"எனக்காக ரோட்ல டிராஃபிக்கை நிறுத்தாதீர்கள்" போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்ட முதல்வர்!

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனக்காகப் பெங்களூரு நகர்ப் பகுதியில் போக்குவரத்தை நிறுத்தும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டாம் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பிடித்த பின்பு சித்தராமையா அம்மாநிலத்தின் முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக அவர் பயணிக்கும் போது பாதுகாப்பு காரணங்களுக்காகச் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்.

siddaramaiah zero traffic

முதல்வரின் இந்த பாதுகாப்புப் பணிக்கான டிராஃபிக் ஒருங்கிணைப்பை அந்த சிட்டி டிராஃபிக் போலீஸ் கமிஷனர் பொறுப்பெடுத்துக்கொள்வார். இது கர்நாடகா மட்டுமல்ல அனைத்து மாநிலத்திற்கும் உள்ள நெறிமுறை தான். இதற்கு "ஜீரோ டிராஃபிக்" எனப் பெயர். இது மாநில முதல்வருக்கான பாதுகாப்பு காரணங்களாகச் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா சமீபத்தில் ட்வீட் ஒன்றைப் போட்டுள்ளார். அதில் அவர் பெங்களூரு போலீஸ் கமிஷ்னரிடம் தனக்கான வழங்கப்படும் "ஜீரோ டிராஃபிக்" நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பெங்களூரு மக்கள் ஏற்கனேவ போக்குவரத்து நெருக்கடியில் சிக்கத் தவிப்பதைப் பார்த்துத் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் முதல்வராக இருந்த பசவராஜ் மொம்மையும் இந்த "ஜீரோ டிராபிக்" விதிமுறை தனக்குப் பின்பற்ற வேண்டிய தேவையில்லை என கூறியிருந்தார். அதனால் அவருக்கும் அடிப்படை பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டது சாலையில் மற்ற வாகனங்கள் இவருக்காக நிறுத்தப்படவில்லை. மற்ற வாகனங்களுடன் தான் இவரும் பயணித்தார்.

ஜீரோ டிராஃபிக் நெறிமுறை முதல்வர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது. முதல்வர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறார் என்றால் உடனே அவரது பாதுகாப்புப் பணிக்காக இருக்கும் போலீசார் முதலில் அவர் செல்லும் பாதைகளில் பணியில் இருக்கும் காவலர்களை அலர்ட் செய்வார்கள். அவர் கிளம்பியதும். அவர் செல்லும் பாதையில் டிராஃபிக் முழுமையாக நிறுத்தப்படும்.

பின்னர் அவர் அந்த இடத்தை கடந்த பின்பே அங்கு டிராஃபிக் திறந்து விடப்படும். அதுவரை அந்த பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். இப்படியாக டிராஃபிக்கை தடை செய்வதால் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும் நிலையில் முதல்வரின் பயணத்திற்காக டிராஃபிக் நிறுத்தப்பட்டால் மக்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதை சித்தராமையா தவிர்த்துள்ளார்.

இருந்தாலும் அவரது கார் சைரன் வைத்த கார் என்பதால் அவர் கார் வரும் போது சிக்னல் இருந்தால் இவர் செல்லும் பாதையில் உள்ள சிக்னலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அது திறந்துவிடப்படும். இதனால் அவர் வாகனம் சிக்னலில் நிற்கவேண்டிய தேவையில்லை. அப்படியே சிக்னல் விழாவிட்டாலும் சிவப்பு சிக்னலில் இருந்தாலும் இவர் கார் அதை ஜம்ப் செய்து செல்ல உரிமை இருக்கிறது. ஆம்புலன்ஸிற்கு எப்படியோ அப்படி தான் இவரது வாகனத்திற்கும்.

சித்தராமையாக முதல்வராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்ட உடனேயே அவருக்காக டொயோட்டா வில்ஃபயர் கார் ஒன்றைக் கர்நாடக அரசு வாங்கியது. அந்த காரை தான் தற்போது அவர் பயன்படுத்தி வருகிறார். அந்தகாரின் விலை சுமார் ரூ1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு மாநில முதல்வரின் பாதுகாப்பிற்கு "ஜீரோ டிராஃபிக்" நெறிமுறைகள் மிக அவசியமானது தான் என்றாலும் பெங்களூரு போன்ற அதிக டிராஃபிக் நிறைந்த சிட்டிகளில் இந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவதால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதை உணர்ந்த முதல்வர் தான் இந்த நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். மக்களின் கஷ்டங்களை முதல்வர்கள் உணர்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

Article Published On: Monday, May 22, 2023, 12:40 [IST]
English summary
Karnataka cm siddaramaiah asks police to withdraw zero traffic protocol for him
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+