ஷோரூமுக்கு வந்த அழகு தேவதை! இவங்கலாம் மாருதி கார்ல போனாவே ஊரே திரும்பி பாக்கும்! இனி சொல்லவே வேணாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender). குறிப்பாக பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலரும், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வைத்துள்ளனர். இதில், அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), கரீனா கபூர் (Kareena Kapoor), சஞ்சய் தத் (Sanjay Dutt), சன்னி தியோல் (Sunny Deol), அர்ஜூன் கபூர் (Arjun Kapoor) மற்றும் சுனில் ஷெட்டி (Suneil Shetty) போன்றவர்கள் எல்லாம் இங்கே குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்த வரிசையில் மற்றொரு பாலிவுட் பிரபலம் ஒருவர், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் உரிமையாளராக மாறியுள்ளார். அவர் பிரபல நடிகையான கரிஷ்மா டன்னா (Karishma Tanna) ஆவார். கரிஷ்மா டன்னாவும், அவரது கணவர் வருண் பாங்கெராவும் (Varun Bangera) ஒன்றாக சேர்ந்து, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை டெலிவரி எடுத்துள்ளனர்.

Karishma Tanna Buys Land Rover Defender 110

மும்பையில் (Mumbai) உள்ள ஷோரூம் ஒன்றில், இந்த டெலிவரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார், மொத்தம் 3 வகையான பாடி ஸ்டைல்களில் விற்பனை செய்யப்பட்டு கொண்டுள்ளது.

அவை 90 (ஷார்ட் வீல்பேஸ்), 110 (ஸ்டாண்டர்டு வீல்பேஸ்) மற்றும் 130 (லாங் வீல்பேஸ்) ஆகியவை ஆகும். இதில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 110 மாடலைதான், கரிஷ்மா டன்னா வாங்கியுள்ளார். இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரின் ஆரம்ப விலை 97 லட்ச ரூபாயாக உள்ளது.

Land Rover Defender 110

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.30 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 மாடலில், 2.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் பெட்ரோல், 5.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என மொத்தம் 4 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

கரிஷ்மா டன்னா - வருண் பாங்கெரா ஆகியோரிடம், ஏற்கனவே நிறைய விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 450 (Mercedes Benz GLS 450), ஜீப் வ்ராங்லர் ரூபிகான் (Jeep Wrangler Rubicon) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த வரிசையில்தான் தற்போது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரை அவர்கள் வாங்கியுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லேண்ட் ரோவர் டிஃபெண்டர், ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற கார்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த முரட்டுத்தனமான காரை வாங்குவதற்கு, இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் உள்பட கார் ஆர்வலர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆஃப் ரோடு திறன்கள் மட்டுமல்லாது, அதிநவீன வசதிகள், தொழில்நுட்பம் மற்றும் சௌகரியம் ஆகிய அம்சங்களிலும், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 தலைசிறந்து விளங்குகிறது. குறிப்பாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 மாடலை பொறுத்தவரை, விசாலமான இடவசதியை கொண்டுள்ளது. எனவே குடும்பங்களுக்கு ஏற்ற காராகவும் இது இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2024, 18:35 [IST]
English summary
Karishma tanna buys land rover defender 110 viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+