கோடி ரூபாய் காரில் தங்க சிலை போல் இறங்கி வந்தது அந்த நடிகையா!! எல்லா கேமராவும் அவர் பக்கம் தான்...

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் அவரது புத்தம் புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவி காரில் இருந்து இறங்கி வெளியே வரும் தெளிவான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

மேம்படுத்தப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவி கார் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாகவே, இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏனெனில், சாதாரண சாலைகளில் பயன்படுத்துவது மட்டுமில்லாமல், டிஃபெண்டர் கார்களை அட்வென்ச்சரான ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் தைரியமாக கொண்டு செல்லலாம்.

kareena kapoor with her defender

2020-இல் வெளியான புதிய டிஃபெண்டர் நாடு முழுவதும் பல தரப்பு விஐபி-களை கவர்ந்துள்ளது. குறிப்பாக, சினிமா நட்சத்திரங்களை புதிய டிஃபெண்டர் கார் வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த 3 வருடங்களில், பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலர் புதிய டிஃபெண்டர் காரை வாங்கி உள்ளதை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த வரிசையில், பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் அவரது கார்கள் கலெக்‌ஷனில் சமீபத்தில் புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டரை இணைத்தார். அதன்பின், காருடன் நடிகை கரீனா கபூர் இருக்கும் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின. ஆனால், அவை எதுவும் தெளிவாக இல்லை. இதனால், கரீனா கபூரின் டிஃபெண்டர் காரை முழுமையாக பார்க்க முடியாமல் போனது.

kareena kapoor with her defender

இந்த நிலையில், இந்த குறையை களையும் விதமாக, தனது டிஃபெண்டர் காரில் இருந்து நடிகை கரீனா கபூர் இறங்கி வெளியே வரும் தெளிவான வீடியோ ஒன்று தற்போது யுடியூப்பில் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள மெஹ்பூப் ஸ்டூடியோவுக்கு நடிகை கரீனா கபூர் தனது டிஃபெண்டர் காரில் வந்த போது இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

கரீனாவிடம் இருப்பது வெள்ளை நிறத்திலான டிஃபெண்டர் கார் ஆகும். ஸ்டூடியோவுக்கு இந்த காரில் கரீனா கபூர் தனியாக வரவில்லை. ஓட்டுனர் காரை ஓட்ட, பின் இருக்கையில் அமர்ந்துவந்த கரீனாவுடன் அவரது குழந்தையும் இருந்துள்ளது. இணையத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் காரின் உட்பக்கத்தை காட்டவில்லை. ஆதலால், கரீனா கபூரின் குழந்தையின் முகத்தை நம்மால் பார்க்க முடியவில்லை.

kareena kapoor with her defender

கார் நின்றவுடன், உடனடியாக கரீனாவின் குழந்தையை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவர் வருகிறார். இதை வைத்துதான், காரில் கரீனாவின் குழந்தை உள்ளது என கூறுகிறோம். ஏற்கனவே கூறியதுபோல், புதிய டிஃபெண்டர் காருடன் நடிகை கரீனா கபூர் இருக்கும் வீடியோ ஏற்கனவே கடந்த வாரத்தில் வெளியாகி இருந்தது. தங்கை கரீஷ்மா கபூருடன் கரீனா கபூர் பேசிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் முதல்முறையாக கரீனாவின் லேண்ட் ரோவர் காட்சியளித்து இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஆகும். ஆனால், பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர் போன்றோருக்கு இந்த காரை வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. டிஃபெண்டர் கார்களுக்கு அடையாளமே அவற்றின் வெள்ளை நிறம் தான். அதனை நன்கு புரிந்துக் கொண்டு, அந்த நிறத்தில் டிஃபெண்டரை நடிகை கரீனா கபூர் வாங்கியுள்ளார்.

Source: Cars For You/ Youtube

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2023, 11:02 [IST]
English summary
Kareena kapoor with her new land rover defender suv new video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X