யூடியூப் சேனலில் ஆரம்பித்த வாழ்க்கை! 20 லட்ச ரூபாய் காருடன் நிற்கும் இந்த டிவி பிரபலம் யாரென்று தெரிகிறதா?

கிச்சி கிலிகிலி (Gicchi GiliGili) பிரபலமான கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சி. நம்ம ஊரில் நடப்பதை போன்றதுதான்... நடுவர்கள் இருப்பார்கள், சில போட்டியாளர்கள் தங்களது நகைச்சுவை திறமைகளை காட்டுவார்கள். இந்த கிச்சி கிலிகிலி ரியால்டி ஷோவில் கலந்துக் கொண்டு பிரபலமாகியவர் பிரஷாந்த் கவுடா (Prashanth Gowda). சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களின் கவனத்தை பெற்ற யூடியூபர்களுள் இவரும் ஒருவர். இந்த நிலையில், வாழ்க்கையின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக விலைமிக்க எலக்ட்ரிக் கார் ஒன்றை பிரஷாந்த் கவுடா வாங்கியுள்ளார். அந்த எலக்ட்ரிக் கார் என்ன என்பதை பற்றி தான் இனி பார்க்க போகிறோம்.

நகைச்சுவையை விரும்பாத மனிதர்கள் மிகவும் குறைவே. இதன் காரணமாகவே, மொழி மற்றும் தொலைக்காட்சி சேனல் வேறுப்பட்டாலும் எல்லா ஊர்களிலும் காமெடி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப் படுகின்றன. அவ்வாறு கன்னட மொழியில் வரவேற்பை பெற்ற காமெடி ரியால்டி ஷோ, கிச்சி கிலிகிலி ஆகும். பிரபல கன்னட திரைப்பட காமெடி நடிகர் சது கோகிலா முக்கிய நடுவராக கலந்துக் கொள்கிறார்.

prashanth gowda buys tata curvv

திறமையான நடிகர், நடிகைகள் (பெரும்பாலும் சீரியல் நடிகர், நடிகைகள்) மற்றும் பெரிய திரையில் நடிப்பு அனுபவம் இல்லாத பிரபலங்கள் ஜோடியாக இணைந்து தங்களது நடிப்பு திறமையையும், காமெடி திறமையையும் வெளிக்காட்டும் நிகழ்ச்சியே கிச்சி கிலிகிலி ஆகும். சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்களை சினிமாவில் ஓரளவிற்கு பிரபலமாக இருப்பவர்களுடன் தனித்தனியாக இணைத்து இந்த ரியால்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

குறைந்த மதிப்பெண்களை பெறும் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படும், ஜெய்க்கும் ஜோடி இறுதிச்சுற்று வரை சென்று பட்டத்தை வெல்லும். கிச்சி கிலிகிலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமாகியவர்களுள் ஒருவர் பிரஷாந்த் கவுடா ஆவார். சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையோடு சுற்றி திரிந்துவந்த பிரஷாந்த் கவுடா பின்னர் யூடியூப் சேனலை ஆரம்பித்து வீடியோக்களை பதிவிட துவங்கினார்.

prashanth gowda buys tata curvv

இந்த முயற்சி அவருக்கு கைக்கொடுக்கவே, கர்நாடக மக்கள் மத்தியில் பிரபலமாகினார். இந்த பிரபலம் தான் அவரை கிச்சி கிலிகிலி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வைத்தது. இவ்வாறு யூடியூப் மூலம் தங்களது வாழ்க்கையை தேடிக்கொண்டவர்களுள் ஒருவராக விளங்கும் பிரஷாந்த் கவுடா புதியதாக ஒரு எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இவர் வாங்கியிருப்பது, டாடா கர்வ் இவி (Tata Curvv EV) எலக்ட்ரிக் கார் ஆகும்.

கவர்ச்சிக்கரமான வெள்ளை நிறத்திலான டாடா கர்வ் இவி காரை அதே வெள்ளை நிற ஆடையில் ஷோரூமுக்கு சென்று பிரஷாந்த் கவுடா டெலிவிரி எடுக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. பிரஷாந்த் கவுடா வாங்கியிருக்கும் டாடா கர்வ் இவி காரின் வெள்ளை நிறத்திற்கு பெயர் பிரிஸ்டைன் வெள்ளை ஆகும். இதில் முழுக்க முழுக்க வெள்ளை நிறம் மட்டும் கலந்தில்லை; கருப்பு நிறமும் மிகவும் குறைவான கலந்துள்ளது. காரை தூரத்தில் இருந்து பார்த்தால் கருப்பு நிற ஷேடை காணலாம்.

prashanth gowda buys tata curvv

பிரிஸ்டைன் வெள்ளை நிறத்தில் மட்டுமின்றி, விர்டியுவல் சன்ரைஸ், எரியும் நெருப்பு, ப்யூர் கிரே மற்றும் எம்பவர்டு ஆக்ஸைடு என்கிற கலர் ஆப்ஷன்களிலும் இந்த கார் கிடைக்கிறது. 45kWh மற்றும் 55kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கர்வ் இவி விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டில் எது ஒன்றை வாங்கினாலும், பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக் கொண்டால் அதிகப்பட்சமாக 500கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

கிரியேட்டிவ், அக்கம்ப்ளீஷ்டு, அக்கம்ப்ளீஷ்டு பிளஸ் மற்றும் எம்பவர்டு பிளஸ் என 4 விதமான வேரியண்ட்களில் டாடா கர்வ் இவி விற்பனை செய்யப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்வதிலேயே தற்போதைக்கு விலைமிக்கதாக விளங்கும் கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.49 லட்சம் - ரூ.21.99 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்த பேட்டரி உடன் எந்த வேரியண்ட்டில் பிரஷாந்த் கவுடா இந்த காரை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அது தெரிந்தால்தான் இந்த எலக்ட்ரிக் காருக்காக அவர் செலவு செய்த தொகையை கூற முடியும். எங்களுக்கு தெரிந்தவரையில் குறைந்தது ரூ.20 லட்சம் ஆவது செலவு செய்திருப்பார்.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2024, 15:14 [IST]
English summary
Kannada youtuber gicchi giligili fame prashanth gowda buys tata curvv ev electric car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X