ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 1/2 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

வீடியோவிற்காக பயணத்தின்போது பைக்கில் நடனமாடிய இளைஞருக்கு அதிரடியாக ரூ.9,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 30 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

லைக்ஸிற்காகவும், வியூஸிற்காகவும் தற்கால இளம் தலைமுறையினர் புதிய புதியதாக ஏகப்பட்ட வேலைகளை செய்கின்றனர். இது பலருக்கு ஓர் போதையாகவே மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதில் சில நிகழ்வுகள் குற்ற சம்பவங்களாகவும் சென்று முடிந்துள்ளதை பார்த்திருக்கிறோம்.

ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 30 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

இதனாலேயே மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்களை செய்து வீடியோ பதிவிடுபவர்களை, அந்த வீடியோவை வைத்தே போலீஸார் தண்டித்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை இதற்குமுன் நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம். இந்த வகையில் சமீபத்தில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் பயணத்தின் போது நடனமாடிய இளைஞருக்கு கான்பூர் போலீஸார் ரூ.9,000-ஐ அபராதமாக விதித்துள்ளனர்.

இதுகுறித்து உத்திர பிரதேச மாநில போலீஸாரின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். இந்த இளைஞரின் பெயர் கலிட் அகமது ஆகும். பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சாலையில், பாடல் ஒன்றிற்கு ஏற்ப பைக்கில் அமர்ந்தவாறே தனது உடலை அசைத்தும், பைக்கில் எழுந்து நின்றவாறும் இவர் பதிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாக துவங்கியது.

ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 30 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

இந்த வீடியோவினை கண்ட போலீஸார் சம்மந்தப்பட்ட இளைஞரை தேடி கண்டுப்பிடித்து அவருக்கு ரூ.9,000-ஐ அபராதமாக விதித்துள்ளனர். இதனை கலிட் அகமதே தனது அடுத்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு இந்த சாலை விதிமுறை தெரியாது எனவும், இதற்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 30 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

மற்ற வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் வாகனம் ஒட்டியது மட்டுமில்லாமல், ஹெல்மெட் அணியாதது, எந்தவொரு முன்அறிவிப்புமின்றி சாலையில் பாதையை மாற்றியது என பல பிரிவுகளில் கலிட் அகமது மீது கான்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவருக்கு மொத்தமாக ரூ.9,000-ஐ அபராதமாக விதித்துள்ளனர். இந்த தொகையினை இணையம் வழியாக கலிட் அகமது செலுத்தியுள்ளார்.

ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 30 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

இந்தியாவில் இவ்வாறு பொது சாலைகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும். ஆதலால் இத்தகைய ரீல் வீடியோக்களை பதிவு செய்ய விரும்புவோர், தங்களது சொந்த இடத்திற்கோ அல்லது தனியாருக்கு சொந்தமான இடங்களுக்கோ செல்வது நல்லது. இருப்பினும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது எந்த இடமாக இருந்தாலும் சரி, அது முட்டாள்தனமானதே.

ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 30 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

பொது இடங்களில் இத்தகைய ஸ்டண்ட்களை செய்வதை முற்றிலுமாக மறந்துவிடுங்கள். ஏனெனில் இப்பொழுதெல்லாம் வீதிக்கோர் சிசிடிவி கேமிராக்கள் உள்ளன. ஆதலால் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் வீடியோ இல்லையென்றாலும், சிசிடிவி வீடியோக்கள் உங்களை காட்டி கொடுத்துவிடும். ஆதலால் எல்லா இடங்களிலும் உஷாராக இருப்பது நல்லது.

ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 1/2 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

அதிலும் குறிப்பாக ராயல் என்பீல்டு பைக்குகளில் இத்தகைய ஸ்டண்ட்களை மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் பொதுவாகவே, ஸ்டண்ட்களுக்கு ஏற்ற தொழிற்நுட்பங்கள் ராயல் என்பீல்டு பைக்குகளில் அதிகளவில் வழங்கப்படுவதில்லை என்கிற கருத்து பரவலாக உள்ளது. இதனால் இவ்வாறான சவாலான பயணங்களில் சிறிய தவறு நடந்தால் கூட அது பெரிய விபத்தில் சென்றுமுடியக்கூடும்.

ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 1/2 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

இந்த சம்பவத்தில் கலிட் அகமது பயன்படுத்தி இருப்பது பழைய கிளாசிக் 350 பைக் போல் தெரிகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தியது. குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் கொண்டுவரப்பட்ட புதிய கிளாசிக் 350-இன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.84 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 1/2 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

பாரம்பரியமான & பழமை வாய்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்டாக விளங்கும் ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 120 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மிக சமீபத்தில் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகளின் சிறப்பு பதிப்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றிற்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

ராயல் என்பீல்டு பைக்கில் நடனமா!! 1/2 நிமிட வீடியோவிற்காக ரூ.9,000ஐ அபராதமாக செலுத்தியுள்ள இளைஞர்!

எந்த அளவிற்கு என்றால், அறிமுகப்படுத்தப்பட்ட வெறும் 120 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த 650 ட்வின்ஸ் பைக்குகளும் விற்று தீர்ந்துள்ளன, அதாவது 2 நிமிடங்களில். உலக வாகன அரங்கமான இஐசிஎம்ஏ-வின் 2021ஆம் ஆண்டிற்கான எடிசன் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய 650 இரட்டை பைக்குகளுக்கு நிலையாக 3 வருட உத்தரவாதத்தை ராயல் என்பீல்டு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kanpur youth riding bullet without helmet challan for rs 9000 details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X