இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர், இன்று விலைமிக்க ஹூண்டாய் காருக்கு ஓனர்! இளம் சீரியல் நடிகையின் அபரித வளர்ச்சி

வாழ்க்கையில் ஒருமுறை ஆவது புதியதாக கார் வாங்கிவிட வேண்டும் என்கிற நம் அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால், இந்த ஆசையை சினிமா துறையில் இருப்பவர்கள் இளம் வயதிலேயே மிக விரைவாகவும், எளிதாகவும் நினைவாக்கி விடுகின்றனர். இதை ஏன் இப்போது கூறுகிறேன் என்றால், இளம் கன்னட சீரியல் நடிகை ஒருவர் விலையுயர்ந்த ஹூண்டாய் காரை புதியதாக வாங்கியுள்ளார்.

தீபிகா தான்யா, கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை. 'குலவத்து' என்ற சீரியல் தொடரில் நடித்ததன் மூலம் கர்நாடகாவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். கன்னட சீரியல் நடிகையாக பெயர் பெற்றாலும், தீபிகா தான்யா பிறந்தது மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வந்ததன் மூலம் ஆரம்பத்தில் இணையத்தில்தான் இவர் பிரபலமாகி உள்ளார்.

kannada serial actress buys verna

இதன் மூலமாகவே குலவத்து கன்னட சீரியலில் முக்கிய கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை தீபிகா தான்யா பெற்றுள்ளார். குலவத்து சீரியல் தொடர் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றதை அடுத்து, 2017இல் நான் மகளே என்ற கன்னட காமெடி திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவ்வாறு கன்னட சினிமா துறையில் பல்வேறு சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களில் பிஸியாக நடித்துவரும் தீபிகா தான்யா சமீபத்தில் புதியதாக ஒரு காரை வாங்கியுள்ளார்.

தீபிகா தான்யா வாங்கியிருப்பது விலைமிக்க ஹூண்டாய் காரான வெர்னா ஆகும். ஹூண்டாயின் பிரீமியம் தரத்திலான செடான் காரான வெர்னாவின் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டை வெள்ளை நிறத்தில் தீபிகா தான்யா வாங்கியுள்ளார். மேலும், ஷோரூமில் இருந்து தனது வெள்ளை நிற வெர்னா காரை டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தீபிகா தான்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

kannada serial actress buys verna

இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "மற்றொரு சுய பரிசி. கனவு நனவானது மற்றும் எனது பெற்றோர்களின் சந்தோஷத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு எப்போதும் பிடித்தது வெர்னா எஸ்.எக்ஸ் ஆப்ஷனல்" என குறிப்பிட்டுள்ளார். தீபிகா தான்யா வாங்கி இருப்பது புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரை ஆகும். மேம்படுத்தப்பட்ட வெர்னா காரை கடந்த மார்ச் 21ஆம் தேதி தான் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.96 லட்சத்தில் இருந்து ரூ.17.38 லட்சம் வரையில் உள்ளன. வெர்னா காரின் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டை வாங்கியுள்ளதாக மட்டுமே தீபிகா தான்யா கூறியுள்ளாரே தவிர்த்து, எந்த என்ஜின் உடன் வாங்கியுள்ளார் என்பதை கூறவில்லை. ஏனெனில், வெர்னா எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என 2 விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

kannada serial actress buys verna

இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 157.8 பிஎச்பி மற்றும் 253 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 114 பிஎச்பி மற்றும் 144 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

இந்த நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஐவிடி கியர்பாக்ஸ் உடன் தேர்வு செய்யலாம். ஹூண்டாய் வெர்னா எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14.66 லட்சத்தில் இருந்து ரூ.17.38 லட்சம் வரையில் உள்ளன. தீபிகா தான்யா வெர்னாவை அட்லாஸ் வெள்ளை நிறத்தில் வாங்கியுள்ளார். ஆனால், அபிஸ் கருப்பு, ஸ்டார்ரி நைட், டைட்டன் கிரே, டெல்லுரியன் பிரவுன், ஃபியரி சிவப்பு, டைபூன் சில்வர் நிறத்திலும் இந்த ஹூண்டாய் செடான் காரை வாங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்ஸ்டாகிராமில் ஹூண்டாய் வெர்னாவின் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) தனக்கு எப்போதும் பிடித்தமான கார் என தீபிகா தான்யா கூறியுள்ளார். வெர்னாவின் இந்த குறிப்பிட்ட வேரியண்ட்டை வாங்குவது தான் அவரது நீண்ட கால ஆசையாக இருந்ததா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஒரு குறிப்பிட்ட கார் பிராண்டின் குறிப்பிட்ட கார் மட்டுமே சிலருக்கு பிடித்திருக்கும். ஆனால், ஒரு காரின் குறிப்பிட்ட வேரியண்ட்டை ஸ்பெஷலாக பிடித்துள்ளது என்றால் நீங்கள் ஆட்டோமொபைல் வாகனங்களை பற்றி நிபுணத்துவம் வாய்ந்தவராகவே இருக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 25, 2023, 15:42 [IST]
English summary
Kannada serial actress deepika dhanya buys hyundai verna
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X