பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே வரிசைக்கட்டி நிற்கும் கார்கள்!! சரியான ஆளை தான் செலக்ட் பண்றாங்க!

பிக்பாஸ் (Bigg Boss) துவங்கிவிட்டாலே அருமையான பொழுதுப்போக்கு கிடைத்துவிட்டது என நிறைய பேர் குதூகலமாகி விடுவதை பார்க்க முடியும். தமிழில், புதுமையாக நடிகர் விஜய்சேதுபதியின் தொகுத்து வழங்கலில் பிக்பாஸ் விரைவில் துவங்கவுள்ளது. இதற்கு முன்னதாகவே, கன்னடத்தில் பிக்பாஸின் 11வது சீசன் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், இந்த முறையும் பல சினிமா பிரபலங்கள் மற்றும் விஐபிகள் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள ஒருவரது பெயர் கர்நாடகா மாநிலம் முழுக்க கவனத்தை பெற்றுள்ளது. அவரையும், அவரிடம் உள்ள சொகுசு கார்களை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.

வெளிநாடுகளில் வேறு பெயர்களில் நடத்தப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் பல வருடங்களுக்கு முன்பே நுழைந்துவிட்டன. இந்தி மொழியில் கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக பிக்பாஸ் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு பயங்கர ஹிட் ஆன நிலையில் மெல்ல, மெல்ல தென்னிந்திய மொழிகளிலும் அதனை ஒளிப்பரப்ப துவங்கினர்.

gold suresh luxury car collections

அந்த வகையில், கன்னட மொழியில் கடந்த 11 ஆண்டுகளாக பிக்பாஸ் நடத்தப்பட்டு வருகிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கன்னட பிக்பாஸின் 11வது சீசன் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி துவங்கப்பட்டது. இதில் 4வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பவர், கோல்டு சுரேஷ் ஆவார். பெயருக்கேற்ப கோல்டு சுரேஷ் எப்போதும் ஒரு 2 கிலோ தங்கத்தை அணிந்தப்படி உலா வருகிறார்.

கன்னட பிக்பாஸில் ஒவ்வொரு சீசனிலும் இதுபோன்று யாராவது ஒருவர் பங்கேற்கிறார். கடந்த 10வது சீசனில் கூட வர்துர் சந்தோஷ் என்பவர் புலிப்பல் செயின் உள்பட தங்க ஆபரணங்கள் உடன் பங்கேற்றார். கோல்டு சுரேஷை பற்றி சொல்ல வேண்டுமென்றால், கோவாவிற்கு அருகே உள்ள கர்நாடக மாநிலத்தின் முக்கியமான நகரங்களுள் ஒன்றான பெலாகவியை சேர்ந்தவர். வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்கட்டமைப்பு வேலைப்பாடுகளை வழங்கும் தொழிலை கவனித்து வருகிறார்.

gold suresh luxury car collections

இதன் மூலமாக, இலட்சக்கணக்கில் வருவாயை ஈட்டும் கோல்டு சுரேஷ் அதில்தான் தங்க ஆபரணங்களை வாங்கிக் குவித்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், தற்போது வருவாயை ஈட்ட மற்றொரு வழியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கும் கோல்டு சுரேஷ், அவரது இளமை காலத்தில் எல்லாரையும் போல் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் 9- 6 வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அதன்பின் அந்த வேலையை விட்ட கோல்டு சுரேஷ், சொந்தமாக தொழிலை துவங்கி அதில் வெற்றிப் பெற்றும் காட்டியுள்ளார். இவ்வாறு, தனியார் நிறுவன வேலையை விட்டு சொந்த காலில் நின்று ஜெய்த்து காட்டியவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இருப்பினும், அவர்களுள் கோல்டு சுரேஷ் மட்டும் தனித்து தெரிவதற்கு காரணம், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்கள் ஆகும்.

gold suresh luxury car collections

தனது சொகுசான வாழ்க்கையை இன்ஸ்டாகிராமில் பதிவுகள் மூலமாக வெளிக்காட்ட ஆரம்பித்த கோல்டு சுரேஷுக்கு ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னரே சுரேஷ் என இருந்த இவரது பெயர் கோல்டு சுரேஷ் என மாறியது. சொகுசு கார்களை பொறுத்தவரையில், கோல்டு சுரேஷிடம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் வால்வோ எக்ஸ்சி90 என 3 விலையுயர்ந்த கார்கள் தற்சமயம் உள்ளன.

இவை இல்லாமல், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஒன்றையும் இவர் வைத்துள்ளார். இந்த 4 கார்களுடன் இருக்கும் போட்டோக்களை மறக்காமல் கோல்டு சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரிடம் உள்ள 4 கார்களுள் விலையுயர்ந்தது என்றால், அது வால்வோ எக்ஸ்சி90 ஆகும். இந்த வால்வோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 4 கார்களையும் கோல்டு சுரேஷ் வைத்துள்ளார் என கூறப்பட்டாலும், இவை நான்கிற்கும் கோல்டு சுரேஷ் தான் உரிமையாளரா என்கிற சந்தேகமும் இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்பவர்கள் மத்தியில் உள்ளது. தற்போது கன்னட பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதால், வரும் காலங்களில் இதுபோன்று மேலும் பல கார்களை கோல்டு சுரேஷ் வாங்குவார் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2024, 8:00 [IST]
English summary
Kannada bigg boss season 11 contestant gold suresh luxury car collections
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X