கர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க!

கர்நாடகாவின் முதல் பென்ட்லீ பென்டைகா காரை தொழில் அதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க!

இந்திய சந்தையில் பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga) மிகவும் பிரபலமான சொகுசு கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சூழலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரோஹன் மான்டிரோ என்ற கோடீஸ்வரர் தற்போது பென்ட்லீ பென்டைகா காரை வாங்கியுள்ளார். இவர் மிகவும் பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க!

அத்துடன் இதுதான் கர்நாடக மாநிலத்தின் முதல் பென்ட்லீ பென்டைகா கார் எனவும் கூறப்படுகிறது. ரோஹன் மான்டிரோ வாங்கியுள்ள பென்ட்லீ பென்டைகா கார், எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இதன் வி8 (V8) வேரியண்ட்டை ரோஹன் மான்டிரோ தேர்வு செய்துள்ளார். ரோஹன் மான்டிரோ வாங்கியுள்ள பென்ட்லீ பென்டைகா காரின் ஆன் ரோடு விலை சுமார் 6.5 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க!

பொதுவாக கோடீஸ்வரர்கள் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவது வாடிக்கையான ஒன்றுதான். முகேஷ் அம்பானி போன்ற கோடீஸ்வரர்கள் மிகவும் விலை உயர்ந்த கார்களை ஏராளமாக வைத்துள்ளனர். ஆனால் ரோஹன் மான்டிரோவிடம் வேறு என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

கர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க!

அதே நேரத்தில் பென்ட்லீ பென்டைகா காரில், 4.0 லிட்டர், வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 542 பிஹெச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்திய கோடீஸ்வரர்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக பென்ட்லீ பென்டைகா இருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க!

அம்பானி குடும்பத்தினர் உள்பட பல்வேறு பிரபலங்களிடம் பென்ட்லீ பென்டைகா கார் இருக்கிறது. அம்பானி குடும்பத்தினரிடம் மொத்தம் 3 பென்ட்லீ பென்டைகா கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பென்ட்லீ பென்டைகா காரின் சொகுசு வசதிகளை அம்பானி குடும்பத்தினர் எந்த அளவிற்கு விரும்புகின்றனர் என்பதை இதன் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

கர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க!

பென்ட்லீ பென்டைகா வி8 மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 290 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த கார் சொகுசு வசதிகளில் மட்டுமல்லாது, செயல்திறனிலும் அமர்க்களப்படுத்துகிறது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 7.69 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்ட்லீ பென்டைகா காரை போல், இன்னும் ஒரு சில விலை உயர்ந்த எஸ்யூவி கார்களும் இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க!

இதில், லம்போர்கினி உருஸ் மிகவும் முக்கியமானது. அதேபோல் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கல்லினன் காருக்கும் இந்த பட்டியலில் இடம் உண்டு. இந்த 2 கார்களும் இந்திய திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் அதிபர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகின்றன. எனவே இந்தியாவில் இந்த 2 கார்களின் விற்பனையும் சிறப்பாக இருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலையை கேட்டு மயக்கம் போட்றாதீங்க!

இதில், உருஸ் எஸ்யூவி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் லம்போர்கினி நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக உள்ளது. பொதுவாக லம்போர்கினி நிறுவனத்தின் கார்களை இந்திய சாலைகளில் இயக்குவது சிரமம். இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆனால் உருஸ் இதில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறது. எனவேதான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka businessman buys bentley bentayga check details here
Story first published: Saturday, September 25, 2021, 18:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X