கோடியில் புரளும் நடிகருக்கு ரசிகரின் பிறந்த நாள் பரிசு!! விவசாய படத்தில் நடித்தால் இதெல்லாம் போனஸ்!

ரசிகரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசு வழங்கும் நடிகரை பார்த்திருப்போம். ஆனால் கர்நாடகாவில், பிறந்தநாளை கொண்டாடும் நடிகருக்கு ரசிகர் பரிசாக டிராக்டரை வழங்கி சிறப்பித்துள்ளார். பிறந்த நாளை கொண்டாடும் யார் அந்த கன்னட நடிகர் என்பதையும், அவர் பரிசாக வழங்கியுள்ள டிராக்டரை பற்றியும் இனி முழுமையாக பார்க்கலாம்.

கன்னட சினிமாவில் மிகவும் கிண்டலடிக்கப்பட்ட நடிகராக தர்ஷனை சொல்லலாம். தற்போது கொஞ்சம் வயதாகிவிட்ட தர்ஷன் இளமை காலத்தில் நடித்த திரைப்படங்களில் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கும். இருப்பினும், நடிகர் தர்ஷனுக்கு என கர்நாடகாவில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தலைவர், துணை தலைவர் உடன் தர்ஷனின் ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது.

kannada actor darshan gets tractor

சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருவோம். நடிகர் தர்ஷன் தனது 47வது பிறந்தநாளை பெங்களூர் ஆர்.ஆர் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (பிப்ரவரி 16) விமர்சையாக கொண்டாடி வருகிறார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தர்ஷனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ரசிகர்கள் தர்ஷனின் வீட்டின் முன் குவிந்துள்ளனர்.

அதில் ஒரு ரசிகர், நடிகர் தர்ஷனுக்கு பிறந்த நாள் பரிசாக டிராக்டரை வழங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பச்சை நிற துண்டை அணிந்துக் கொண்டு, ரசிகர்களுடன் நடிகர் தர்ஷன் பரிசாக கிடைத்த டிராக்டரை ஓட்டும் புகைப்படங்களும், வீடியோக்களும் கர்நாடகாவில் வைரலாகி வருகின்றன. தர்ஷனின் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டில் காதேரா என்ற படம் திரைக்குவந்து பெரிய வெற்றி பெற்றது.

குறிப்பாக, விவசாயிகள் மத்தியில் காதேரா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏனெனில், காதேரா ஆனது விவசாயத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில், கஷ்டத்தில் சிக்கி தவிக்கும் விவசாயிகளுக்கு துணையாக நிற்கும் கதாபாத்திரத்தில் நடிகர் தர்ஷன் நடித்திருந்தார். இதன் விளைவாக, நிஜ உலகிலும் விவசாயிகள் மத்தியில் தர்ஷனுக்கு ஆதரவு அதிகரிக்க துவங்கியுள்ளது.

இதன் எதிரொலியாகவே, பிறந்த நாள் பரிசாக விவசாய டிராக்டரை தர்ஷனுக்கு ரசிகர் வழங்கியுள்ளார். மேலும், சமீபத்தில் கர்நாடக மாநில ரைதா சங்கம் நடிகர் தர்ஷனுக்கு 'பூமிபுத்ரா' என்கிற பட்டத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது. தர்ஷனுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்டுள்ள டிராக்டரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஏசிஇ நிறுவனத்தின் டிஐ550 ஸ்டார் (DI-550 Star) டிராக்டர் ஆகும்.

kannada actor darshan gets tractor

இந்தியாவில் தற்சமயம் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.70 லட்சத்தில் இருந்து ரூ.7.10 லட்சம் வரையில் இருக்கிறது. இந்த டிராக்டரில் பொருத்தப்படும் 3-சிலிண்டர் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் என்ஜின் அதிகப்பட்சமாக 50 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த டிராக்டரில் முன்னோக்கி செல்ல 8 கியர்களும், ரிவர்ஸில் செல்ல 2 கியர்களும் வழங்கப்படுகின்றன.

இந்த டிராக்டரை அதிகப்பட்சமாக மணிக்கு 34கிமீ வேகத்தில் ஓட்ட முடியும். அதேபோல், ரிவர்ஸிலும் 14.3kmph வேகத்தில் ஓட்ட முடியும். இந்த டிராக்டரில் 1,800 கிலோ வரையிலான பொருட்களை சுமந்து செல்ல முடியும். இந்த டிராக்டரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,140மிமீ ஆக உள்ளது. உலர்வான டிஸ்க் பிரேக் & ஆயில் அமிர்ஸட் பிரேக்குகளை கொண்டிருக்கும் இந்த டிராக்டரில் ட்யூயல் க்ளட்ச் ஆப்ஷனும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகருக்கு ரசிகர் பிறந்த நாள் பரிசை வழங்கியுள்ள சம்பவத்தை இதற்குமுன் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பரிசு வழங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால், தர்ஷனுக்கு நடந்திருப்பது புதுமையானதாக உள்ளது. பரிசை வழங்கிய ரசிகருக்கு பதிலுக்கு நடிகர் தர்ஷன் என்ன வழங்கினார்? அந்த ரசிகரின் பெயரின் என்ன? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, February 16, 2024, 12:59 [IST]
English summary
Kannada actor darshan gets tractor as birthday gift from fan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+