ரசிகரின் ராயல் என்பீல்டு பைக்கில் பிரபல நடிகை செய்த காரியம்!! சுற்றி இருந்தவர்களுக்கு செம்ம ஷாக்!
பிரபல கன்னட நடிகை ரச்சிதா ராம், ஆசையாக கேட்டுக் கொண்டதற்காக ரசிகரின் ராயல் என்பீல்டு பைக்கில் ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்து அசத்தியுள்ளார். இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள படங்களை பற்றியும், நடிகை ரச்சிதா ராமின் ரசிகர் வாங்கியுள்ள ராயல் என்பீல்டு பைக்கை பற்றியும் இனி பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு பைக்குகளை யாருக்கு தாங்க பிடிக்காமல் இருக்கும். உள்நாட்டில் உருவாக்கப்படுவதால், இந்தியர்கள் பலரது கனவு பைக் பிராண்டாக ராயல் என்பீல்டு விளங்குகிறது. சென்னையில் தொழிற்சாலையை அமைத்து செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தின் பைக்குகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் பிரபலமானவைகளாக உள்ளன.

குறிப்பாக, இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகளை வீட்டின் ஓர் குடும்ப உறுப்பினராக பார்க்கும் வாடிக்கையாளர்கள் கூட உள்ளனர். கர்நாடகாவில் உள்ள அத்தகையவர்களுள் ஒரு வாடிக்கையாளர் தனது ராயல் என்பீல்டு பைக்கை தனக்கு பிடித்த நடிகை ரச்சிதா ராம் அவர்களிடம் காட்டி வாழ்த்துப் பெற்றுள்ளார். கர்நாடகாவில், சந்தனாவா பகுதியில் உள்ள நடிகை ரச்சிதா ராமின் வீட்டிற்கு பைக்குடன் நேரில் சென்று அந்த நபர் வாழ்த்தை பெற்றுள்ளார்.
நடிகை ரச்சிதா ராமை பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கன்னடா, தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாகிய ரச்சிதா ராம் முதன்முதலாக 2013இல் 'புல்புல்' என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். அதன்பின், கிச்சா சுதீப், புனீத் ராஜ்குமார் போன்ற முன்னணி கன்னட நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழில் 'நந்தினி' என்ற சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த ரச்சிதா ராம் தற்சமயம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ரச்சிதா ராமை சந்தித்து வாழ்த்து பெற்ற ரசிகர் வைத்திருந்தது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் ஆகும். இந்த ரசிகரின் பெயர் அபிமணி. இவரது கிளாசிக் 350 பைக்கின் பெட்ரோல் டேங்கின் மீது ரச்சிதா ராம் தனது கையெழுத்தை கன்னட மொழியில் போட்டுள்ளார். அபிமணியின் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 புதிய மாடல் போன்று தெரிகிறது. அதாவது ஷோரூமில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் தான் டெலிவிரி எடுத்தாற்போன்று பைக் பளபளப்பான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியாவில் பிரபலமான ராயல் என்பீல்டு பைக்காக விளங்கும் இது, சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் முதல் 10 பைக்குகளுள் ஒன்றாக விளங்குகிறது. கடைசியாக கடந்த 2021இல் அப்டேட் செய்யப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட கிளாசிக் 350 பைக்கில் 349சிசி SOHC என்ஜின் பொருத்தப்படுகிறது.

இதே என்ஜின் தான் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிலும் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 19.1 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கிளாசிக் 350 பைக்கில் புதிய அம்சங்களாக கிரவுண்ட் கிளியரென்ஸ் மற்றும் ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக புதிய தலைமுறை புல்லட் 350 பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மீட்டியோர் 350 மற்றும் கிளாசிக் 350 பைக்குகள் இரண்டும் புதிய ஜே-பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் புல்லட் 350 பைக் மட்டும் பழைய பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இதனால் புதிய புல்லட் 350 பைக்கின் அறிமுகம் மூலமாக 3 ராயல் என்பீல்டு 350சிசி பைக்குகளும் ஒரே பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுபவையாக, ஒரே மாதிரியான என்ஜினை கொண்டவையாக வந்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எவரொருவருக்கும் புதியதாக வாங்கிய பைக் அல்லது காரை தனக்கு பிடித்தமானவர்களிடம் காட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அந்த ஆசையிலேயே நடிகை ரச்சிதா ராமிடம் ரசிகர் அபிமணி தனது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை காட்டியுள்ளார் என கருதுகிறோம். ரசிகர்களை பார்க்க சாலைக்கு வரும் பிரபலங்களை காண்பது அரிது. ஆனால் நடிகை ரச்சிதா ராம் எந்தவொரு பாகுபாடும் இன்றி ரசிகரின் பைக்கை அருகில் வந்து பார்த்தது மட்டுமின்றி, தனது ஆட்டோகிராஃபையும் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
