ஜோடியா ஷோரூமுக்கு வந்தாங்க, காரை வாங்கிட்டு போய்ட்டே இருந்தாங்க! இன்ஸ்டாகிராமில் பார்த்து இருப்பீங்க

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து லேட்டஸ்ட் அறிமுகமாக சமீபத்தில் விற்பனைக்கு வந்த வாகனம் தான், தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மஹிந்திரா தார் வாகனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், எதிர்பார்த்ததை போல் அறிமுகத்திற்கு பிறகு தார் ராக்ஸ் வாகனத்தை நிறைய பேர் போட்டி போட்டு வாங்க ஆரம்பித்தனர்; இப்போதும் கஸ்டமர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல யூடியூப் தம்பதி (Youtube Couple) புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளது. யார் அந்த ஜோடி என்பதை பற்றியும், அவர்கள் வாங்கியுள்ள தார் ராக்ஸ் வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இன்றைய கால மாடர்ன் உலகில் எங்கிருந்து யார் இணையத்தில் பிரபலமாகுவார்கள் என்பதையே சொல்ல முடிவதில்லை. தொடர்ச்சியாக ஏதேனும் கருத்துள்ள, நகைச்சுவையான பதிவுகளை பதிவிட்டால் யாராக இருந்தாலும் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெறலாம் என்பதை பலர் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

instagram couple buys mahindra thar

அவ்வாறு, தொடர்ச்சியாக தனது நகைச்சுவையான மற்றும் க்யூட்டான வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு பின்தொடர்பவர்கள் கூட்டத்தை கூட்டியவர், கன்னட இன்ஸ்டாகிராம் பிரபலமான மது கவுடா (Madhugowda) ஆவார். இன்ஸ்டாகிராமில் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை இவர் வெறும் சில நூறு வீடியோக்கள் மூலமாக பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் நண்பர்களுடன் வீடியோக்களை பதிவிட்டு வந்த மது கவுடாவுக்கு திருமணம் நடந்தது. அப்புறம் என்ன... நண்பர்களுடன் செய்ததை கணவருடன் செய்ய ஆரம்பித்தார். இதனாலேயே இந்த இளம் தம்பதியை 'மது கவுடா கபுள்' (Madhugowda Couple) என்றுதான் அழைக்கின்றனர். இவர்கள் தான் தற்போது மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளனர்.

instagram couple buys mahindra thar

தங்களது வாழ்வில் நடக்கும் சிறிய சுவாரஸ்யமான நிகழ்வை கூட வீடியோவாக காட்சிப்படுத்தி பதிவிடுபவர்கள் புதியதாக பிராண்ட்-நியூ தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியதை மட்டுமே வீடியோவாக போடாமலா இருப்பர்? வாகனத்தை டெலிவிரி பெறுவதற்காக என்றே தம்பதி இருவரும் ஒரே மாதிரியாக வெள்ளை நிற உடையில் ஷோரூமுக்கு சென்றுள்ளனர்.

புதியதாக தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியிருப்பது குறித்து மது கவுடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதிய காரின் வாசனை தான் உண்மையான சந்தோஷம்" என பதிவிட்டுள்ளார். தார் ராக்ஸ் வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது 5 கதவுகளுடன் விற்பனை செய்யப்படும் மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் ஆகும்.

instagram couple buys mahindra thar

எம்.எக்ஸ்1, எம்.எக்ஸ்3, எம்.எக்ஸ்5, ஏ.எக்ஸ்3 எல், ஏ.எக்ஸ்5 எல் மற்றும் ஏ.எக்ஸ்7 எல் என 6 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.23.09 லட்சம் வரையில் உள்ளன. பெட்ரோல், டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலைப்பிரதேச பகுதிகளை அதிகம் கொண்ட கேரளாவில் தான் சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் அதிகளவில் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனங்களை வாங்குகின்றனர் என்று பார்த்தால், தற்போது கன்னட யூடியூப் பிரபலங்களும் இந்த மஹிந்திரா ஆஃப்-ரோடு வாகனத்தை வாங்கி உள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Monday, February 24, 2025, 18:57 [IST]
English summary
Kannada famous instagram couple madhu gowda buys mahindra thar roxx
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X