சொந்த ரசிகரையே 'தீர்த்து' கட்டியவர் இவர் தானா? ஜெயிலில் இருந்து வந்தவருக்காக காத்திருந்த சிறப்பு பூஜை!!

தர்ஷன் (Dharshan), பிரபல கன்னட நடிகர்களுள் ஒருவர். அதேநேரம், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். சமீபத்தில் அதில் ஒருபடி மேலே சென்று தவறாக நடந்துக் கொண்ட தனது ரசிகரையே தர்ஷன் கொடூரமாக கொலை செய்தது அம்பலமானது. அந்த ரசிகர் எவ்வாறு எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷனுக்கு சமீபத்தில்தான் நிபந்தனைகள் உடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஜாமீன் தற்காலிகமானதே. அதாவது, தர்ஷனின் உடல்நல பிரச்சனையை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவுக்கு நீதிமன்றம் 6 வார கால ஜாமீன் வழங்கியுள்ளது. இதன்படி, கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தற்காலிக ஜாமீனில் வெளியே வந்த நடிகர் தர்ஷன் நேராக பெங்களூருக்கு அருகே ஹோசகேரே பகுதியில் உள்ள அவரது மனைவி விஜயலட்சுமி வீட்டிற்கு சென்றார்.

actor darshan celebrates diwali pooja

பின்னர் அடுத்த நாள் அங்கேயே தீபாவளியையும் கொண்டாடி உள்ளார். இதற்காக, பெங்களூர் கேகே நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது விலையுயர்ந்த லக்சரி கார்களை மனைவி வீட்டிற்கு தர்ஷன் கொண்டுவர வைத்துள்ளார். பின்னர், அங்கு கார்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதாவது, ஆயுத பூஜையை தீபாவளி தினத்தில் தர்ஷன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

பூஜை முடித்த பின் தர்ஷனின் லக்சரி கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து வெளியே வரும்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதில், நடிகர் தர்ஷனின் ஜாகுவார் எக்ஸ்.கே (Jaguar XK), ஃபோர்டு மஸ்டங் (Ford Mustang), லம்போர்கினி அவெண்டேடர் எஸ் (Lamborghini Aventador S) மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) உள்ளிட்ட விலையுயர்ந்த கார்களை பார்க்க முடியும்.

actor darshan celebrates diwali pooja

நடிகர் தர்ஷனின் லம்போர்கினி அவெண்டேடர் எஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த லம்போர்கினி கார் ஆகும். ஆனால், தற்சமயம் இந்த கார் நம் நாட்டில் விற்பனையில் இல்லை. அதேபோல், தர்ஷனிடம் உள்ள டொயோட்டா வெல்ஃபையர் காரும் விலைமிக்க டொயோட்டா கார் ஆகும். இதன் விலை ஏறக்குறைய ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடி வரையில் உள்ளது.

டொயோட்டா வெல்ஃபையர் காரில் 7 பேர் வரையில் தாராளமாக செல்லலாம். இதில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்தப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 193 பிஎஸ் மற்றும் 240 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. இந்த ஹைப்ரீட் காரில் இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

actor darshan celebrates diwali pooja

14-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஃபுல்-டிஜிட்டல் தரத்தில் ஓட்டுனருக்கான திரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. தர்ஷனிடம் உள்ள ஃபோர்டு மஸ்டங் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஏறக்குறைய ரூ.75 லட்சமாக இருந்தது. உலகளவில் பிரபலமான இந்த ஃபோர்டு ஸ்போர்ட்ஸ் கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறிய பின்பும் சில காலத்திற்கு மஸ்டங் கார் மட்டும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்டு மஸ்டங்கில் 5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த கன்னட நடிகரிடம் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலைகள் தற்சமயம் ரூ.33 லட்சத்தில் இருந்து ரூ.51 லட்சம் வரையில் உள்ளன. இவை மட்டுமின்றி, நடிகர் தர்ஷனிடம் ஜீப் வ்ராங்க்லர், மினி கூப்பர் கண்ட்ரீமேன், ரேஞ்ச் ரோவர் வோக், போர்ஷே கேயேன்னே உள்ளிட்ட லக்சரி கார்களும் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை விலையுயர்ந்த கார்கள் இருந்தும் அவற்றை சந்தோஷமாக பயன்படுத்த முடியாத நிலையில் நடிகர் தர்ஷன் உள்ளார். அவரது வாழ்க்கையில் இந்த கொலை வழக்கு மறக்க முடியாத அளவுக்கு பெரிய கரும்புள்ளியாக மாறியுள்ளது. இன்னும் சில காலம் கழித்து தர்ஷனின் இந்த சொகுசு கார்களை எல்லாம் அவரது மகன் வினிஷ் பயன்படுத்த ஆரம்பிப்பார்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 2, 2024, 19:53 [IST]
English summary
Kannada actor darshan celebrates diwali pooja with his luxury cars after came by bail
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X