மனைவி உடன் ஜாலியாக பைக்கில் சென்றவர் இவ்வளவு பெரிய ஆளா? நல்லவேளை யாரும் கண்டுப்பிடிக்கல!!

தருண் சுதிர் (Tharun Sudhir), கர்நாடகாவை சேர்ந்த பிரபலமான திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். பல வெற்றி படங்களை கொடுத்துள்ள தருண் சுதிர் கன்னட சினிமா வட்டாரத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நெருங்கிய நட்புறவில் உள்ளார். இந்த நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு தருண் சுதிர் அவரது விலையுயர்ந்த ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் மனைவி உடன் ஜாலியாக ஒரு ரைடு சென்று வந்துள்ளார். மாலை அணிவிக்கப்பட்ட பைக்கில் தம்பதியர் இருவரும் ஜோடியாக செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆயுத பூஜை என்றால் தான் பலர் தங்களது வாகனங்களை சுத்தம் செய்கின்றனர். நீண்ட மாதங்களாக பயன்படுத்தாத வாகனங்களையும் கழுவி சுத்தம் செய்து, ஒரு சிறிய ரவுண்டாவது சென்றுவந்து வீட்டில் கொண்டுவந்து நிறுத்துகின்றனர். சாதாரணமான மக்கள் மட்டுமின்றி, பெரிய பெரிய விஐபி-கள் கூட இவ்வாறு தங்களது வாகனங்கள் உடன் ஆயுத பூஜையை கொண்டாடுவதை ஒவ்வொரு வருடமும் பார்க்க முடிகிறது.

tharun sudhir rides harley-davidson x440

இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ ஆக கருதப்படும் கர்நாடகாவை சேர்ந்த எம்டிபி நாகராஜ் ரோல்ஸ்-ராய்ஸ், ஃபெராரி, லேண்ட் ரோவர் என தனது விலையுயர்ந்த கார்களை வீட்டின் முன் வரிசையாக நிற்க வைத்து ஆயுத பூஜையை கொண்டாடியதை சமீபத்தில் பார்த்திருந்தோம். அந்த வரிசையில், பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் தனது விலையுயர்ந்த பைக்கில் ஆயுத பூஜையை விமர்சையாக கொண்டாடி உள்ளார்.

கன்னட திரைப்பட இயக்குனர் தருண் சுதிரின் இயக்கத்தில் தற்போதுவரையில் சோவ்கா, ராபர்ட் மற்றும் கடேரா என 3 திரைப்படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளன. ஆனால், இந்த 3 படங்கள் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்ற இயக்குனராக தருண் சுதிர் உலா வந்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, தருண் சுதிரின் முதல் படமாக 2017இல் வெளிவந்த சோவ்கா திரைப்படம் சைமா விருதுகள் மற்றும் தென்னிந்தியாவிற்கான ஃப்லீம்ஃபேர் விருதுகள் நிகழ்ச்சிகளில் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை பெற்றுக் கொடுத்துள்ளது.

tharun sudhir rides harley-davidson x440

சர்ச்சையில் சிக்கியுள்ள கன்னட நடிகர் தர்ஷனை வைத்து கடந்த 2023ஆம் ஆண்டில் தருண் சுதிர் இயக்கிய கடேரா திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. திரைப்படங்களை இயக்குவது மட்டுமில்லாமல், திரைப்படங்களில் நடிப்பதையும் தருண் சுதிர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால், தருண் சுதிரின் சினிமா பயணம் நடிகராகவே துவங்கியது. 12க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள தருண் சுதிர் சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார்.

மேலும் சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். இவ்வாறு பன்முக திறமைகளை கொண்டதன் காரணமாகவே தருண் சுதிருக்கு சினிமா வட்டாரத்தில் நண்பர்களும், ரசிகர்களும் அதிகம். இத்தகைய சினிமா பிரபலம் ஆயுத பூஜை என்றதும் எல்லாவற்றையும் மறந்து சிறு குழந்தை போல் ஜாலியாக தனது விலையுயர்ந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கில் மனைவி சோனல் மோண்டெய்ரோ உடன் ஒரு சிறிய ரைடு சென்றுவந்துள்ளார்.

tharun sudhir rides harley-davidson x440

இந்த ஆயுத பூஜை ஆனது தருண் சுதிரின் வீட்டில் நடக்கவில்லை; அவரது அலுவலகத்தில் நடந்துள்ளது. இருப்பினும், இந்த பூஜையில் தருண் சுதிரின் மனைவி மட்டுமின்றி, அவரது தாயார் மாலதி சுதிரும் கலந்துக் கொண்டார். பூஜை முடிந்த பின், சாஸ்திரத்திற்காக பைக்கில் மனைவி உடன் ஒரு சிறிய ரவுண்ட் சென்று வந்துள்ளார். திரைப்பட இயக்குனர் தருண் சுதிரிடம் இருப்பது விலையுயர்ந்த ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக் ஆகும்.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.2.80 லட்சம் வரையில் உள்ளன. விலைமிக்க பைக்காக இருப்பினும், இந்தியாவில் விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இதுவாகும். மஸ்டர்ட் டெனிம், டார்க் சில்வர், அடர்த்தியான சிவப்பு மற்றும் மேட் கருப்பு என 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த பைக்கில் 440சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்கை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அறிமுகம் செய்தது. எதிர்பார்த்ததை போல், எக்ஸ்440 பைக்கின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகவே உள்ளது. பாமர மக்களால் வாங்க முடியாவிடினும், இயக்குனர் தருண் சுதிர் போன்ற விஐபி-கள் இந்த விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக்கை வாங்குகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 8:00 [IST]
English summary
Kannada director tharun sudhir rides harley davidson x440 with wife check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X