கவர்ச்சியான உடையில் நேர்ல பாத்ததும் ஏர்போர்ட்டே கெறங்கி போயிருச்சு! யாரோ மாதிரி மஹிந்திரா கார்ல வந்தது அவங்களா
இந்தியாவில் முன்பெல்லாம் நடிகர், நடிகைகள் பொதுவாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் (Luxury Cars) பயணிப்பார்கள். அதாவது ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான் நடிகர், நடிகைகளின் முதன்மையான தேர்வாக இருக்கும். ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது. இந்திய நிறுவனங்களின் கார்களை பிரபல நடிகர், நடிகைகள் பலரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தயாரிப்புகள் சமீப காலமாக திரையுலக நட்சத்திரங்கள் பலராலும் வாங்கப்பட்டு வருகின்றன.
மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) மற்றும் மஹிந்திரா தார் (Mahindra Thar) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இந்த 2 கார்களையும் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். இந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனத்தின் புது வரவான எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9E) எலெக்ட்ரிக் காரும் (Electric Car) தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

ஆஸ்கர் (Oscar) விருது வென்ற இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) சமீபத்தில் இந்த காரை வாங்கினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்திய தயாரிப்புகளை பயன்படுத்த தொடங்கியிருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்த சூழலில், மிகவும் பிரபலமான நடிகை ஒருவர், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ஷர்மா (Kangna Sharma) ஆவார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மட்டும் கங்கனா ஷர்மாவை சுமார் 32 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த சூழலில் மிகவும் கவர்ச்சியான உடையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் அவர் விமான நிலையம் ஒன்றுக்கு வந்தபோதுதான் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. யாரோ போல் சாதாரணமாக காரில் இருந்து இறங்கிய கங்கனா ஷர்மாவை அடையாளம் கண்டு கொண்டதும் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கங்கனா ஷர்மா பயன்படுத்திய மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்கிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரேவிடமும் (Ranvir Shorey) மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
நாம் தற்போது பேசி கொண்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார், இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை விரும்பி கொண்டிருப்பதற்கு முதல் காரணம் அதன் அதிநவீன வசதிகள்தான் (Features).
அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், 360 டிகிரி கேமரா, ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவை எல்லாம் இந்த காரின் முக்கியமான வசதிகள் ஆகும்.
அத்துடன் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் வழங்கப்படுகின்றன. வசதிகளுக்கு அடுத்தபடியாக பிரபலங்கள் இந்த காரை விரும்புவதற்கு மற்றொரு காரணம் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) ஆகும். 2.0 லிட்டர் mStallion டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் mHawk டர்போ டீசல் என இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் 14.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 25.14 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கருதப்படுகிறது. எனவேதான் பிரபலங்களுடன் சேர்த்து, இந்திய மக்கள் பலரும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை ஆர்வமாக வாங்கி வருகின்றனர். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இன்னும் முழுமையாக 4 வருடங்கள் கூட முடியவில்லை.
ஆனால் அதற்குள்ளாகவே இந்த காரை 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கி விட்டனர். 2.50 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை வெகு சமீபத்தில்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் கடந்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் டாடா சஃபாரி (Tata Safari), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) போன்ற கார்களுடன், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 700, அதிநவீன வசதிகள், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைப்பதுடன் மட்டுமல்லாது, 5 சீட்டர், 6 சீட்டர், 7 சீட்டர் என 3 வகையான சீட்டிங் ஆப்ஷன்களுடன் (Seating Options) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த காருக்கு சரியான விலை நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








