Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 4 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரதமர் அலுவலக உத்தரவு... வாகனங்களில் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்துபவர்களை குறி வைக்கும் காவல் துறை...
வாகனங்களில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்துபவர்களுக்கு எதிராக காவல் துறையினர் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் எக்ஸ்ட்ரா பம்பர் எனப்படும் புல் பார்களை காவல் துறையினர் தீவிரமாக அகற்றி வரும் நிகழ்வு வாகன உரிமையாளர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த ஒரு சில நாட்களாக சமூக வலை தளங்கள் முழுக்க இதைப்பற்றிதான் பலரும் விவாதித்து வருகின்றனர். அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் காவல் துறையினரின் பிடி இறுகியுள்ளது.

எக்ஸ்ட்ரா பம்பர்களை பொருத்துவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும்? என்பதை டிரைவ்ஸ்பார்க் தமிழ் பல செய்திகளில் தெரிவித்துள்ளது. ஏர்பேக் விரிவடையாமல் போகலாம் மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதுதான் எக்ஸ்ட்ரா பம்பர்களின் முக்கியமான பாதகங்கள்.

எனவே எக்ஸ்ட்ரா பம்பர்களை வாகன உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றி விட வேண்டும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அவர்களது வாகனங்களில் இருந்து எக்ஸ்ட்ரா பம்பர்களும் அகற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தை போல் உத்தர பிரதேச காவல் துறை வேறு ஒரு விதிமீறலுக்கு எதிராக நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில், நம்பர் பிளேட்கள் மற்றும் விண்டுஸ்க்ரீன்களில் தாங்கள் சார்ந்த சாதியை, ஸ்டிக்கர்கள் வாயிலாக வெளிப்படுத்துவதை ஏராளமானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். நாடு முழுக்க பலர் இதனை செய்து வந்தாலும், உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த கலாச்சாரம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

மஹாராஷ்டிராவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பினார். இந்த கலாச்சாரம் தடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த புகாரை கவனித்த பிரதமர் அலுவலக அதிகாரிகள், வாகனங்களில் சாதிய அடிப்படையிலான அடையாளங்களை வெளிப்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தர பிரதேச மாநில அரசுக்கு அறிவுறுத்தினர்.

பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து, வாகனங்களில் இத்தகைய ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ள நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தர பிரதேச மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதன் பேரில் காவல் துறையினரும் தற்போது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன்படி தனது எஸ்யூவி காரில் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்திய கான்பூரை சேர்ந்த ஒருவருக்கு காவல் துறையினர் தற்போது அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர். இந்த எஸ்யூவி காரின் பின் பகுதி விண்டுஸ்க்ரீனில் சாதிய அடையாளத்தை வெளிக்காட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த கார் அனில் குமார் என்பவருக்கு சொந்தமானது ஆகும்.

கான்பூரின் பதிவு எண்ணை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. காரில் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்திய காரணத்தால், உரிமையாளருக்கு காவல் துறையினர் 2,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் மற்றொரு சம்பவத்தில், காரில் சாதிய அடிப்படையிலான ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்த அரசு அதிகாரிக்கு காவல் துறையினர் 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.