டொயோட்டா காருல வந்தது இவ்ளோ பெரிய நடிகரா! ஒரே படத்துல தமிழ், மலையாளம், தெலுங்குனு பலமொழி மக்கள வளச்சு போட்டவரு

கன்னட திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் ரிஷப் ஷெட்டியும் ஒருவர் ஆவார். இவர் நடிகர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும் கூட. இவரின் எழுத்துக்களில் உருவாகிய ஓர் திரைப்படமே கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியாகிய காந்தாரா. பல்வேறு விருதுகளை வென்ற ஓர் இந்திய திரைப்படமே இது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஒற்றை படத்தின் வாயிலாகவே அவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் உள்ளிட்ட திரை ரசிகர்களையும் தன்பக்கம் அவர் வளைத்து போட்டார். ரிஷப் ஷெட்டி, நடிகர் மற்றும் எழுத்தாளராக மட்டுமல்ல தயாரிப்பாளர் எனும் ரோலையும் ஆற்றி வருகின்றார்.

சமீபத்தில் வெளியாகிய 'லாஃபிங் புத்தா' போன்ற பல முன்னணி படங்களை இவர் தயாரித்துள்ளார். மேலும், சிறந்த நடிகர், சிறந்த எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு விருதுகளை வென்ற நபராகவும் அவர் இருக்கின்றார். இத்தகைய ஓர் நடிகரே டொயோட்டா காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kantara actor rishab shetty acquires luxury toyota vellfire

ஆடம்பர அம்சங்கள் நிரம்பிய வெல்ஃபையர் கார் மாடலையே அவர் வாங்கி உள்ளார். இது ஓர் லக்சூரி அம்சங்கள் நிரம்பிய கப்பல் மாதிரியான எம்பிவி ரக கார் மாடல் ஆகும். பிரமாண்ட தோற்றம் மற்றும் மிக தாராளமான இட வசதி ஆகியவற்றிற்காக இந்த கார் மாடல் அறியப்படுகின்றது.

மேலும், இந்த அம்சங்களுக்காகவே பணக்காரர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாகவும் அது காட்சியளிக்கின்றது. இத்தகைய காரையே தற்போது பிரபல கன்னட பட நடிகர் ரிஷப் ஷெட்டி வாங்கி இருக்கின்றார். அவர் தன்னுடைய ஃபேமிலியுடன் சென்றே இந்த காரை டெலிவரி பெற்றிருக்கின்றார். மனைவி, மகன் மற்றும் பெண் ஆகியோருடன் சென்று டெலிவரி பெறும் படங்களே இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

Actor rishab shetty with family

இதுமட்டுமல்ல இந்த காரில் அவர் பயணிப்பது மாதிரியான வீடியோக்களும் இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கின்றன. இந்தியாவில் டொயோட்டா வெல்ஃபையர் எம்பிவி-யின் ஒரே ஒரு யூனிட்டே ரூ. 1.20 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆன்-ரோடில் இதன் விலை ஒன்றரை கோடி ரூபாக்கும் அதிகமா இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அதீத விலைக்கு ஏற்பவே காரின் தரம் மற்றும் சொகுசு அம்சங்களும் இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நீண்ட தூர பயணங்களைகூட சொகுசானதாக மாற்றும் வசதிக் கொண்ட இருக்கைகள், பெரிய பொழுதுப்போக்கு திரைகள், சிறிய குளிர்சாதன பெட்டி, பெரிய சன்ரூஃப், செல்போன் சார்ஜிங் போர்ட் மற்றும் ஆம்பியன்ட் லைட் உள்ளிட்டவற்றையே இது தன்னுள் தாங்கி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளையும், நவீன யுகத்திற்கு ஏற்ற சொகுசு அம்சங்களையும் இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கும். இதனால்தான் பணக்காரர்கள் பலர் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ரிஷப் ஷெட்டியை போல முன்னணி நடிகர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், நடிகர்கள் விஜய், மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த காரை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் வரிசையிலேயே தற்போது ரிஷப் ஷெட்டி ஒருவராக இணைந்திருக்கின்றார். டொயோட்டாவின் இந்த பிரமாண்ட உருவம் கொண்ட காரில் ஒரே நேரத்தில் 6 முதல் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

Luxury toyota vellfire mpv

7 பேர் பயணித்தாலும் பெரிய அளவில் அசௌகரியம் இந்த காரில் ஏற்படாது. அதேவேளையில், 6 பேர் மட்டுமே பயணித்தால் மிகவும் தாராளமான இட வசதியுடன் பயணிக்கின்ற ஃபீல் இந்த காரில் கிடைக்கும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் சேர்த்து ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் வழங்கி இருக்கின்றனர். இந்த இரண்டும் சேர்ந்து 193 பிஎஸ் மற்றும் 240 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா வெல்ஃபையர் இருக்கின்றது. இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே ரிஷப் ஷெட்டி இந்த காரை கொள்முதல் செய்த சம்பவம் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 15, 2025, 13:15 [IST]
English summary
Kantara actor rishab shetty joins stars in acquiring luxury toyota vellfire
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X