பல கோடி மதிப்புள்ள வெளிநாட்டு காரை வாங்கிய பிரபல நடிகர்... யார் என்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...
திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத்தாலியை சேர்ந்த உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று லம்போர்கினி (Lamborghini). மிகவும் விலை உயர்ந்த சூப்பர் கார்களை விற்பனை செய்து வரும் லம்போர்கினி நிறுவனத்திற்கு, இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த லம்போர்கினி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான மாடல்களில் ஒன்று உருஸ் (Lamborghini Urus). இது எஸ்யூவி ( SUV - Sport Utility Vehicle) ரக கார் ஆகும். ஆனால் லம்போர்கினி நிறுவனம் இதனை எஸ்எஸ்யூவி (SSUV - Super Sport Utility Vehicle) என கூறுகிறது.

லம்போர்கினி உருஸ் காரின் விற்பனை உலகம் முழுவதும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்தியாவில் கூட தற்போது வரை 10க்கும் மேற்பட்ட உருஸ் கார்களை லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் லம்போர்கினி நிறுவனத்தின் மற்ற கார்களின் விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது சிறப்பான எண்ணிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட வெறும் 3.6 வினாடிகளையும், மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட வெறும் 12.8 வினாடிகளையும் மட்டுமே லம்போர்கினி உருஸ் எடுத்து கொள்ளும்.

லம்போர்கினி உருஸ் காரின் எடை சுமார் 2.2 டன்கள். இருந்தபோதும் கூட லம்போர்கினி உருஸ் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிலோ மீட்டர்களாக உள்ளது! இதன்மூலம் உலகின் மிக வேகமான இரண்டாவது எஸ்யூவி கார் என்ற பெருமையை லம்போர்கினி உருஸ் பெறுகிறது.

அப்போது உலகின் மிக வேகமான எஸ்யூவி கார் எது? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். தற்போதைய நிலையில் பென்ட்லீ பென்டைகா ஸ்பீட் (Bentley Bentayga Speed) கார்தான், உலகின் மிக வேகமான எஸ்யூவி என்ற பெருமையை தன் கைவசம் வைத்துள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் லம்போர்கினி உருஸ் உள்ளது. இந்தியாவில் செல்வ செழிப்பு மிக்க பிரபல மனிதர்கள் பலர் லம்போர்கினி உருஸ் காரை தொடர்ச்சியாக வாங்கி கொண்டுள்ளனர். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கூட சமீபத்தில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கியிருந்தார்.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நீல நிற லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு, தனது மனைவிக்கு அந்த காரை அவர் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், கன்னட திரையுலகின் மற்றொரு முன்னணி நடிகரான தர்ஷனும் தற்போது லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ளார்.

பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் கூடிய லம்போர்கினி உருஸ் காரை தர்ஷன் வாங்கியுள்ளார். லம்போர்கினி நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான கலர் இதுவாகும். தர்ஷன் வாங்கியுள்ள லம்போர்கினி உருஸ் காரில் கருப்பு நிற அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை இரண்டும் இணைந்து காருக்கு சிறப்பான தோற்றத்தை தருகின்றன. ஆனால் தர்ஷன் வாங்கிய முதல் லம்போர்கினி கார் இதுதான் என நினைத்து விட வேண்டாம். அவரிடம் ஏற்கனவே லம்போர்கினி அவென்டெடார் ரோட்ஸ்டர் (Lamborghini Aventador Roadster) கார் ஒன்று உள்ளது.

லம்போர்கினி அவென்டெடார் ரோட்ஸ்டர் காரை தர்ஷன் கடந்த ஆண்டுதான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே லம்போர்கினி உருஸ் காரின் விலை சுமார் 3 கோடி ரூபாய்.

இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு என்ற வகையில் பார்த்தால், லம்போர்கினி உருஸ் காரின் விலை சுமார் 3.50 கோடி ரூபாயை கடந்து விடும். இதுதவிர லம்போர்கினி நிறுவனம் உருஸ் காரில், கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்தால், லம்போர்கினி உருஸ் காரின் விலை இன்னும் அதிகரித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர நீல நிற ஜாகுவார் எக்ஸ்கேஆர்-எஸ் (Jaguar XKR-S) ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றும் தர்ஷனிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்போர்ட்டியான லுக்கில் உள்ள லம்போர்கினி உருஸ் கார் அதிக செயல்திறனை வெளிப்படுத்த கூடியது. அத்துடன் மிகவும் சௌகரியமானதும் கூட. இதுதவிர 360 டிகிரி சர்ரவுண்ட் வியூ கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் லம்போர்கினி உருஸ் காரில் வழங்கப்படுகின்றன. எனவே கொடுக்கும் பணத்திற்கு வொர்த் ஆன மாடல்தான் இது.

பெர்ஃபார்மென்ஸ், சொகுசு, ஸ்போர்ட்ஸ் லுக் என அனைத்தும் கலந்த மாடலாக இருப்பதே லம்போர்கினி உருஸ் காரை பலரும் தேர்வு செய்ய முக்கிய காரணம். முன்னதாக காவிரி விவகாரத்தில், தமிழக-கர்நாடக மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கன்னட நடிகர்கள் சிலர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களில் தர்ஷனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications








