கர்நாடகா முதலமைச்சர் கான்வாயை மறித்து சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்: வீடியோ...!

கர்நாடகா முதலமைச்சர் எச்.டி. குமாரசாமியின் கான்வாயை மறித்து, தேர்தல் பறக்கும் படையினர் பரிசோதனைச் செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கர்நாடகா முதலமைச்சர் கான்வாயை மறித்து சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்: வீடியோ...!

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் செலவீனங்களைக் கண்கானிக்க, ஆயிரக் கணக்கான பறக்கும் படையினர் மற்றும் நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நாடு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகா முதலமைச்சர் கான்வாயை மறித்து சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்: வீடியோ...!

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி வந்த கான்வாயை மறித்த தேர்தல் பறக்கும் படையினர், அவரது ரேஞ்ச் ரோவர் காரை சோதனையிட்டனர். இதுகுறித்த வீடியோக் காட்சிகள் தற்போது இணையத்திலும், செய்தியிலும் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகா முதலமைச்சர் கான்வாயை மறித்து சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்: வீடியோ...!

தேர்தல் நன்னடத்தைகள் நடைமுறையில் இருப்பதால், வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் யாரும் பணப்பட்டுவாட செய்துவிடக் கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் இந்த செயலில் ஈடுபட்டனர். அதேசமயம், இஸட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் குமாரசாமியை மறித்து சோதனையிட்டது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கர்நாடகா முதலமைச்சர் கான்வாயை மறித்து சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்: வீடியோ...!

இருப்பினும், அவரின் வாகனத்தை பரிசோதித்த அதிகாரிகள், பின் பக்க பூட்லிட்டை மட்டுமே திறந்து பார்த்துவிட்டு வாகனத்தை அனுப்பி வைத்தனர். அதற்குள், அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் காரைச் சூழ நின்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, அவரது கான்வாயில் ஈடுபட்ட 9 கார்களையும் சிறிதுகூட பரிசோதிக்காமல் உடனடியாக வழியனுப்பி வைத்தனர்.

கர்நாடகா முதலமைச்சர் கான்வாயை மறித்து சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்: வீடியோ...!

முதலமைச்சர் குமாரசாமிக்காக அரசு டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி கார் ஒதுக்கியுள்ளது. இருப்பினும், அந்த காரைப் பயன்படுத்தாமல், சொந்த பயன்பாட்டிற்காக வங்கியுள்ள லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் காரை அவர் பயன்படுத்தியுள்ளார். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தக் காரைப் பயன்படுத்தியதாகக் கூறுப்படுகிறது.

கர்நாடகா முதலமைச்சர் கான்வாயை மறித்து சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்: வீடியோ...!

இந்த ரேஞ்ச் ரோவரின் கார் சீட்டுகள், குமாரசாமியின் உடல்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால், இந்த காரின் சீட்டுகள் அவருக்கு சௌகரியமான உணர்வை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், சில காலங்களாக இந்த காரை அவர் பயன்படுத்தி வருவாத தகவல்கள் தெரிவிக்கன்றன.

கர்நாடகா முதலமைச்சர் கான்வாயை மறித்து சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்: வீடியோ...!

இந்த கார்மீது சமீபத்தில் சில சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் இந்த கார் இரண்டு முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. ஒருமுறை, இந்த காரின் டிரைவர் செல்ஃபோன் பேசியபடி காரை இயக்கியதாகவும், மற்றுமொரு முறை அதிவேகமாக கார் சென்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த விதிமுறை மீறல்களை சம்பந்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமிராக்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. இருப்பினும் இந்த குற்றங்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கர்நாடகா முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி, பயன்படுத்தி வரும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவரின் மதிப்பானது, எக்ஸ்ஷோரூமில் ரூ. 1.75 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது அவருக்கு அரசு வழங்கிய டொயோட்டா பார்ச்சூனர் காரை சொகுசான பயண அனுபவத்தை வழங்கக்கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Source: YOYO TV

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka CM Range Rover Stopped By Election Commission. Read In Tamil.
Story first published: Thursday, April 4, 2019, 15:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X