இதுதான் யூடியூபின் பவர்... ஓவர்-நைட்டில் அம்மாவை பெருமைப்படுத்திய இளைஞர்!! பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா?

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் "ஓ நல்லா நீனல்லா கரிமனி மாலிக நீனல்லா" என்கிற பாடலை கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நிச்சயமாக இது தமிழ் பாடல் கிடையாது. மலையாள பாடல் போன்று சிலருக்கு தோன்றலாம்; ஆனால் உண்மையில் இது கன்னட பாடல் ஆகும். பழைய கன்னட திரைப்பட பாடலான இதனை ரீமெக்ஸ் செய்து கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் இளைஞர் ஒருவர் வெளியிட்டார். இணையவாசிகள் மத்தியில் வைரலாகிய அந்த ரீமெக்ஸ் ட்யூனை போட்ட இளைஞர் புதியதாக விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்கை வாங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இருக்கும் ரசிகர்கள் மட்டும் தனி ரகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு எப்படியாவது ஒரு ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பர். அதுமட்டுமின்றி, பெரும்பாலான ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்கள் தங்களது சிறுவயது முதலே ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மீது ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.

instagram celebrity buys himalayan bike

இதற்கேற்ப ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் அவ்வப்போது புது, புது பைக்குகளை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துவிடுகிறது. இந்த வகையில் ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ஹிமாலயன் பைக்கை தான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகும் பிரபலம் புதியதாக வாங்கியுள்ளார். இவரது பெயர், கனகா (Kanaka). இந்த பெயரை நம் தமிழ் மக்கள் நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவர் வட கர்நாடகாவை சேர்ந்தவர்.

சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பாடல்கள் டிரெண்டிங்காக இருப்பது வழக்கம். சில சமயங்களில் பழைய பாடல்கள் கூட மீண்டும் வைரலாகுவது உண்டு. சமீபத்தில் கூட, மறைந்த நடிகர் விஜயகாந்தின் 'பொட்டு வெச்ச தங்க குடம்' பாடல் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலமாக வைரலாகியது. அதேபோல், கன்னட மொழியில் நடிகர் உபேந்திராவின் பழைய பாடல் ஒன்று சமீப காலமாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

instagram celebrity buys himalayan bike

"ஓ நல்லா நீனல்லா கரிமனி மாலிக நீனல்லா" என்கிற அந்த பாடலை இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து பிரபலமான தளங்களிலும் டிரெண்ட் செய்து வருகின்றன. கன்னட மொழி பாடலாக இருப்பினும், நம் தமிழ் மக்களும் அவர்களது இன்ஸ்டாகிராம், யூடியூப் வீடியோக்களில் இந்த பாடலை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், மேலே பார்த்த கனகா என்பவர் ஆகும்.

திரைப்பட ஹீரோ, ஹீரோயினுக்கு இடையேயான காதல் பாடலான இதனை கனகா கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, இன்றைய கால இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் ரீமெக்ஸ் செய்து வெளியிட்டார். மொழியை தாண்டி பாடலின் இசைக்காகவே மாற்று மொழி மக்களும் "ஓ நல்லா நீனல்லா கரிமனி மாலிக நீனல்லா" பாடலை தங்களது வீடியோக்களில் பயன்படுத்தி வருகின்றனர். சிலர், காலர் ட்யூனாக கூட வைத்துள்ளனர்.

instagram celebrity buys himalayan bike

இந்த பாடல் மூலமாக ஓவர்-நைட்டில் பிரபலமாகிய கனகாவை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கனகா புதியதாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கை வாங்கியுள்ளார். தனது தாய் உடன் ஷோரூமுக்கு சென்று ஹிமாலயன் 450 பைக்கை டெலிவிரி பெறும் வீடியோவை கனகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.2.85 லட்சத்தில் இருந்து ரூ.2.98 லட்சம் வரையில் உள்ளன. காஜா பிரவுன், ஸ்லேட் ஹிமாலயன் சால்ட், ஸ்லேட் பப்பி ப்ளூ, காமெட் வொயிட், ஹன்லே பிளாக் என 5 விதமான கலர் ஆப்ஷன்களில் ஹிமாலயன் 450 விற்பனை செய்யப்படுகிறது. இதில், காமெட் வொயிட் நிறத்தில் கனகா இந்த பைக்கை வாங்கியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓவர்-நைட்டில் தனது வாழ்க்கை இந்த அளவிற்கு மாறும் என்று கனகா கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஆனால், இன்று ரூ.3 லட்சம் மதிப்பிலான பைக்கை அம்மா உடன் ஜாலியாக டெலிவிரி பெற்று செல்கிறார். வாழ்க்கையில் ஏதோ ஒரு நேரத்தில் நாம் மேற்கொள்ளும் சிறு முயற்சி கூட நமது வாழ்க்கையை புரட்டி போடும் என்பதற்கு கனகா சிறந்த உதாரணம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 1, 2024, 8:00 [IST]
English summary
Kannada instagram celebrity buys royal enfield himalayan 450 bike check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X