தயாரிப்பாளர் தலையில் முக்காடு போட்ட நிலையில் 3 கோடி ரூபா காரை வாங்கனது அவரா! வீட்டம்மா கூட ஜாலியா இருக்காரு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார் தற்போதைய நிலையில், 2.60 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 3 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை, பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர் தற்போது வாங்கியுள்ளார்.
அவர் பாபி தியோல் (Bobby Deol) ஆவார். இவர் பாலிவுட் நடிகராக இருந்தாலும் கூட, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நன்கு பிரபலமானவராகவே உள்ளார். இதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது அனிமல் (Animal) திரைப்படம் ஆகும். அத்துடன் சமீபத்தில் வெளியான கங்குவா (Kanguva) திரைப்படத்திலும் பாபி தியோல் நடித்திருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம், ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. எனவே பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஸனில் (Box Office Collection) கங்குவா எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. இந்த சூழலில்தான், பாபி தியோல் புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த காரின் செயல்திறனை பொறுத்தவரையில், மிகவும் சக்தி வாய்ந்த 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 394 ஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. எனவே ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார், ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற கார்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டி விடும் திறனையும் பெற்றுள்ளது. இது செயல்திறன் மிக்க ஒரு காராக இருந்தாலும் கூட, அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளுக்கும் பஞ்சம் இல்லை.
வசதிகளை பொறுத்தவரையில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் கூடிய 13.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியாகி படுதோல்வியை சந்தித்த நிலையில், பாபி தியோல் தனது புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை, கடந்த டிசம்பர் 10ம் தேதி பதிவு செய்துள்ளார். கங்குவா திரைப்படத்தால் அதன் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜாவிற்கு (K.E. Gnanavel Raja) மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பாபி தியோலுக்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் பாபி தியோல் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கியுள்ளது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில் பாபி தியோல் புதிதாக வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காருடன், அவரது மனைவியையும் நம்மால் பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாபி தியோலின் கார் கலெக்ஸன் (Car Collection) ஏற்கனவே பெரியதாகதான் உள்ளது. போர்ஷே கேயென்னே (Porsche Cayenne), லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 (Land Rover Freelander 2) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-class) போன்ற கார்களை எல்லாம் பாபி தியோல் வைத்துள்ளார். இந்த வரிசையில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, அவரது கார் கலெக்ஸனில் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








