காஸ்ட்லீயான பைக்கில் சென்றது இந்த பிக்பாஸ் பிரபலமா? ஆளே அடையாளம் தெரியல!!
பெண்கள் என்றால் ஸ்கூட்டர்களை தான் ஓட்ட வேண்டும் என்கிற காலம் மாறி, தற்போதெல்லாம் பெண்கள் பவர்ஃபுல்லான பைக்குகளையும் ஓட்ட ஆரம்பித்துவிட்டனர். சமீப காலங்களில் பல பெண் பைக் ரைடர்களை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். சில பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் பைக் பந்தயங்களில் ஈடுப்பட்டு வரும் நிலையில், இங்கு ஒரு முன்னாள் பிக்பாஸ் பிரபலம் தனது விருப்பமான யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4) பைக்கை ஜாலியாக பொது வெளியில் ஓட்டி பார்த்துள்ளார். யார் அவர் என்பதையும், அவர் ஓட்டியுள்ள யமஹா பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நம் இந்திய பெண்கள் பைக்குகளை ஓட்டுவதற்கு ஆர்வம் காட்டாததற்கு முக்கிய காரணம், அவர்களது உடையாகும். ஆனால், பெண்கள் தற்போது உடுத்தும் மாடர்ன் உடைகளுள் பெரும்பாலானவை பைக்குகளை ஓட்டுவதற்கு ஏற்ற டிசைனில் வடிவமைக்கப்படுகின்றன. இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், தற்போது யமஹா பைக்கை ஓட்டி பார்த்துள்ள முன்னாள் பிக்பாஸ் பிரபலமும், தான் உடுத்தியிருந்த மாடர்ன் உடையினால்தான் பைக்கை எளிதாக ஓட்டியுள்ளார்.

பிக்பாஸில் கலந்துக் கொள்வதற்கு முன்பே யூடியூப்பில் பிரபலமாகிய இவரது பெயர், சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா. இப்படியொரு பெயரில் எந்தவொரு பிக்பாஸ் போட்டியாளரையும் கேள்விப்பட்டதே கிடையாதே என நீங்கள் நினைப்பது புரிகிறது. இவர் தமிழ் பிக்பாஸில் கலந்துக் கொண்டவர் கிடையாது. கன்னட பிக்பாக்ஸில் கலந்துக் கொண்டவர். பெங்களூரில் பிறந்தவரான சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா, ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ மற்றும் வீடியோக்களுடன் பதிவுகளை பதிவிட ஆரம்பித்தார்.
அவற்றிற்கு லைக்குகள் குவிய ஆரம்பித்தன. டிக்டாக் பிரபலமாக இருந்த சமயத்தில் அதில் இவரும் தனது நடனங்களை வீடியோவாக காட்சிப்படுத்தி பதிவிட துவங்கினர். அதன்பின்னரே, ஓவர் நைட்டில் சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா பிரபலமாக ஆரம்பித்தார். அதன் மூலமாக 2022இல் கன்னட பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவருக்கு, திரைப்பட வாய்ப்புகளும் கதவை தட்ட ஆரம்பித்தன. அதன்படி, 2022ஆம் ஆண்டில் தனது திரைப்பட 'கேட்பெர்ரி'-இல் நடித்தார், சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா.

சரி விஷயத்திற்கு வருவோம். பிக்பாஸ், சினிமா மட்டுமின்றி அவ்வப்போது சில மியுசிக் ஆல்பம் வீடியோக்களிலும் காட்சித்தரும் சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா யமஹா ஆர்15 வி4 பைக்கை ஓட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனு கவுடா வெளியிட்டுள்ளார். இவர் பைக்கை ஓட்டியுள்ளார் என சொல்வதை காட்டிலும், சில அடி தூரத்திற்கு பைக்கை நகர்த்தியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், சாவியை நுழைத்து பைக்கை ஸ்டார்ட் செய்த சோனு கவுடா, மெதுவாக சில அடி தூரத்திற்கு மட்டுமே ஆர்15 பைக்கை ஓட்டுவதை வீடியோவில் காண முடிகிறது. இதில் இருந்து, சோனு கவுடாவுக்கு அவ்வளவாக பைக் ஓட்ட தெரியாது என்பதை அறிய முடிகிறது. இந்த வீடியோவில், கண்ணை கவரக்கூடிய நீல நிறத்திலான யமஹா ஆர்15 வி4 பைக்கை காணலாம்.

இந்த பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இளம் தலைமுறையினர் மிகவும் விரும்பும் பைக்குகளுள் ஒன்றாக உள்ளது. யமஹா ஆர்15 பைக்கின் 4ஆம் தலைமுறை வெர்சன் தான், ஆர்15 வி4 ஆகும். நடிகை சோனு கவுடா ஓட்டியிருக்கும் ஆர்15 வி4 பைக்கின் நீல நிறமானது ரேசிங் நீலம் என அழைக்கப்படுகிறது.
இது இல்லாமல், மெட்டாலிக் சிவப்பு, டார்க் நைட், மோட்டோஜிபி எடிசன் மற்றும் கார்பன் ஃபைபர் எடிசன்களிலும் இந்த யமஹா பைக் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1.84 லட்சத்தில் இருந்து ரூ.2.11 லட்சம் வரையில் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட இந்த பைக்கில் 155சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 18.1 பிஎச்பி மற்றும் 14.2 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா ஆர்15 வி4, மிகவும் அருமையான மோட்டார்சைக்கிள் மற்றும் ஓட்டுவதற்கும் இலகுவான மோட்டார்சைக்கிள் ஆகும். ஆனால், இந்த பைக்கை கூட நடிகை சோனு கவுடாவுக்கு ஓட்ட தெரியவில்லை என்பது ஆச்சிரியமாக உள்ளது. ஏனெனில், ஓர் நடிகை என்றால் பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். திரைப்படத்திற்காக பைக் ஓட்டும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தால், அதற்காக டூப் போடுவது கடினம்.


Click it and Unblock the Notifications









