ஆடம்பர காருக்கு இணையான விலையுடைய பைக்கை வாங்கி அசத்திய நடிகை.. கண்டுபிடிக்கவே முடியல.. அந்த நடிகையா இவங்க!!

காருக்கு இணையான மிக உயரிய விலைக் கொண்ட பைக்கை பிரபல நடிகை ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நடிகர் யார்? அவர் வாங்கி இருக்கும் பைக் மாடல் என்ன? அதன் விலை எவ்வளவு? மற்றும் சிறப்பம்சங்கள் என்ன? என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியர்கள் மிக அதிகளவில் சூப்பர் பைக்குகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். சொகுசு மற்றும் பிரீமியம் தர கார்களுக்கு இணையான உயரிய விலைக் கொண்ட அந்த பைக்குகளை வாங்குவது இந்தியாவில் ரொம்ப சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது என்றுகூட கூறலாம். இதற்கு சூப்பர் பைக்குகள் மீது இந்தியர்கள் மத்தியில் மோகம் அதிகரித்திருப்பதே முக்கிய காரணமாக உள்ளது.

Actress daisy bopanna buys ducati monster superbike

இந்த நிலையிலேயே பிரபல நடிகை ஒருவர் மிக மிக விலை உயர்ந்த சூப்பர் பைக்கை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கன்னடா, தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழி படங்களில் கதாநாயகியாக தோன்றியவர் டெய்சி போபண்ணா. இவரே விலை உயர்ந்த பைக்கை வாங்கிய நடிகை ஆவார்.

இவர் டுகாட்டி மான்ஸ்டர் (Ducati Monster) சூப்பர் பைக்கையே வாங்கி இருக்கின்றார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே இவர் நடித்திருக்கின்றார். இன்று முதல் எனும் படத்தில் கீதா எனும் கதாபாத்திரத்திலும், சக்கர வியூகம் எனும் படத்தில் சந்தியா எனும் ரோலிலும் நடித்திருக்கின்றார். இவரின் முன்னணி திரையுலகமாக கன்னடம் இருக்கின்றது.

Ducati monster

ஆனால், தமிழ் திரையுலகம் வாயிலாகவே அவர் திரையுலகிற்கு அறிமுகமாகினார். இந்த நடிகரே தற்போது புத்தம் புதிய டுகாட்டி மான்ஸ்டர் பைக்கை வாங்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் மிரள செய்திருக்கின்றார். இந்த பைக்கிற்கு அவர் செல்லமாக 'ஆனந்தி' எனும் பெயரைச் சூட்டி இருக்கின்றார்.

இந்த பைக் இந்தியாவில் ரூ. 12.94 லட்சம் தொடங்கி ரூ. 15.95 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலையில் செகண்ட் ஹேண்டில் ஓர் சொகுசு காரையே வாங்கிவிட முடியும். ஏன், பிராண்ட் நியூ ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மற்றும் டாடா ஹாரியர் போன்ற கார் மாடல்களைகூட இந்த தொகையில் வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

Daisy bopanna

இத்தகைய மாபெரும் தொகையையே இந்த நடிகை ஒற்றை பைக்கை வாங்க செலவிட்டிருக்கின்றார். இதன் வாயிலாக தான் ஓர் மிகப் பெரிய சூப்பர் பைக் காதலர் என்பதை அவர் நிரூபித்திருக்கின்றார். டுகாட்டி மான்ஸ்டர் பைக்கில் 937 சிசி எல்-ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 93 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. டுகாட்சி மான்ஸ்டர் ஓர் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட சூப்பர் பைக் மாடல் ஆகும்.

Daisy bopanna ducati monster

இதன் ஹெட்லைட் ஒன்றே இதற்கு மிக சிறந்த சான்றாக உள்ளது. குறிப்பாக ஹெட்லைட்டைச் சுற்றிலும் வளையமான அமைப்பில் எல்இடி பகல்நேர லைட் வழங்கப்பட்டு இருப்பது அதற்கு கூடுதல் அழகைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமா இந்த பைக்கின் ஒட்டுமொத்த தோற்றமும் மனதைக் கவரும் வகையிலேயே இருக்கின்றது.

பைக்கின் உருவாக்கத்தில் நிறுவனம் டிரெல்லிஸ் ஃப்ரேமை பயன்படுத்தி இருக்கின்றது. டுகாட்டி பனிகேல் பைக்கை உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அலுமினியம் ஃப்ரேம் மற்றும் அலுமினியம் ஸ்விங்கார்ம் ஆகியவற்றை அப்படியே இந்த பைக்கிலும் நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. மேலும், பைக்கின் சப்-ஃப்ரேமாக கிளாஸ் ஃபைபர் பாலிமர் (glass fiber-reinforced polymer) பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இவை அனைத்தும் சேர்ந்து பைக்கை மேலும் உறுதியானதாக மாற்றிவிட்டது என்றே கூறலாம். இதுதவிர பிரீமமியம் அம்சங்களையும் இந்த பைக்கில் டுகாட்டி வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 43 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் சௌகரியமான ரைடு அனுபவத்திற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங்கிற்காக இரண்டு 320 மிமீ அளவுள்ள டிஸ்க் முன் வீலிலும், 245 மிமீ டிஸ்க் பிரேக் பின் வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல் மற்றும் மூன்று விதமான ரைடிங் (ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன்) மோட்கள் உள்ளிட்டவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்னும் பல நடிகைகள் விலை உயர்ந்த பைக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், குல் பனாக், சோனாக்சி சின்கா, திவ்யங்கா திரிபாதி மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் போன்ற ஏகப்பட்ட நடிகைகள் விலையுயர்ந்த சூப்பர் மற்றும் அட்வென்சர் பைக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2024, 11:48 [IST]
English summary
Kannada and tamil actress daisy bopanna buys ducati monster superbike
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X