பிக்பாஸ் நிகழ்ச்சி பெருசா தூக்கி விட்டுடுச்சு! இந்த பைக் எல்லாம் பல இளைஞர்களுக்கு கனவு!!

சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa), உலகளவில் பிரபலமான சூப்பர் பைக். குறிப்பாக, ஜப்பானில் ஹயபுஸா பைக்கிற்கு மிக பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. அதேபோல், நமது இந்தியாவிலும் ஹயபுஸா பைக்கிற்கு குறிப்பிடத்தக்க ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால், ஒவ்வொரு மாதமும் இந்த பைக்கை கணிசமான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இந்தியாவில் வாங்குகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு நடிகர் சுஸுகி ஹயபுஸா பைக்கை வாங்கியுள்ளார். யார் அவர்? ஹயபுஸா பைக்கில் என்ன மாதிரியான வேரியண்ட்டை வாங்கியுள்ளார் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பொதுவாகவே சினிமா நடிகர், நடிகைகள் அவ்வப்போது விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்குவர் என்பதை பார்த்திருக்கிறோம். குறிப்பாக, பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மாதத்திற்கு ஒரு புதிய வாகனம் என்கிற அளவிற்கு வாங்குவதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது விலையுயர்ந்த சுஸுகி பைக்கை வாங்கியிருப்பவர் பாலிவுட் பிரபலம் கிடையாது; கன்னட நடிகர் ஆவார்.

shamanth bro gowda buys hayabusa

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் வெற்றி வாகை சூடுவார் என்கிற அளவிற்கு எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால், கடைசி வாரத்தில் எலிமினேட் ஆகினார். அவர்தான், பிரபல கன்னட சீரியல் நடிகர் ஷமந்த் ப்ரோ கவுடா (Shamanth Bro Gowda) ஆவார். கன்னட மொழியில் வெற்றிக்கரமாக ஓடிய 'லஷ்மி பாரம்மா' தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் கன்னட மக்களிடையே கவனத்தை பெற்றவர், ஷமந்த் ப்ரோ கவுடா ஆவார்.

அந்த சீரியலில் 'வைஷ்ணவ்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு பலத்தரப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். இதன் மூலமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் கலந்துக் கொண்டவர், கடைசிவரை களத்தில் நின்று மற்ற போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாக விளங்கினார். பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் கடைசி வாரத்தில் வெளியேற்றப்பட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

shamanth bro gowda buys hayabusa

ஷமந்த் ப்ரோ கவுடா, நடிகர் மட்டுமல்ல... சிறந்த பாடகரும் கூட. மற்ற நடிகர், நடிகைகளை போன்று இவருக்கும் கார் & பைக்குகள் என்றாலே கூடுதல் ஆர்வம் ஆகும். சில மாதங்களுக்கு முன் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரை ஷமந்த் ப்ரோ கவுடா வாங்கியிருந்தார். 5 இருக்கைகளை கொண்ட இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.72.90 லட்சமாக உள்ளது.

இந்த நிலையில், இந்த கன்னட நடிகர் புதியதாக விலைமிக்க சுஸுகி ஹயபுஸா பைக்கை வாங்கியுள்ளார். இதனை ரசிகர்களுக்கும், தன்னை பின்தொடர்பவர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், பிராண்ட்-நியூ ஹயபுஸா பைக் மீது அமர்ந்திருக்கும் புகைப்படங்களை ஷமந்த் ப்ரோ கவுடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இந்த இன்ஸ்டா பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் சுஸுகி ஹயபுஸா பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.17 லட்சத்தில் இருந்து ரூ.17.80 லட்சம் வரையில் உள்ளன. மெட்டாலிக் தண்டர் கிரே, கேண்டி டேரிங் ரெட், மெட்டாலிக் மேட் பிளாக் உள்பட பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்களில் சுஸுகி ஹயபுஸா பைக் கிடைக்கிறது. இதில், நடிகர் ஷமந்த் ப்ரோ கவுடா வாங்கியிருப்பது மெட்டாலிக் மேட் பிளாக் நிறத்திலான சுஸுகி ஹயபுஸா பைக்கை ஆகும்.

இந்த சுஸுகி சூப்பர்பைக்கில் 1340சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9700 ஆர்பிஎம்-இல் 190 பிஎஸ் மற்றும் 7000 ஆர்பிஎம்-இல் 150 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 266 கிலோ எடை கொண்ட சுஸுகி ஹயபுஸா பைக்கில் 20 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்படுகிறது.

shamanth bro gowda buys hayabusa

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இளைஞர்கள் பலரது கனவு பைக்காக சுஸுகி ஹயபுஸா விளங்குகிறது. இத்தகைய மோட்டார்சைக்கிளை தான் கன்னட நடிகர் ஷமந்த் ப்ரோ கவுடா வாங்கியுள்ளார். ரூ.17.80 லட்சம் என்பது இந்த சூப்பர்பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். இருப்பினும், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் அளவிற்கு பிரபலமான நடிகருக்கு இது எல்லாம் பெரிய விஷயமாக இருக்காது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 30, 2024, 23:52 [IST]
English summary
Kannada actor shamanth bro gowda buys suzuki hayabusa superbike check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X