பணத்த கட்டு கட்டா வச்சிருப்பாங்க போல! மாசத்துக்கு ஒன்னுனு வாங்கி போடுறாங்க.. 1.2 கோடி ரூபா காரை வாங்கிய நடிகை!
கரீனா கபூரா இது? இவங்க இவ்ளோ விலை உயர்ந்த காரையா வாங்கி இருக்காங்க. அப்படி என்ன காருங்க அது? இந்த காரின் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய தகவலைக் காணலாம், வாங்க.
புது வாகனத்தை வாங்கவே முடியாதவர்கள் இருக்கக் கூடிய நமது இந்திய நாட்டிலேயே மாதத்திற்கு ஒரு புதிய காரை, அதுவும், மிக மிக விலை உயர்ந்த காரை வாங்கக் கூடியவர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெரும் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி போன்றவர்கள் மட்டுமே புதிய வாகனங்களை அடிக்கடி வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார் என நம்மில் ஒரு சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

ஆனால், அதுதான் இல்லை, கோடியில் புரளும் இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரங்களும் மிக விலையுயர்ந்த காரை அடிக்கடி வாங்கக் கூடியவர்களாகக் காட்சியளிக்கின்றனர். அந்தவகையில், வெகு குறைவான நாட்களில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புதிய சொகுசு காரை பிரபல நடிகை ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் யார்? என்ன கார் மாடலை வாங்கி உள்ளார்? அதன் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்களைக் காணலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரங்களில் ஒருவராக கரீன கபூர் இருக்கின்றார். இவரே ஒன்றரை கோடி ரூபாயைக் கொடுத்து புதிய ஆடம்பர காரை வாங்கியவர் ஆவார். நடிகையின் புதிய கார் கொள்முதலை உறுதிப்படுத்தும் விதமாக, அவருடைய இல்லத்தில் அந்த புதிய சொகுசு கார் நிற்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

லேண்ட் ரோவர் டிஃபெணட்ர் சொகுசு காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே 1.2 கோடி ரூபாய் என கூறப்படுகின்றது. ஆன்-ரோடில் எப்படியும் இதன் விலை ரூ. 1.5 கோடிக்கும் அதிகமாகவே இருக்கும். ஒருவேளை இந்த காரை கூடுதல் சிறப்பு வசதிக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக கஸ்டமைசேஷன் வாயிலாக சிறப்பம்சங்களைச் சேர்த்தால் அதன் விலை இன்னும் பலமடங்கு அதிகமாகவே இருக்கும்.
இத்தகைய ஓர் அதீத விலைக் கொண்ட காரையே பாலிவுட்டின் முன்னணி நடிகை தற்போது வாங்கி இருக்கின்றார். வெள்ளை நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரையே அவர்கள் வாங்கி இருக்கின்றனர். மேலும், பன்முக வேரியண்டுகளில் இந்த கார் தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
வெவ்வேறு வசதிகளை விரும்புவோர் இந்தியர்கள் என்பதால் இத்தகைய தேர்வுகளை அது வழங்கிக் கொண்டிருக்கின்றது. டிஃபெண்டர் 90, டிஃபெண்டர் 110 மற்றும் டிஃபெண்டர் 130 ஆகியவை அவை ஆகும். இதில் டிஃபெண்டர் 130 லேட்டஸ்ட் மாடலாக இருக்கின்றது. இது ஓர் 5 டூர் வெர்ஷன் ஆகும்.
சொகுசான ரைடை மட்டுமல்ல சுலபமாக ஏறி-இறங்குதல் உள்ளிட்டவற்றிற்கு ஏதுவானதாக இந்த வெர்ஷன் இருக்கும். மேலும், ஏழு பேர் வரை இந்த காரில் பயணிக்க முடியும். இத்தகைய காரை இந்த பிரபல நடிகை மட்டுமில்லைங்க, சமீபத்தில் பிரபல சாமியாரும், பதாஞ்சலி குழுமத்தின் நிறுவனருமான பாபா ராம்தேவ் இந்தியாவில் வாங்கி இருக்கின்றார்.
இவர் மட்டுமில்லைங்க சமீபத்தில் ஃபஹத் ஃபாஸில்-நஸ்ரியா நஸிம் ஜோடிகளும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த காரை அதிக சொகுசு வசதிகள் கொண்டதாக மட்டுமல்ல, நிறைய எஞ்ஜின் தேர்வுகளையும் வழங்குகின்றது. இரண்டு பெட்ரோல் மற்றும் ஓர் டீசல் எஞ்ஜின் தேர்வை வழங்குகின்றது.
2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டார் மற்றும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் மோட்டார் ஆகிய தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படுகின்றன. எஞ்ஜினைப் போலவே பன்முக கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றது.
இதுபோன்ற ஏகப்பட்ட எஞ்ஜின் ஆப்ஷனையும், அம்சங்களையும் இந்த காரில் வழங்குகின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் பலரின் விருப்பமான கார் மாடலாக டிஃபெண்டர் இருக்கின்றது. இந்த காரை மம்மூட்டி, ஆசிஃப் அலி, அர்ஜூன் கபூர், சன்னி தியோல், ஆயுஷ் ஷர்மா, ரவி தேஜா மற்றும் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களைப் போலவே முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் மற்றும் முகேஷ் அம்பானி உள்ளிட்டோரும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பரான சொகுசு கார்களில் லேண்ட் ரோவர் டிஃபெண்டரும் ஒன்றாகும். இந்த காரில் பயணிக்கும்போது சாலையில் பயணிக்கின்ற உணர்வே இருக்காது. அதற்கு பதிலாக தண்ணீரில் மிதக்கின்ற உணர்வே கிடைக்கும். இதனால்தான் பலர் இந்த சொகுசு காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications