1990களில் கொடி கட்டி பறந்த நடிகையின் மகளா இது! ஒன்னரை கோடி ரூபா காரில் அதிசயமா வெளியில தலை காட்டியிருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை, இந்தியாவை சேர்ந்த பிரபலமான மனிதர்கள் பலரும் வைத்துள்ளனர்.

இதில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) மற்றும் கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனத்கட் (Jaydev Unadkat) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 99 லட்ச ரூபாயாக உள்ளது.

Samaira Spotted In Mercedes Benz GLE

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.17 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த காரை நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள பிரபலமான மனிதர்களுடன் சேர்த்து, மற்றொரு நடிகை ஒருவர் வைத்துள்ளார்.

அவர் கரீஷ்மா கபூர் (Karisma Kapoor) ஆவார். இவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் 450 4மேட்டிக் (450 4Matic) வேரியண்ட் உள்ளது. இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 1.12 கோடி ரூபாய் ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.40 கோடி ரூபாய் என்ற அளவில் வரும்.

Samaira Kapoor

இவ்வளவு விலை உயர்ந்த காரில், கரீஷ்மா கபூரின் மகள் சமைரா கபூர் (Samaira Kapoor) பயணம் செய்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. Viral Bhayani இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் உள்ளே, பொது வெளியில் அரிதாக மட்டும் தென்படும் சமைரா கபூர் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. சமைரா கபூரின் அம்மாவான கரீஷ்மா கபூர் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். கடந்த 1990களில் அவர் புகழின் உச்சத்தில் இருந்தார்.

அப்போது அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 10 திரைப்படங்கள் வரை அவர் நடித்து கொண்டிருந்தார். ஆனால் அவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டும் அரிதாக நடிக்கிறார். 2013ம் ஆண்டில் இருந்து பார்த்தால் தற்போது வரை வெறும் 3 திரைப்படங்களில் மட்டுமே கரீஷ்மா கபூர் நடித்துள்ளார்.

அவரது மகள் பயணம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் 450 4மேட்டிக் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 375.48 பிஹெச்பி பவர் ஆகவும், 500 என்எம் டார்க் திறன் ஆகவும் உள்ளது. இதன் உடன் 9 ஸ்பீடு ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும். இது 5 சீட்டர் கார் ஆகும். அடாஸ் (ADAS - Advanced Driver-assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு உள்பட ஏராளமான வசதிகளை எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் 450 4மேட்டிக் வேரியண்ட் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கருதப்படுகிறது. இது சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 5, 2025, 14:40 [IST]
English summary
Karisma kapoor s daughter samaira spotted in mercedes benz gle viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+