பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒருமுறை தான் போயிட்டு வந்தார்... விலைமிக்க டாடா காரை வாங்கும் அளவுக்கு மாறிட்டாரு!!/
பிக்பாஸ் (Bigg Boss) மூலமாக பிரபலமானவர்கள் பலர். தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிப்பரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி பலரது அடையாளத்தையும், வாழ்க்கையையும் மாற்றி உள்ளது. அவ்வாறு பிக்பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் கவனத்தை பெற்ற சீரியல் நடிகை ஒருவர் புதியதாக விலையுயர்ந்த டாடா (Tata) கார்களுள் ஒன்றை வாங்கியுள்ளார். யார் அந்த பிக்பாஸ் பிரபலம் என்பதையும், அவர் வாங்கியுள்ள டாடா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முழுக்க முழுக்க எல்லா தரப்பு மக்களும் வாங்கக்கூடிய விலை குறைவான கார்களின் மீதுதான் கவனம் செலுத்தி வருகிறது. எலக்ட்ரிக் கார்களின் புரட்சி நிகழ்ந்துவரும் நிலையில், அதன் மூலமாக சற்று விலைமிக்க கார் மார்க்கெட்டில் நுழைய மற்ற கார் நிறுவனங்களை போன்று டாடாவும் திட்டங்களை வைத்துள்ளது.

தற்போதைக்கு விற்பனை செய்யப்படும் விலைமிக்க டாடா கார் என்றால் அது டாடா சஃபாரி (Safari) ஆகும். மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) காரான சஃபாரியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.15.49 லட்சத்தில் இருந்து ரூ.26.79 லட்சம் வரையில் உள்ளன. இதற்கடுத்து விலை குறைவான டாடா கார் என்றால் அது ஹெரியர் (Harrier) ஆகும்.
இந்த டாடா ஹெரியர் காரை தான் பிக்பாஸில் கலந்துக் கொண்ட சீரியல் நடிகை ஒருவர் வாங்கியுள்ளார். அவர் வேறு யாருமில்லை, திவ்யா உருடுகா (Divya Uruduga) ஆவார். இந்த பெயரை கேள்விப்பட்டதுபோல் இல்லையே என நினைக்கிறீர்களா? திவ்யா உருடுகா ஓர் கன்னட நடிகை ஆவார். 'நினாகாகி' (Ninagaagi) என்கிற தொலைக்காட்சி சீரியல் தொடரின் மூலம் பெண்களின் மனதில் இடம்பிடித்த திவ்யா உருடுகா, கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

இதன் மூலம் மாநில அளவில் கவனத்தை பெற்ற இந்த நடிகைக்கு அதன்பின் பெரிய சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதனை பயன்படுத்தி கொண்ட திவ்யா உருடுகா ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்த போதிலும், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை. இருப்பினும், இந்த நடிகையின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்க வேண்டிய விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ டாடா ஹெரியர் காரை திவ்யா உருடுகா டெலிவிரி பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள படங்களில் முற்றிலும் கருப்பு நிறத்திலான ஹெரியர் கார் காட்சியளிக்கிறது. நிச்சயமாக இது ஹெரியர் காரின் டார்க் எடிசன் (Dark Edition) என்பதை உறுதியாக கூறுகிறோம். ஆனால், டார்க் எடிசன்கள் ஹெரியர் காரின் பல்வேறு விதமான வேரியண்ட்களில் கிடைக்கின்றன.

அவற்றுள் எந்த வேரியண்ட்டை நடிகை திவ்யா உருடுகா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25.89 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படும் டாடா ஹெரியர் காரின் ஒரேயொரு குறை என்னவென்றால், பெட்ரோல் என்ஜின் (Petrol Engine) உடன் இந்த கார் விற்பனை செய்யப்படுவதில்லை. 2.0 லிட்டர் க்றையோடெக் டீசல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கு குறிப்பிடப்பட்டு உள்ளவை ஹெரியர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரலாம். சிலர் மட்டுமே டார்க் எடிசன் கார்களை விரும்பி வாங்குவர். ஏனெனில், டாடா லோகோ உள்பட கார் மொத்தமும் கருப்பு நிறத்தில் இருப்பது சிலருக்கு பிடிப்பதில்லை.


Click it and Unblock the Notifications









