ஸ்கூட்டரை கையில வாங்கினதும் சந்தோஷம் தாங்கல.. மொத்த பல்லையும் காமித்து சிரித்த பெண்! குடும்பத்தோட வந்திட்டாங்க
மின்சார வாகனங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல சில திரைப் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் நிகழ்வே தற்போது அரங்கேறி இருக்கின்றது. கன்னட திரை உலகைச் சேர்ந்த நடிகை ஒருவரே எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கி இருக்கின்றார். டப்பிங் ஆர்டிஸ்ட், டிவி சீரியல் நடிகை மற்றும் திரைப்பட நடிகை என பல ரோல்களை கன்னட உலகில் ஆற்றி வரும் நடிகை சுனேத்ரா பண்டிட். இவரே எலெக்ட்ரிக் டூ-வீலரை புதிதாக வாங்கி இருக்கின்றார்.
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தின் புகழ் பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (iQube Electric Scooter) மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இதன் வாயிலாக டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரபலங்கள் மத்தியிலும் பிரபலமடைந்துக் காணப்படுவது தெரிய வந்து இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர் தன்னுடைய குடும்பத்திற்காக வாங்கி இருப்பதாக கூறியிருக்கின்றார். மேலும், அவர் அவருடைய மகள் மற்றும் கணவருடன் சென்றே வாகனத்தை டெலிவரியும் பெற்றிருக்கின்றார். வாகனத்தை வாங்கிய குஷியில் அவருடைய மகள் மொத்த பல்லையும் காண்பிக்கும் வகையில் சிரித்த படம் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
இதன் வாயிலாக மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த வாகனத்தை நடிகையின் குடும்பத்தினர் வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. மிக முக்கியமானதாக அதன் அதிக பிரீமியம் அம்சம் உள்ளது.
அதுமட்டுமல்ல இது அதிக ரேஞ்சை வழங்கக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இருக்கின்றது. இதனாலேயே எலெக்ட்ரிக் டூ-வீலர் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய நிலவரப்படி டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஐக்யூப் (iQube), ஐக்யூப் எஸ் (iQube S) மற்றும் ஐக்யூப் எஸ்டி (iQube ST) ஆகியவையே அவை ஆகும். இதில் ஐக்யூப் வேரியண்டை 2.2 kWh மற்றும் 3.4 kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால், ஐக்யூப் எஸ் தேர்வில் ஒற்றை பேட்டரி பேக் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. 3.4 kWh மட்டுமே அதுவாகும். ஐக்யூப் எஸ்டி வேரியண்டில் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 3.4 kWh மற்றும் 5.1 kWh ஆகியவையே அவை ஆகும்.
இதில் 2.2 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட ஐக்யூப் ஸ்கூட்டர்கள் ஓர் முழு சார்ஜில் 75 கிமீ ரேஞ்சையும், 3.4 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்சையும், 5.1 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 150 கிமீ ரேஞ்சையும் வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரீமியம் அம்சசங்கள் சற்று அதிகம் என்பதால் அதன் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ரூ. 89,999 முதல் ரூ. 1.85 லட்சம் வரையிலான விலையில் அது விற்ககப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. அதிக ரேஞ்ச், அதிக கவர்ச்சியான லுக்கைக் கொண்டிருப்பதாலேயே இதற்கு பொதுமக்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








