50 வயதிலும் மனுஷன் ஸ்டைலாக இருக்காரே... காரின் விலையை கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும்!!
கரண் ஜோகர் (Karan Johar), பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். இந்திய சினிமா வட்டாரத்தில் பலருடன் நட்புறவில் இருப்பவர். இவர் தொகுத்து வழங்கிய காஃபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பிரபலமானது என்றுதான் சொல்ல வேண்டும். இவர் புதியதாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ஏறக்குறைய ரூ.3 கோடி என கூறப்படுகிறது. கரண் ஜோகர் அப்படி என்ன மாதிரியான காரை வாங்கியுள்ளார் என்பதையும், அதன் சிறப்பம்சங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளவில் மெர்சிடிஸ் கார்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. இந்தியாவில் சொகுசு கார்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் நிறுவனமாக மெர்சிடிஸ் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனத்தில் கார்கள் மொத்தம் 3 விதமாக உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பென்ஸ், ஏஎம்ஜி மற்றும் மேபக் என்பன அவை ஆகும்.

இதில் மேபக் ஆனது அல்ட்ரா லக்சரி கார்களை கொண்டதாக விளங்குகிறது. மெர்சிடிஸ்-மேபக் கார்களின் விலை அதிகம். அதற்கேற்ப அவை மிகவும் சொகுசு வசதிகள் உடன் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய மெர்சிடிஸ்-மேபக் கார்களுள் ஒன்றை தான் தற்போது பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் வாங்கியுள்ளார். இவர் வாங்கியிருப்பது, மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 கார் ஆகும்.
இது ஒரு செடான் ரக கார் ஆகும். மேலும், இது ஒரு மைல்ட் ஹைப்ரீட் கார் ஆகும். அதாவது, பெட்ரோல் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இந்த காரில் பொருத்தப்படுகிறது. பெட்ரோல் இல்லாமல், வெறும் எலக்ட்ரிக் மோட்டாரின் ஆற்றலின் மூலமாகவும் சில கிமீ தொலைவிற்கு இந்த காரை ஓட்டி செல்ல முடியும். மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.72 கோடியாக உள்ளது.

ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால், காரின் ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.3 கோடியை தாண்டிவிடும். இந்த காரை கரண் ஜோஹர் டெலிவிரி எடுக்கும்போது எடுக்கப்பட்ட படங்கள்/ வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில், மும்பை விமான நிலையத்திற்கு இந்த காரில் கரண் ஜோஹர் வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காரை கரண் ஜோஹர் ஓட்டவில்லை; அவர் பின் இருக்கையில் இருந்து வெளியே வருவதை வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோவில், மேபக் எஸ்580 கார் பளபளப்பான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதனால், இந்த காரை சமீபத்தில்தான் கரண் ஜோஹர் வாங்கியிருக்க வேண்டும். காரின் உட்புறம் பிரவுன் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பின் இருக்கை பயணிகளுக்கான பொழுதுப்போக்கு திரைகள் மற்றும் மற்ற பிரீமியம் தரத்திலான அம்சங்கள் காரில் இடம்பெற்றுள்ளன.

மேபக் எஸ்580 காரின் டேஸ்போர்டு, இருக்கைகள் பிரீமியம் தரத்திலான மெட்டீரியல்களால் உருவாக்கப்படுகின்றன. இந்த காரில் இருக்கைகள் வெண்டிலேட்டட் அம்சத்துடன் மசாஜ் ஃபங்க்ஷன் உடன் வழங்கப்படுகின்றன. இவற்றுடன், சன்ரூஃப் உள்ளது. எஸ்580 காரில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 மைல்ட்-ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 496 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் மூலமாக என்ஜின் ஆற்றல் காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த காரில் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காரை பாலிவுட் சினிமா வட்டாரத்தில் நடிகர்கள் அனில் கபூர், ஷாகித் கபூர், நடிகைகள் கங்கனா ரனாவத், கியாரா அத்வானி மற்றும் வித்யா பாலன் உள்ளிட்டோர் வைத்துள்ளனர். இந்த மேபக் காரை விட மேபக் ஜி.எல்.எஸ்600 கார் பாலிவுட் திரைப்பட நடிகர், நடிகைகள் இடையே மிக பிரபலமாக உள்ளது. முதல் பேட்ஜ் ஜி.எல்.எஸ்600 கார்கள் அறிமுகத்திற்கு முன்பாகவே அனைத்தும் புக் ஆகிவிட்டன.


Click it and Unblock the Notifications









