கொடி கட்டி பறந்த நடிகை! இந்த வீடியோ வெளிய வந்தர கூடாதுனு வேண்டியிருப்பாங்க! ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு!

இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர் (Kareena Kapoor). இவரது அக்கா கரீஷ்மா கபூர் (Karisma Kapoor). தற்போது 50 வயதாகும் இவர் கடந்த 1991ம் ஆண்டு முதல் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இடையில் 2014-2017ம் ஆண்டுகளில் மட்டும் இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இருப்பினும் 2018ம் ஆண்டில் 'கம்பேக்' கொடுத்த கரீஷ்மா கபூர், தற்போதும் திரைப்படங்களில் நடித்து கொண்டுள்ளார். இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE) ஆகும். தனது புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு கரிஷ்மா கபூர் வந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில், கரிஷ்மா கபூர் வந்து இறங்குவதை பார்க்க முடிகிறது.

Karisma Kapoor Spotted In Mercedes-Benz GLE Luxury SUV

அப்போது எதிர்பாராதவிதமாக கரிஷ்மா கபூர் கால் இடறியதன் காரணமாக கீழே விழுக போனார். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் உடனடியாக சுதாரித்து கொண்டார். பொதுவாக பிரபலங்கள் தங்களுக்கு ஏற்படும் தர்மசங்கடங்கள் யாருக்கும் தெரிய கூடாது என நினைப்பார்கள்.

ஏனெனில் ரசிகர்கள் மத்தியில் அது அவர்களுடைய இமேஜை பாதிக்கும். அத்துடன் தேவையில்லாத வதந்திகளுக்கும் வழிவகுக்கும். கடந்த காலங்களில் பிரபல நடிகர்கள் சிலர் கால் இடறி கீழே விழுந்த சமயங்களில், ரசிகர்கள் வீடியோ எடுப்பதை, அவர்களின் உதவியாளர்கள் தடுத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Mercedes-Benz GLE

இதன் மூலமாக அந்த வீடியோக்கள் வெளியே வருவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கரிஷ்மா கபூரின் இந்த வீடியோ, சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி கொண்டுள்ளது. கரிஷ்மா கபூர் தற்போது புதிதாக வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார், மிகவும் விலை உயர்ந்தது ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் 450 4மேட்டிக் வேரியண்ட்டைதான், கரிஷ்மா கபூர் வாங்கியுள்ளார். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 1.10 கோடி ரூபாய் ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.25 கோடி ரூபாய் வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 4மேட்டிக் காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 2.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் வழங்கப்படுகின்றன.

இதில் 450 4மேட்டிக் வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ள 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 381 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) ஆகிய கார்கள் உடன், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கரிஷ்மா கபூர் தற்போது புதிதாக வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே சொகுசான மற்றும் சௌகரியமான பயணத்தை எதிர்பார்க்க கூடிய செல்வந்தர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது எங்களுடைய கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 27, 2024, 16:01 [IST]
English summary
Karisma kapoor spotted in mercedes benz gle luxury suv viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+