3கோடி ரூபா காரை வாங்கிய புதுமுக அரசியல்வாதி.. இப்பவே இப்படினா ஜெயிச்சதுக்கு அப்பறம் என்னென்ன வாங்குவாங்களோ!
பிரபல நடிகை ஒருவர் புதுமுக அரசியல்வாதியாக மாறி இருக்கின்றார். கங்கனா ரனாவத்தைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றோம். இவர் பாஜக வேட்பாளராக ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் நிற்கின்றார். தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இந்த நடிகை, வாகனங்களையும் தொடர்ச்சியாக சேகரித்துக் கொண்டிருக்கின்றார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவர் சமீபத்தில் புத்தம் புதிய பென்ஸ் கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். ஏற்கனவே அவரிடத்தில் 5க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே புதிதாக ஓர் பென்ஸ் லக்சூரி காரை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 (Mercedes Maybach GLS600 ) ஆகும்.

இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலையே அவர் சமீபத்தில் டெலிவரி பெற்றிருக்கின்றார். மேலும், அந்த காரில் அவர் வலம் வரவும் தொடங்கிவிட்டார். அவ்வாறு, சமீபத்தில் அவர் அந்த காரில் வலம் வந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே மூன்று கோடியைத் தொடும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இந்திய செல்வந்தர்கள் பலரின் பிரியமான சொகுசு கார் மாடலாக மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், பிரபல நடிகர் ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோன், மலையாள நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. நடிகை நயன்தாராவிற்கு இந்த காரை அவரது கணவர் விக்னேஷ் வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர்களின் வரிசையிலேயே தற்போது கங்கனா ரனாவத்தும் இணைந்திருக்கின்றார். இந்த நடிகையிடத்தில் ஏற்கனவே ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ மற்றும் மேபேக் எஸ்680 போன்ற சொகுசு கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றிலேயே தற்போது புதிய கார் மாடலாக 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600-ஐ அவர் இணைத்திருக்கின்றார்.

மிகுந்த சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடலே இதுவாகும். நட்சத்திர விடுதிகளில் இருப்பதைப் போன்ற மிகவும் சொகுசான இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், சிறிய குளிர்சாதன பெட்டி, பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம், விர்சுவல் அசிஸ்டன்ட், பொழுதுபோக்கு திரை என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அம்சங்களே நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பதைப் போன்ற அனுபவத்தை அந்த காரில் பயணிக்கும் வழங்கச் செய்கின்றன. இத்தகைய அனுபவத்தை வழங்குதனாலேயே இந்த காரை இந்தியர்கள் விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேபேக் ஜிஎல்எஸ்600 ஓர் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் மாடல் ஆகும்.
ஆகையால், இது மைலேஜில் தருவதிலும் சிறந்த விளங்குகின்றது. 557 பிஎஸ் மற்றும் 730 என்எம் டார்க்கை வழங்கக் கூடிய 4.0லிட்டர் வி8 மோட்டாரே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் ஹைபிரிட் சிஸ்டம் 22 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாகவே காரின் அனைத்து வீல்களுக்கும் இயக்க திறன் கடத்தப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கங்கனா ரனாவத் இந்த காரை வாங்கி இருப்பதன் வாயிலாக தன்னுடைய அந்தஸ்தை சமூகத்தில் லேசாக மேம்படுத்தி இருக்கின்றார். அரசியல் களத்தில் குதித்திருக்கின்ற நிலையிலேயே அவர் இந்த செயலை செய்திருக்கின்றார். ஆனால், அவர் எப்போது இந்த காரை வாங்கினார் என்கிற துள்ளியமான நாள் பற்றிய விபரம் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications









