இப்படிப்பட்ட தேவதை எம்பி ஆக கிடைக்க தொகுதி மக்கள் கொடுத்து வெச்சிருக்கனும்! நடிகையாக இருக்கும்போதே இத்தனை காரா
கங்கனா ரனாவத் (Kangana Ranaut) பிரபல பாலிவுட் நடிகை. சமீப காலமாக, ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு இவர் தனது ஆதரவை வழங்கி வருகிறார் என்பது நமக்கு தெரியும். இதனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இதன்மூலமாக மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்லவுள்ள கங்கனா ரனாவத்திடம் லக்சரி கார்கள் என்னென்ன உள்ளன என தெரியுமா? வாருங்கள், அதனை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 (Mercedes-Benz S680): மண்டி தொகுதி எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்திடம் உள்ள மேபக் கார் இதுவாகும். பொதுவாகவே, மேபக் கார்கள் என்றால் வழக்கமான மெர்சிடிஸ் கார்களை காட்டிலும் விலைமிக்கவை ஆகும். அதாவது அதற்கேற்ப மெர்சிடிஸ்-மேபக் கார்கள் மிகவும் லக்சரி தரத்தில் உருவாக்கப்படுகின்றன.

கங்கனாவிடம் உள்ள எஸ்680 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.43 கோடி ஆகும். இந்த மேபக் காரில் 5980சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 603.46 பிஎச்பி மற்றும் 900 என்.எம் டார்க் திறன் வரையில் காருக்கு ஆற்றலை வழங்கக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் 730எல்.டி (BMW 7-Series 730LD): நடிகை கங்கனாவிடம் பழைய தலைமுறை பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார் ஒன்றும் உள்ளது. இந்த காரின் பெயரில் உள்ள 730எல்.டி என்பது காரில் பொருத்தப்பட்டிருக்கும் 3.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜினை குறிக்கிறது. இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.45 கோடி ஆகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ 350டி (Mercedes-Benz GLE 350d): கங்கனாவிடம் உள்ள மற்றொரு ஓல்டு-ஜென்ரேஷன் கார் ஜி.எல்.இ350டி ஆகும். இந்தியாவில் தற்சமயம் மெர்சிடிஸ் ஜி.எல்.இ கார் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அதில் 350டி கிடையாது. ஏனெனில், 350டி வேரியண்ட்டின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுவிட்டது.
300டி, 450டி மற்றும் 450 என 3 விதமான வேரியண்ட்களில் ஜி.எல்.இ கார் கிடைக்கிறது. நடிகை கங்கனா வைத்திருக்கும் ஜி.எல்.இ 350டி காரில் 3.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 3400 ஆர்பிஎம்-இல் 255 பிஎச்பி மற்றும் 1600 ஆர்பிஎம்-இல் 620 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஆடி க்யூ3 (Audi Q3): நடிகை கங்கனா ரனாவத்திடம் உள்ள ஆடி கார் க்யூ3 ஆகும். ஆடி நிறுவனத்தின் லக்சரியான எஸ்யூவி ரக காராக க்யூ3 விளங்குகிறது. இது ஒரு காம்பெக்ட்டான கார் ஆகும். அதாவது, மிக பிரம்மாண்ட தோற்றத்தை இந்த கார் கொண்டில்லை. தற்சமயம் இந்த ஆடி எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.44.89 லட்சத்தில் இருந்து ரூ.50.39 லட்சம் வரையில் உள்ளன.
ஆடி க்யூ3 காரில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மேலும், ஆடி நிறுவனத்தின் குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத்திடம் உள்ள சொகுசு கார்களை மட்டுமே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். விலை குறைவான பட்ஜெட் விலை கார்களை எல்லாம் பார்த்தால், லிஸ்ட் இன்னும் நீண்டுக் கொண்டே போகும். எம்பி ஆகியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புக்காகவும், இன்னும் பல விஷயங்களுக்காகவும் கங்கனா இன்னும் பல்வேறு கார்களை புதியதாக வாங்குவார் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









