ரயில்ல போறவங்களுக்கு எல்லாம் இந்த இடத்தை மறக்கவே முடியாது! எந்த இடம் தெரியுமா?
தென்னக ரயில்வே நிர்வாகம் தென் தமிழகத்தின் முக்கியமான பகுதியில் ரயில் பாதை வழியாக ரயில் பயணிக்கும் காட்சியை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த இடம் தமிழகத்தில் எந்த பகுதியில் உள்ளது? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் காணலாம் வாருங்கள்.
தமிழகத்தில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இன்று இலட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ரயில் தான் குறைந்த விலையில் நீண்ட தூரம் பயணிக்க ஏற்ற போக்குவரத்து வசதியாக இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் போக்குவரத்து முழுமையாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வப்போது ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளில் உள்ள கட்டுமான வசதிகள் மற்றும் அதன் அழகை தென்னக ரயில்வே நிர்வாகம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு மக்களின் ஆதரவையும் நம்பிக்கையும் பெற்று வருகிறார்கள். இப்படியாக கடந்த வாரம் தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் ஒரு ட்ரோன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.
பொதுவாக இந்தியாவின் மிக முக்கியமான போக்குவரத்து வசதிகளாக ரயிலும் தேசிய நெடுஞ்சாலைகளும் பார்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் தான் இந்தியாவில் ஒரு நபர் விட்டு இன்னொரு நகருக்கு சாலை வழியாக பயணிக்க ஏற்ற வசதியாக இருக்கிறது. அதேநேரம் அதிக எடைகளை கொண்டு பயணிப்பதற்கு ரயில் வசதியாக இருக்கிறது. பொதுவாக ரயில் பாதை அருகே தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பது அரிதான விஷயமாக இருக்கும்.

பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கப்பட்ட ஊர்களில் அதற்கு இணையாகவே ரயில் பாதைகள் அமைக்கப்பட சாத்தியக்கூறுகள் இல்லாத சூழ்நிலை தான் நிலவும். ஆனால் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதியில் இப்படியான ஒரு சாலை இருக்கிறது. இதை தென்னக ரயில்வே நிர்வாகம் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து தனது எக்ஸல பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதன்படி மதுரை மாவட்டம், கப்பலூர் என்ற பகுதியில் தான் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே ரயில் பாதையும் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த வீடியோவில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அருகே ரயில் ஒன்று கடந்து வரும்போது ட்ரோன் மூலம் அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர் பார்ப்பதற்கு ரம்யமான காட்சியாக இருக்கிறது.

இந்த வீடியோவை பதிவிட்ட தென்னக ரயில்வே நிர்வாகம் இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற தகவலை வெளியிடவில்லை. அதற்கு பதிலாக இந்த வீடியோவில் உள்ள ரயில் கடந்து செல்லும் பாலத்தின் நம்பரை மட்டும் பதிவு செய்துள்ளது. இதனால் பலர் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.
தென் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் இது மதுரை மாவட்டம் கப்பலூர் என்ற பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியும் பலர் இந்த இடத்தை கடந்து சென்று இருப்பார்கள். இந்த இடத்தில் சுங்கச்சாவடி அமைந்திருப்பதால் பலருக்கும் இந்த இடத்தை மறக்க முடியாது மதுரையை கடந்து தென் தமிழகத்திற்கு வருவதற்கு இது ஒரு முக்கியமான பாதையாக பார்க்கப்படுகிறது.
குறிப்பிட இந்த ரயில் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயில் பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த ரயிலை பின்பற்றி இந்த வீடியோ எடுக்கப்பட்ட காட்சி பார்க்கும் போது இந்த ரயில் ஒரு பாலத்திற்கு கீழே கடந்து செல்கிறது. அந்தப் பாலம் தான் கப்பலூரிலிருந்து மாட்டுத்தாவணிக்கு செல்லும் பாதையாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னக ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது தமிழகத்தில் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில் வசதிகளை வழங்கி வருவது மட்டுமல்லாமல் தொடர்ந்து அதை பராமரித்தும் மேம்படுத்தியும் வருகிறது. தென்னக ரயில்வே இன்னும் தென் தமிழகத்திற்கு அதிகமான ரயில்களை அறிமுகப்படுத்தினால் அந்த ரயில்களும் மக்களுக்கு பயன்படும்


Click it and Unblock the Notifications









