2 கோடி ரூபாய் சொகுசு காரில் வந்து இறங்கிய தேவதை! கொஞ்சம் நல்லா உத்து பாருங்க! அட அவங்களா இது!
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர் (Kareena Kapoor). இவரது 'ஜானே ஜான்' (Jaane Jaan) என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா (Trailer Launch) சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-350டி (Mercedes-Benz S-350d) காரில், கரீனா கபூர் வந்தார். இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வீடியோ (Video) தற்போது பதிவேற்றப்பட்டுள்ளது.

வெள்ளை நிற மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-350டி காரில் கரீனா கபூர் வந்து இறங்குவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் கரீனா கபூர் இந்த காரை வாங்கினார். இதன் ஆன் ரோடு விலை (Price) சுமார் 2 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 282 பிஹெச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு இந்த கார் வெறும் 6 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் லேன் அஸிஸ்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் எல்லாம் இந்த காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.
கரீனா கபூர் தவிர, ஷாருக்கான் (Shah Rukh Khan), ஆயுஷ்மான் குர்ரானா (Ayushmann Khurrana) போன்ற பிரபலங்களும், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை சொந்தமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள கரீனா கபூரின் வீடியோவில், மற்றொரு காரையும் நம்மால் பார்க்க முடிகிறது.
அது ஜீப் காம்பஸ் (Jeep Compass) கார் ஆகும். 'ஜானே ஜான்' படத்தில் நடித்துள்ள நடிகர்களில் ஒருவரான விஜய் வர்மாதான், ஜீப் காம்பஸ் காரில் வந்தார். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்றாகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஜீப் காம்பஸ் காரின் ஆரம்ப விலை (Price) 21.73 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 32.07 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் திரையுலகின் மற்ற நடிகர், நடிகைகளை போலவே கரீனா கபூரும் மிகவும் விலை உயர்ந்த, குறிப்பாக செடான் ரக கார்களில் அதிக ஆர்வம் காட்ட கூடியவர்தான். எனவே அவர் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-350டி காரில் வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications