ஆட்டோமொபைல் துறை வித்தகர் கார்ல் பென்ஸ் பிறந்ததினம் - சிறப்பு தொகுப்பு!

By Ravichandran

பென்ஸ் கார் நிறுவனத்தின் நிறுவனர் மறைந்த கார்ல் பென்ஸின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், கார் உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகின்றது. இதனை நிறுவிய கார்ல் பென்ஸ் அன்று அவரது பிறந்த நாள் அவரது வாழ்க்கை பற்றிய ஒரு அலசலை ஸ்லைடரில் காண்போம்.

கார்ல் பென்ஸ் பற்றி...

கார்ல் பென்ஸ் பற்றி...

கார்ல் பென்ஸின் இயற்பெயர் கார்ல் ப்ரைட்ரிச் மைக்கேல் வைல்லேண்ட் என்பதாகும். பென்ஸ் நவம்பர் 25, 1844-ஆம் ஆண்டில் பிறந்தார். தற்போதைய நவீன ஜெர்மனியின் அங்கமாக விளங்கும் கார்ல்ஸ்ரூஹேவில் உள்ள முல்பர்க் என்ற இடத்தில் பிறந்தார்.

கார்ல் பென்ஸ் பல்துறை வித்தகராக விளங்கினார். அவர் இஞ்ஜின் டிசைனராகவும், சிறந்த இஞ்ஜினியராகவும் விளங்கினார்.

அவர் தான், உலகில் பெட்ரோல் எஞ்சினை கண்டறிந்த பெருமைக்குறியவர் ஆவார்.

பால்ய பருவம்

பால்ய பருவம்

கார்ல் பென்ஸிற்கு 2 வயது இருக்கும் போது, அவரது தந்தை கொல்லபட்டார். பென்ஸின் குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்த போதும், அவரின் தாயார், பென்ஸுக்கு நல்ல கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

கார்ல்ரூஹே என்ற இடத்தில் தனது கல்வியை துவங்கிய பென்ஸ், பிற்காலத்தில், பாலிடெக்னிக் பல்கலைகழகத்தில் படித்தார்.

முதலில் பூட்டு செய்யும் தொழிலை கற்ற பென்ஸ், அவரது தந்தையாரின் லோகோமோட்டிவ் இஞ்ஜினியரிங் துறையில் தடம் பதித்தார்.

படு புத்திசாலியாக இருந்த பென்ஸ், 1860-ஆம் ஆண்டில் தனது 15-ஆம் வயதில் கார்ல்ஸ்ரூஹேவில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படிப்பிற்கான நுழைவு தேர்வில் தேறிவிட்டார். பென்ஸ், 1864-ஆம் ஆண்டில், தனது 19-ஆம் வயதில் இஞ்ஜினியரிங் பட்டம் பெற்றார்.

இளமை பருவம்;

இளமை பருவம்;

கார்ல் பென்ஸ், தனது சைக்கிளை ஓட்டி கொண்டிருக்கும் போது, குதிரைகள் இல்லாமல் இயங்கக்கூடிய வாகனம் குறித்த சிந்தனைகளில் மூழ்க துவங்கினார்.

அவரது முறையான கல்வியை அடுத்து, பல்வேறு நிறுவனங்களில் 7 வருடங்கள் பணி புரிந்தார். பின்னர், மீண்டும் கார்ல்ஸ்ரூஹேவில் இருந்த மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் கம்பெனியில் இரு வருடங்கள் வேலை செய்தார்.

சில காலம், ஸ்கேல்ஸ் பேக்டரியில் டிராஃப்ட்ஸ்மேன் மற்றும் டிசைனர் பணியிலும் இருந்தார். பின்னர் மேம்பாலம் கட்டும் பணியிலும் இருந்த அவர், ஆஸ்திரியாவின் வியன்னா சென்று அங்கு ஒரு இரும்பு கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியிலும் பணி புரிந்தார்.

கார்ல் பென்ஸ்ஸின் சொந்த ஆலை;

கார்ல் பென்ஸ்ஸின் சொந்த ஆலை;

கார்ல் பென்ஸ் 1871-ல், தனது 27-வது வயதில், ஆகஸ்ட் ரிட்டர் என்றவருடன் இணைந்து மான்ஹைம் என்ற இடத்தில் அயர்ன் ஃபவுண்டரி மற்றும் மெக்கானிக்கால் ஒர்க்‌ஷாப்பை நிறுவினர்.

ஃபேக்டரி ஃபார் மிஷின்ஸ் அண்ட் ஷீட்-மெட்டல் வர்க்கிங் என்றும் மறுபெயரிடபட்ட இந்த ஒர்க்‌ஷாப் சரியாக இயங்காத காரணத்தாலும், ரிட்டர் பாதியிலேயே விலகிவிட்டார்.

கார்ல் பென்ஸ்ஸின் திருமணம் / குடும்பம் ;

கார்ல் பென்ஸ்ஸின் திருமணம் / குடும்பம் ;

கார்ல் பென்ஸின் முதல் ஒர்க்‌ஷாப் சரியாக இயங்காமல் ரிட்டர் விலகி சென்ற நேரத்தில், பென்ஸின் வருங்கால மனைவியாக இருந்த பெர்தா ரிங்கர் அவரது வரதட்ஷனை பணத்தை கொண்டு பென்ஸின் ஒர்க்‌ஷாப்பை வலம் மிக்க நிலைக்கு மீட்டு கொண்டு வந்தார்.

கார்ல் பென்ஸ் மற்றும் பெர்தா ரிங்கர் ஜூலை 20, 1872-ல் திருமனம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, யூகன் (1873-லும்), ரிச்சர்ட் (1874-லும்), கிளாரா (1874-லும்), தில்டே (1882-லும்), எல்லென் (1890-லும்) என ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.

அபார கண்டுபிடிப்புகள்;

அபார கண்டுபிடிப்புகள்;

கார்ல் பென்ஸ், பல்வேறு விதமான வியத்தகு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.

பல்வேறு நிதி சிக்கல்கள் மற்றும் பிற சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததால், கார்ல் பென்ஸ் மற்றும் அவரது மனைவியும் அவர்களுக்கு சொந்தமான ஒர்க்‌ஷாப்பை நிர்வகித்து கொண்டே, புதிய கண்டுபிடிப்புகளில் முழு வீச்சாக இறங்கினர்.

1878 முதல் புதிய பேடண்ட்களை பெறு முயற்சியில் இறங்கினர். முதல்படியாக, பென்ஸ் நம்பகமான 2-ஸ்ட்ரோக் பெட்ரோல் இஞ்ஜினை உருவாக்கும் முயற்சியில் இறங்கி, டிசம்பர் 31, 1878-ஆம் ஆண்டில் 2-ஸ்ட்ரோக் இஞ்ஜினை கண்டுபிடித்தார். இதற்கான காப்புரிமை 1879-ஆம் ஆண்டில் பெற்றார்.

அதன் பின்னர், 2-ஸ்ட்ரோக் இஞ்ஜினுக்கு மிக முக்கியமான அம்சங்களான ஸ்பீட் ரெகுலேஷன் சிஸ்டம், பேட்டரிகளின் உதவியுடன் ஸ்பார்க்கினால் உருவாகும் இக்னிஷன், ஸ்பார்க் பிளக், கார்புரேட்டர், கிளட்ச், கியர் ஷிஃப்ட், வாட்டர் ரேடியேட்டர் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். இதற்கான காப்பு உரிமங்களையும் பெற்றார்.

முக்கிய கண்டுபிடிப்பு;

முக்கிய கண்டுபிடிப்பு;

கார்ல் பென்ஸ், ஆட்டோமோபைல் துறை பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.

முதன் முதலாக, அவரது முதல் இஞ்ஜினுக்கு 1879-ஆம் பேடண்ட் உரிமத்தை பெற்றார். அடுத்தபடியாக, முதல் ஆட்டோமொபைலை கண்டுபிடித்ததற்காக 1886-ஆம் ஆண்டில் காப்பு உரிமத்தை பெற்றார்.

முதல் டிரக்;

முதல் டிரக்;

1895-ஆம் ஆண்டில் கார்ல் பென்ஸ் தான் உலகின் முதல் டிரக்-கையும் வடிவமைத்தார்.

இந்த டிரக்கின் சில அம்சங்கள், முதல் மோட்டார் பஸ் கம்பெனியான நெட்ஃபெனர் நிறுவனத்தால் மறுவடிவமைக்கபட்டு, பஸ்களாக மாற்றபட்டன.

முதல் ஆட்டோமொபைல் ரேஸ் பந்தயம்;

முதல் ஆட்டோமொபைல் ரேஸ் பந்தயம்;

உலகின் முதல் ஆட்டோமொபைல் பந்தயம் 1894-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இது பிரான்ஸ் நாட்டின் பேரிஸ் நகரில் இருந்து, ரூயன் என்ற நகரம் வரை நடைபெற்றது.

இதில், பென்ஸ் வடிவமைத்த தி பென்ஸ் வெலோ என்ற வாகனம் பங்கேற்று, 126 கிலோமீட்டர் என்ற பந்தய தூரத்தை 10 மணி நேரம், ஒரு நிமிட நேரத்தில் சென்றடைந்தது. இது 14 வது இடத்தையே பிடித்தாலும், அந்த காலத்திலேயே மணிக்கு 12.7 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது குறிப்பிடதக்கது.

முதல் பிளாட் இஞ்ஜின்;

முதல் பிளாட் இஞ்ஜின்;

1896-ஆம் ஆண்டில், முதல் பிளாட் இஞ்ஜின் கண்டுபிடித்ததற்காக, கார்ல் பென்ஸ் அதற்கான பேடண்ட் உரிமத்தை பெற்றார். இது ஹாரிசாண்டல் அமைப்பில் எதிர் திசைகளில் நோக்கியுள்ள பிஸ்டன்களை கொண்டிருந்தது.

4 அல்லது அதற்கு கூடுதலான சிலிண்டர்கள் கொண்ட இஞ்ஜின்கள், பாக்ஸர் இஞ்ஜின் அல்லது பாக்ஸர்மோட்டார் என்றும் அழைக்கபட்டது.

இவ்வகை பாக்ஸர் இஞ்ஜின்கள், பிஎம்டபுள்யூ மோட்டார்சைக்கிள்கள், போர்ஷே, சுபரு உள்ளிட்ட பல நிறுவனங்களின் உயர்திறன் கொண்ட ரேசிங் கார்களில் இன்றும் பயன்படுத்தபடுகிறது.

தொலைகாட்சி படம்;

கார்ல் பென்ஸ் மற்றும் பெர்தா பென்ஸின் வாழ்க்கை, ‘கார்ல் அண்ட் பெர்தா' என்ற பெயரில் தொலைகாட்சி படமாக வெளியானது. இதன் வெளியீடு, 11 மே 2011 தேதி நிகழ்த்தபட்டது.

இந்த படம், டாஸ் எர்ஸ்ட் மூலம், மே 23-ஆம் தேதி திரையிடபட்டது.

இந்த படத்தின் உருவாக்கம் குறித்த வீடியோவை காண,

கார்ல் அண்ட் பெர்தா

More from DriveSpark

Article Published On: Wednesday, November 25, 2015, 21:41 [IST]
English summary
Karl Benz Birthday, Founder of Benz group is celebrated today. A lookback of his life is presented on his Birthday. Let's know more about Karl Benz and his life.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+