வீட்டிற்கே தேடிவந்த சொகுசு கார்... டெலிவிரி எடுத்தது அந்த பிரபல நடிகரின் மனைவியா!!

ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்கள் குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலமானவை ஆக விளங்குகின்றன. இதன் காரணமாகவே, சினிமா பிரபலங்கள் ரேஞ்ச் ரோவர் காரை புதியதாக வாங்கியதை பற்றி பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், பிரபல நடிகர் ஒருவரின் மனைவி புதியதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார்.

மற்ற ரக கார்களை காட்டிலும், எஸ்யூவி கார்கள் தோற்றத்தில் கம்பீரமானவைகளாகவும், உள்ளே அதிக இடவசதியை கொண்டவைகளாகவும் இருப்பதால், சமீப காலங்களில் எஸ்யூவி கார்களை வாங்க மக்கள் அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர். அதேபோல், விலையுயர்ந்த லக்சரி எஸ்யூவி கார்களும் கடந்த சில வருடங்களில் புதியதாக நிறைய மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

actor darshan wife s range rover

இருப்பினும், அவற்றுள் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்கள் கொஞ்சம் ஸ்பெஷலானவை என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே, இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்களின் விற்பனை எப்போதும் ஏறுமுகமாக உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், ரேஞ்ச் ரோவர் கார்களை குறிப்பாக சினிமா ஸ்டார்களும், அவர்களது குடும்பத்தினரும் அதிகளவில் வாங்குகின்றனர்.

இந்த வரிசையில், பிரபல கன்னட நடிகர் ஒருவரின் மனைவி புதிய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். அந்த பிரபல கன்னட நடிகர் வேறு யாரும் இல்லை, 'ரைசிங் ஸ்டார்' எனப்படும் தர்ஷன் ஆவார். கன்னட நடிகர் தர்ஷனை பற்றி நம் தமிழ் மக்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவரது சண்டைக்காட்சி வீடியோக்களை நம்மில் நிறைய பேர் பார்த்திருப்போம்.

actor darshan wife s range rover

ஓடும் விமானத்தில் ஏறுவது, பின் அதில் இருந்து கீழே குதிப்பது, ஓடும் காரின் மேற்கூரையில் பயணம் செய்வது என நிஜ உலகில் நடக்கவே நடக்காத விஷயங்களை திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்ததற்காக கன்னட நடிகர் தர்ஷன் நம் தமிழ்நாடு உள்பட மற்ற மாநில சினிமா ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் மெட்டீரியலாக பார்க்கப் படுகிறார். ஆனால், கர்நாடகாவில் தர்ஷனுக்கென பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

நடிகர் தர்ஷனிடம் லேண்ட் ரோவர் டிஃபெண்டர், ஜாகுவார், போர்ஷே, ஆடி, மினி, ஹம்மர், லம்போர்கினி, ஃபார்ச்சூனர், ஜீப் மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் லக்சரி கார்கள் உள்ளன. ரேஞ்ச் ரோவர் கார் கூட தர்ஷனிடம் உள்ளது. இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி புதியதாக விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

actor darshan wife s range rover

சமீபத்தில் கணவர் தர்ஷன் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றின் காரணமாக இணையத்தில் வைரலாகி இருந்த விஜயலட்சுமி புதியதாக வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் எவோக் கார் ஆகும். இந்த காரை நடிகர் தர்ஷனின் மனைவி டெலிவிரி பெறும் படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. பிரபல நடிகரின் மனைவியாக இருப்பதினாலேயே, விஜயலட்சுமிக்கும் சிறிய ரசிகர் கூட்டம் உள்ளது.

அவர்கள், புதியதாக விலையுயர்ந்த காரை வாங்கியதற்காக விஜயலட்சுமிக்கு இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் எவோக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.67 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இந்த லக்சரி எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எவோக் ஒரு மைல்ட்-ஹைப்ரீட் கார் ஆகும். அதாவது, இந்த காரில் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேஞ்ச் ரோவர் எவோக் காரை வெளிநாட்டில் மக்கள் நிறைய பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் எவோக் காரை நிறைய பேர் வாங்குவதில்லை என்றாலும், குறைந்த விலையில் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்குவதற்கு எவோக் ஏற்ற மாடல் ஆகும். இத்தகைய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியதற்காகவே சமூக வலைத்தள பக்கங்களில் விஜயலட்சுமி வைரலாகி உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2024, 23:14 [IST]
English summary
Kannada actor darshan wife takes delivery of range rover evoque check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X