3 கோடி ரூபாய் காரில் வந்தது அவரா? சாலையில் மிதக்கும் கப்பல் என்றுதான் சொல்லணும்
கபில் சர்மா (Kapil Sharma), இந்தியாவிலேயே மிக பிரபலமான தொலைக்காட்சி காமெடி நடிகர்களுள் ஒருவர். நம் தமிழ் மக்களுக்கு இவரை பற்றி தெரியாமல் இருக்கலாம். ஏனெனில், இவர் பாலிவுட் (Bollywood)-ஐ சேர்ந்தவர். மற்ற பாலிவுட் சினிமா நட்சத்திரங்களை போலவே கபில் சர்மாவும் அவ்வப்போது விலையுயர்ந்த கார்களை வாங்கக் கூடியவர். அந்த வகையில், தற்போது புதியதாக ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்றை கபில் சர்மா வாங்கியுள்ளார். அந்த சொகுசு காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பஞ்சாப்பில் பிறந்தவரான கபில் சர்மா 2007ஆம் ஆண்டில் 'தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்' என்கிற காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். அவருக்கு 10 லட்ச ரூபாய் பணத்துடன், பேரும் புகழும் பாலிவுட்டில் கிடைக்கிறது. அதன் மூலமாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்தவர், விரைவாகவே படிப்படியாக வளர ஆரம்பிக்கிறார்.

2010ஆம் ஆண்டிலேயே கபில் சர்மாவை தேடி பாலிவுட் திரைப்பட வாய்ப்பு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என எப்போதும் பிசியாக அழைந்து திரிந்துக் கொண்டிருக்கும் கபில் சர்மா, அதற்கு மத்தியில் தனது ஸ்டேடஸுக்கு ஏற்ப கார்களை மாற்றுவதையும் மறப்பது இல்லை.
அந்த வரிசையில், நடிகர் கபில் சர்மா வாங்கியிருக்கும் லேட்டஸ்ட் கார், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் (Autobiography LWB) ஆகும். இதே ரேஞ்ச் ரோவர் காரில் தான் பிரபல பாலிவுட் நடிகர் எம்ரான் ஹஸ்மி (Emraan Hashmi) சமீபத்தில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்ததை நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.

அதாவது, எம்ரான் ஹஸ்மியும் இந்த காரை சமீபத்தில் புதியதாக வாங்கியுள்ளார். எம்ரானின் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் கார் அலுமினிய கிரே நிறத்தில் இருக்கும் நிலையில், கபில் சர்மாவின் கார் வெள்ளை நிறத்தில் உள்ளது. இந்த வெள்ளை நிறத்தை 'ஃபுஜி வொயிட்' (Fuji White) என லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் அழைக்கிறது.
ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்களை தயாரிக்கும் நிறுவனம் தான், லேண்ட் ரோவர் ஆகும். ரேஞ்ச் ரோவர் கார்களை பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து, இந்தியாவில் ஒன்றாக அசெம்பிள் செய்து விற்பனை செய்வதை கடந்த 1 வருடமாக தான் லேண்ட் ரோவர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கு முன்பு வரையில், மொத்தமாக வெளிநாட்டில் உருவாக்கப்பட்டு முழு காராக கப்பலில் கொண்டுவரப்பட்டது.

இதனால், மத்திய அரசின் இறக்குமதி வரியும் குறைந்ததை அடுத்து, ரேஞ்ச் ரோவர் கார்களின் விலைகள் குறைந்தன. இதன் விளைவாகவே, நடிகர்கள் எம்ரான் ஹஸ்மி, கபில் சர்மா என வரிசையாக ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்கி வருகின்றனர். பளபளக்கும் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் காரில் மும்பையில் ஒரு இடத்திற்கு கபில் சர்மா வந்திறங்கும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எத்தனை சொகுசு கார்களை வைத்திருந்தாலும், ரேஞ்ச் ரோவர் கார்கள் என்றாலே தனி கெத்து தான். அந்த அளவிற்கு கம்பீரமான உடலமைப்பை கொண்ட இந்த காரை வாங்கியிருக்கும் காமெடி நடிகர் கபில் சர்மா இதற்காக நிச்சயம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருப்பார்.


Click it and Unblock the Notifications









