போர்ஷே பனமிரா டீசல் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய கபில்தேவ்!

உலகக் கோப்பையை வென்று தந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு முதல் பனமிரா டீசல் மாடலை போர்ஷே டெலிவிரி கொடுத்துள்ளது. அதிக மைலேஜ் கொடுக்கும் ஸ்போர்ட்ஸ் கார் என கூறப்படும் இந்த காரின் சாவியை கபில்தேவிடம் போர்ஷே இந்தியா இயக்குனர் அனில் ரெட்டி நேற்று வழங்கினார்.

பனமிராவுடன் நான்..!!

பனமிராவுடன் நான்..!!

காரை டெலிவிரி பெற்றபின் போஸ் கொடுக்கும் கபில்

அட்டகாசமான உட்புறம்

அட்டகாசமான உட்புறம்

ஆடம்பர அம்சங்கள் மற்றும் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது போர்ஷே பனமிரா.

டெலிவிரி பெறும்போது.!!

டெலிவிரி பெறும்போது.!!

போர்ஷே இந்தியா இயக்குனர் அனில் ரெட்டியிடம் இருந்து காரின் சாவியை பெற்றுக் கொள்ளும் கபில்

போர்ஷே பனமிரா

போர்ஷே பனமிரா

3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு 245 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

ஸ்போர்ட்ஸ் கார்களில் மைலேஜ் எதிர்பார்க்க முடியாது என்று கூறும் வேளையில், 80 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த காரின் டேங்கில் ஒரு முறை டீசல் நிரப்பினால் 1,200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்கிறது போர்ஷே.

இன்டிரியர்

இன்டிரியர்

அசத்தலான இன்டிரியர்

பொழுதுபோக்கு வசதி

பொழுதுபோக்கு வசதி

பின் இருக்கை பயணிகளுக்கான பொழுதுபோக்கு வசதி

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

சென்ட்ரல் கன்சோல் இறக்கத்தில் அசத்தும் கியர் லிவர்

காரை டெலிவிரி பெற்றவுடன் கபில்தேவ் கூறியதாவது," மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறேன். ஸ்போர்ட்டி லுக், சொகுசு வசதிகள் மற்றும் பெஃபார்மென்ஸ் ஆகியவை ஒருங்கே கொண்ட கார்தான் போர்ஷே பனமிரா. இனி இந்த காரைத்தான் எனது தினசரி பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ள இருக்கிறேன்," என்றார்.

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரில் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6.8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சம் ஒன்று உள்ளது. அதாவது, ஒரு முறை எரிபொருள் முழுவதுமாக நிரப்பினால் 1,200 கிமீ செல்லும் என போர்ஷே தெரிவிக்கிறது. அதிக மைலேஜ் தரும் டீசல் ஸ்போர்ட்ஸ் கார் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 20, 2012, 12:05 [IST]
English summary
German based luxury carmaker Porsche India has the first-ever Panamera Diesel in the country to Cricket World Cup-winning former India captain and fast bowler Kapil Dev. Porsche India Director Anil Reddi handed over the car keys to Kapil on Friday.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+