கன்னட நடிகர் தர்ஷன் பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த காஸ்ட்லி கார் கிப்ட்

கன்னட திரையுலகில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் தர்ஷன். இவர் மறைந்த பிரபல வில்லன் நடிகர் சீனிவாசின் மகன் ஆவார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டது. தன்னை அடித்து விட்டதாக அவரது மனைவி விஜயலட்சுமி கொடு்த்த புகாரால் சிறைவாசம் வரை சென்றார் தர்ஷன்.
பின்னர் திரையுலகினரின் சீரிய முயற்சிக்கு பின் கணவன் மனைவி இருவரும் இணைந்தனர். இந்த நிலையில், நடிகர் தர்ஷன் நேற்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது வீட்டில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் தர்ஷன்.
அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை அவரது மனைவி முதலாவதாக வழங்கினார். ஆம், ரூ.1.5 கோடி மதிப்புடைய நீல நிற ஜாகுவார் ஸ்போர்ட்ஸ் காரை அவரது மனைவி தர்ஷனுக்கு பரிசாக வழங்கினார். காரை பரிசாக பெற்ற தர்ஷன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவி்த்தார்.
இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி கூறுகையில், நீண்ட நாட்களாக இந்த காரை வாங்க வேண்டும் என்று அவர் கூறிக்கொண்டிருந்தார். எனவே, அவருக்கு பிடித்தமான இந்த காரை இறக்குமதி செய்து கொடுத்தேன்," என்றார்.
இந்த நிலையில், நடிகர் தர்ஷனிடம் புதிய ஜாகுவார் ஸ்போர்ட்ஸ் கார் தவிர, ஹம்மர், டொயோட்டோ பார்ச்சூனர் மற்றும் ஆடி ஏ8 ஆகிய கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








