ரெண்டே வாரத்தில் பிக்பாஸை விட்டு போனவர் வாங்கியிருக்கும் பிராண்ட்-நியூ கார்! குடும்பம் செம்ம ஹாப்பி!!

பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கன்னட மொழியிலும் நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்க நடத்தப்படுகிறது. இந்த நிலையில், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்தக்கொண்ட பிரபலம் ஒருவர் புதியதாக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) காரை வாங்கியுள்ளார். யார் இந்த பிரபலம் என்பதையும், அவர் வாங்கியுள்ள பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கு அடுத்து அதிக பேரால் வாங்கப்படும் சொகுசு கார் என்றால், அது பிஎம்டபிள்யூ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான பிஎம்டபிள்யூ கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறான பிஎம்டபிள்யூ கஸ்டமர்களுள் ஒருவராக இணைந்திருப்பவர், வழக்கறிஞர் ஜெகதீஸ் மகாதேவ் ஆவார். வக்கீல் சாப் ஜெகதீஸ் என்றே எல்லாரும் இவரை அழைக்கின்றனர்.

lawyer jagadish buys bmw 5-series

விஐபி-களின் பெரிய பெரிய நீதிமன்ற வழக்குகளில் ஆஜாராகுவதன் மூலம் கன்னட மக்கள் மத்தியில் பிரபலமானவராக விளங்கும் வழக்கறிஞர் ஜெகதீஸ் தனது வெளிப்படையான நடத்தையின் மூலமாக பலருக்கு ரோல் மாடலாக உள்ளார். இதன் காரணமாக, சில அரசியல்வாதிகளின் பகையை சம்பாதித்து வைத்துள்ள ஜெகதீஸ், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசனில் போட்டியாளராக நுழைந்தார்.

ஆனால், மற்றொரு போட்டியாளரான ஊடகவியலாளர் சைத்ரா குண்டாபுரா உடன் ஏற்பட்ட கடுமையான மோதலை தொடர்ந்து 2வது வாரமே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். சைத்ரா குண்டாபுரா மட்டுமின்றி இன்னும் சில போட்டியாளர்கள் உடனும் ஜெகதீஸுக்கு சரியான கருத்து உடன்பாடு ஏற்படவில்லை. பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள், பேச்சாளர்கள் போன்று கேமரா பயமில்லாதவர்கள் தான் பங்கேற்பது வழக்கம்.

lawyer jagadish buys bmw 5-series

ஆனால், எந்தவொரு நடிப்பு அனுபவமும் இல்லாத வழக்கறிஞர் ஜெகதீஸ் நுழைந்தது கவனித்தக்க கூடியதாக அமைந்தது மட்டுமின்றி, இதன் மூலமாக கன்னட பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சிக்கும் விளம்பரமாக அமைந்தது. இதன் மூலமாக இவர் பாலிவுட்டில் நுழையும் திட்டத்தையும் வைத்துள்ளார். கர்நாடக ஜனதா தளம் சட்ட பிரிவு தலைவராக பொறுப்பு வகிக்கும் வழக்கறிஞர் ஜெகதீஸ், கர்நாடக மாநில சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

இவ்வாறு பல்வேறு துறைகளில் சாதித்துவரும் ஜெகதீஸ் புதியதாக பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (5-Series) என்கிற விலையுயர்ந்த காரை வாங்கி உள்ளார். குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று வழக்கறிஞர் பிஎம்டபிள்யூ காரை டெலிவிரி பெறும் வீடியோவை வழக்கறிஞர் ஜெகதீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வாங்கியிருப்பது வெள்ளை நிறத்திலான 5-சீரிஸ் கார் ஆகும்.

lawyer jagadish buys bmw 5-series

இந்த வெள்ளை நிறத்தை மினரல் வொயிட் மெட்டாலிக் என பிஎம்டபிள்யூ அழைக்கிறது. இது இல்லாமல், கார்பன் கருப்பு, பைடானிக் ப்ளூ மெட்டாலிக், ஸ்பார்க்லிங் கூப்பர் கிரே உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்சமயம் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72.90 லட்சம் ஆகும்.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான 5-சீரிஸ் கார், லாங் வீல்பேஸ் வெர்சனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, நீளமான லக்சரி செடான் கார், பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் ஆகும். பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் எதுவும் கிடையாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்கு வந்த லேட்டஸ்ட் பிஎம்டபிள்யூ காரை வாங்கியதில் இருந்து வழக்கறிஞர் ஜெகதீஸின் கார்கள் மீதான ஆர்வத்தை அறிய முடிகிறது. மேலே குறிப்பிடப்பட்ட இந்த காரின் விலையான ரூ.72.90 லட்சம் ஆனது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். சென்னை ஆன்-ரோடு விலை இன்னும் ரூ.5 லட்சம் அளவில் அதிகமாக வரும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 9, 2024, 17:11 [IST]
English summary
Kannada bigg boss fame lawyer jagadish takes delivery of bmw 5 series luxury car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X