ட்ரோல், டைனமிக் ஏர் சஸ்பெஷன் போன்றவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, காருக்குள் வெளிப்புறம் சத்தம் புகாமல் இருப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்களின் பிரியமான சொகுசு கார் மாடலாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இந்திய திரையுலகைச் சேர்ந்தவர்களின் மனம் கவர்ந்த கார் மடாலாக இது காட்சியளிக்கின்றது. சித்தார்த் மல்ஹோத்ரா கூட இந்த காரையே சமீபத்தில் வாங்கினார். இதுதவிர, சஞ்சய் தத், சிக்கர் தவான், மோஹன்லால் போன்ற நடிகர்களும் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








