நம்ம சின்ன வயசு படங்கள்ல ஹீரோயினா பாத்தவங்களா இவங்க! வயசு ஆக ஆக அழகு அதிகமாயிட்டே போகுது!
இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class). இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். பொதுவாக திரையுலக நட்சத்திரங்கள் சொகுசு எஸ்யூவி (Luxury SUV) கார்களில் பயணம் செய்வதைதான் அதிகமாக விரும்புகின்றனர். அதற்கு நிகராக அவர்கள் விரும்பும் ஒரு சொகுசு செடான் ரக கார் என்றால், தயங்காமல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை குறிப்பிடலாம். இது மிகவும் சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதுதான் இதற்கு காரணம்.
ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan), ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai), கரண் ஜோஹர் (Karan Johar), அனில் கபூர் (Anil Kapoor) மற்றும் ஷாகித் கபூர் (Shahid Kapoor) உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களிடம் எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் சொகுசு செடான் கார் உள்ளது.

இந்த வரிசையில் பிரபல நடிகையான கரீனா கபூரும் (Kareena Kapoor) மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை வைத்துள்ளார். இவர் தனது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வைரல் வீடியோ, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில் கரீனா கபூர் மேக்-அப் இல்லாமல் மிகவும் சாதாரணமாக விமான நிலையத்திற்கு வந்ததை நம்மால் பார்க்க முடிகிறது. வெளியூர் எங்கேயாவது செல்வதற்காக அவர் விமான நிலையத்திற்கு வந்திருக்கலாம்.

விமான நிலையத்திற்கு அவர் வர பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் மிகவும் விலை உயர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 1.77 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.86 கோடி ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 40 லட்ச ரூபாய் கூடுதலாக வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மிகவும் விலை உயர்ந்த ஒரு கார் என்பதால், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் சொகுசு செடானில் அதிநவீன வசதிகளுக்கு (Features) பஞ்சமே இல்லை.
இதில், 10 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப், 12.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர்கள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில், 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 2 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரின் 4 சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தி செலுத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஆடி ஏ8 (Audi A8) மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் சொகுசு செடான் கார் திகழ்ந்து வருகிறது.
தற்போது 44 வயதாகும் கரீனா கபூர், கடந்த 2000ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை, திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இருப்பினும் தற்போது வரை அவர் நடிப்பிற்கு முழுக்கு போடவில்லை. ஒரு சில படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டுதான் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications








