இதையெல்லாம் கங்குவா தயாரிப்பாளர் பாத்தா நொந்துருவாரு! அந்த நடிகரும், நடிகையும் செஞ்ச காரியத்தால் அதிர்ச்சி...
இந்திய செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் (Range Rover). இந்த காரின் ஆட்டோபயோகிராபி (Autobiography) வேரியண்ட்டை, திரையுலகை சேர்ந்த பலரும் வைத்துள்ளனர். இதில், ரன்பீர் கபூர்-அலியா பட் (Ranbir Kapoor - Alia Bhatt) தம்பதியினர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்கள் தவிர நடிகைகள் பூஜா ஹெக்டே (Pooja Hegde) மற்றும் சோனம் கபூர் (Sonam Kapoor) ஆகியோரிடமும் கூட, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் உள்ளது. இதில், பூஜா ஹெக்டே நம் அனைவருக்கும் நன்கு பரிட்சயமான ஒரு நடிகை ஆவார்.
நடிகரும், தவெக (TVK) தலைவருமான விஜய்யின் (Vijay) பீஸ்ட் நடித்திருந்த பூஜா ஹெக்டே அடுத்ததாக தளபதி 69 (Thalapathy 69) திரைப்படத்திலும் நடித்து கொண்டுள்ளார். இதுதான் விஜய்யின் கடைசி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு பிறகு, விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.

சரி, விஷயத்திற்கு வருவோம். திரையுலகினர் பலரும் விரும்பி வாங்கி கொண்டுள்ள ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 3 கோடி ரூபாய் ஆகும். சமீபத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த கங்குவா (Kanguva) திரைப்பட நடிகர், நடிகைகள் பலரும் தற்போது தொடர்ச்சியாக இந்த காரை வாங்கி கொண்டுள்ளனர்.
இதற்கு பாபி தியோல் (Bobby Deol) ஒரு உதாரணம். பாபி தியோல், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கியது தொடர்பான செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வாசகர்களுக்கு வழங்கியிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த வரிசையில் கங்குவா திரைப்படத்தில் நடித்த நடிகையான திஷா படானியும் (Disha Patani) தற்போது அதே ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கியுள்ளார். தனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் அவர் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், திஷா படானி தனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதையும் நாம் காணலாம்.
கங்குவா திரைப்படத்தால் அதன் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜாவிற்கு (K.E. Gnanavel Raja) பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக மிகவும் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கி கொண்டுள்ள விஷயம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், திஷா படானி வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் விலை 3.06 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காரின் 'கஸ்டமைசேஷன்' (Customization) செய்யப்பட்டது எனவும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திஷா படானியின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம்.
இந்த காரில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். திஷா படானியை பொறுத்தவரையில், அவர் தீவிரமான கார் காதலர் ஆவார். இதற்கு முன்பாக அவரிடம் ஏற்கனவே 2019 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஹெச்எஸ்இ (2019 Range Rover Sport HSE) கார் ஒன்று உள்ளது.
அத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்450 (Mercedes Benz S450) மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) போன்ற கார்களையும் கூட திஷா படானி வைத்துள்ளார். இந்த வரிசையில் தற்போது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கியிருப்பதன் மூலம், இந்தியாவில் இந்த காரை வைத்துள்ள திரையுலகினரின் பட்டியலில் திஷா படானியும் இணைந்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடந்த சில நாட்களுக்கு முன்பு, திஷா படானி தள்ளாடியபடியே பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் கதவை திறந்த வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்த வரிசையில் தற்போது அவர் வாங்கியுள்ள புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் பயணம் செய்யும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. ஆக மொத்தத்தில் தனது கார்களின் மூலமாக திஷா படானி தொடர்ந்து ஊடக வெளிச்சத்திலேயே இருக்கிறார்.
இதற்கிடையே கங்குவா திரைப்படத்தால் கே.இ. ஞானவேல் ராஜா பல கோடி ரூபாயை இழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த திரைப்படத்திற்காக அதிக சம்பளம் பெற்ற நடிகர், நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்கி வருவது, அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என ரசிகர்கள் பேச தொடங்கியுள்ளனர்.
கங்குவா திரைப்படத்திற்காக பாபி தியோல் 5 கோடி ரூபாயையும், திஷா படானி 3 கோடி ரூபாயையும் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. படத்தின் தோல்வி ஏற்படுத்திய வடு இன்னும் ஆறாத நிலையில், சிறிது காலம் கழித்தாவது அவர்கள் இருவரும் புதிய கார்களை வாங்கியிருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








