2000ஆம் காலக்கட்டத்தின் குழந்தை நட்சத்திர நடிகையா இது? இன்னமும் அப்படியே இருக்காரே!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் செல்வந்தர்கள் பலரது முதன்மையான தேர்வாக உள்ள சொகுசு கார் நிறுவனம் ஆகும். குறிப்பாக, சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் மெர்சிடிஸ் கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையில், பிரபல கன்னட நடிகை ஒருவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் (Mercedes-Benz GLS) காரை வாங்கியுள்ளார். யார் அந்த கன்னட நடிகை என்பதையும், அவர் வாங்கியுள்ள பென்ஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் சொகுசு கார் நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் விளங்குகிறது. அந்த அளவிற்கு மெர்சிடிஸில் இருந்து பல்வேறு விதமான சொகுசு கார்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் ஆகும். இந்த காரை வாங்கியிருக்கும் கன்னட நடிகையின் பெயர் அமுல்யா (Amulya) ஆகும்.

மவுல்யா என்றும் அழைக்கப்படும் அமுல்யா கிட்டத்தட்ட 16 வருடங்களாக சினிமாவில் நடித்த அனுபவமிக்கவர். 2017ஆம் ஆண்டில் ஜெகதீஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பிறகு சினிமா வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கியிருக்கும் அமுல்யா முதன்முதலாக 2002ஆம் ஆண்டில் பார்வா என்கிற கன்னட திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். அதன்பின் வரிசையாக திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.
2007ஆம் ஆண்டு வரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்தவர் 2007இல் செலுவினா சித்தரா என்கிற திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். கடைசியாக இவரது நடிப்பில் 2017இல் முகுலு நாகே என்கிற திரைப்படம் வெளிவந்தது. அதன்பின் சினிமா வாழ்வில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்வில் ஈடுப்பட்டுவரும் அமுல்யா புதியதாக ஒரு பென்ஸ் காரை குடும்பத்துடன் டெலிவிரி பெற்றுள்ளார்.

ஏற்கனவே கூறியதுபோல், நடிகை அமுல்யா வாங்கியிருப்பது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் கார் ஆகும். இந்த காரை ஷோரூமுக்கு கணவர் மற்றும் குழந்தைகள் உள்பட குடும்பத்துடன் சென்று அமுல்யா டெலிவிரி பெற்றுள்ளார். அமுல்யாவின் குடும்பம் வாங்கியிருப்பது வெள்ளை நிறத்திலான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் கார் ஆகும். இது இல்லாமல் அப்சிடியன் கருப்பு, சோடாலைட் ப்ளூ, செலேநைட் சில்வர், ஹை-டெக் சில்வர் என்கிற கலர் ஆப்ஷன்களிலும் ஜிஎல்எஸ் கார் கிடைக்கிறது.
இந்த பென்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.32 கோடி மற்றும் ரூ.1.37 கோடி ஆக உள்ளன. ஆன்-ரோடு விலைகள் ஏறக்குறைய 2 கோடி ரூபாய் வந்துவிடும். இதில், ரூ.1.32 கோடியில் பெட்ரோல் என்ஜின் உடனும், ரூ.1.37 கோடியில் டீசல் என்ஜின் உடனும் ஜிஎல்எஸ் கார் கிடைக்கிறது. இதில், 3.0 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 375 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
மறுப்பக்கம், 3.0 லிட்டர், 6-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 326 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த இரண்டில் எந்த என்ஜினை தேர்வு செய்தாலும், 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். அதேபோல், பெட்ரோல் & டீசல் என 2 என்ஜின் ஆப்ஷன்களிலும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கிடைக்கிறது.
முக்கியமான தொழிற்நுட்ப அம்சங்களாக 12.3-இன்ச்சில் ட்யூயல் ஸ்க்ரீன் (எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கு ஒன்று, ஓட்டுனருக்கான திரைக்கான ஒன்று), 5-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 13-ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் 3டி சவுண்ட் சிஸ்டம், கேபினை சுற்றிலும் விளக்குகள், பவர்டு டெயில்கேட் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுள் ஜிஎல்எஸ் காரும் ஒன்றாகும். இத்தகைய பிரபலமான காரை தான் கன்னட நடிகை அமுல்யா வாங்கியுள்ளார். திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் அமுல்யா இப்போதும் இளமையாக உள்ளார். குடும்பமாக பயணிப்பதற்கு ஜிஎல்எஸ் ஆனது ஏற்ற கார் ஆகும்.


Click it and Unblock the Notifications








