கடைசியில் இந்த காரை பயன்படுத்தும் நிலைமைக்கு ஆளாகிட்டாரே! அரசாங்க கார் ஓரங்கட்டப்பட்டது
டொயோட்டா (Toyota), ஜப்பான் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் டொயோட்டாவில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று, வெல்ஃபைஃபர் (Vellfire) ஆகும். வெல்ஃபையரை கார் என்று சொல்வதை விட கேரவன் (Carvan) என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு பிரம்மாண்டமாகவும், சொகுசு வசதிகள் நிறைந்ததாகவும் வெல்ஃபையர் விளங்குகிறது. இதனாலேயே, இந்த டொயோட்டா காரை ஒரு மாநில முதலமைச்சர் பயன்படுத்த உள்ளார். இந்த காரை அவர் பயன்படுத்துவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அது என்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஏற்கனவே கூறியதுபோல், டொயோட்டா வெல்ஃபையர் ஆனது உள்ளே அமர்பவர்களுக்கு மிகவும் சவுகரியமான பயணத்தை வழங்கக்கூடிய கார் ஆகும். குறிப்பாக, பின் இருக்கைகளில் அமர்பவர்கள் நன்கு கால்களை நீட்டிக் கொண்டு, சாய்ந்தப்படி படுத்து உறங்கிக் கொண்டு கூட பயணம் செய்யலாம். இதற்காகவே, வெல்ஃபையர் காரின் 2வது வரிசை இருக்கைகளில் மசாஜ் (Massage) வசதி எல்லாம் கூட வழங்கப்படுகிறது.

தற்போது டொயோட்டா வெல்ஃபையர் காரை ஒரு மாநில முதலமைச்சர் வாங்க உள்ளார் என கூறினோம் அல்லவா... அவர் இந்த காரை வாங்குவதற்கும் இத்தகைய லக்சரி தரத்திலான சவுகரிய அம்சங்கள் தான் முக்கியமான காரணம் ஆகும். அந்த முதலமைச்சர் வேறு யாரும் இல்லை, கர்நாடக முதலமைச்சரான சித்தராமைய்யா (Siddaramaiah) ஆவார்.
கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா சமீப காலமாக தீராத கால் முட்டி வலியினால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் செய்திகளை கூட பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதனால், அரசாங்க கார்களில் பயணிக்கும் போது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் முதலமைச்சர் சித்தராமைய்யா மிகவும் சிரமப்படுகிறார்.
இதன் காரணமாகவே, சவுகரியமான பயணத்திற்காக டொயோட்டா வெல்ஃபையர் காரை தனது சொந்த பயன்பாட்டிற்கு வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, காவேரி நிவாஸில் இருந்து கர்நாடக சட்டசபையான விதான சவுதா வளாகம் வரையில் சித்தராமைய்யா வெல்ஃபையர் காரில் அமர்ந்து டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும், படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கர்நாடக சட்டசபையில் மாநில பட்ஜெட்டுக்கு முந்தைய சந்திப்பிற்காக முதலமைச்சர் சித்தாரமைய்யா வந்துள்ளார். காவேரி நிவாஸில் இருந்து வெல்ஃபையர் காரில் பயணம் செய்து பார்த்த பின், முதலமைச்சரை கலந்துரையாடல் நடைபெறும் அறைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து சென்றுள்ளனர். அதாவது, அந்த அளவிற்கு முற்றிலுமாக முதலமைச்சர் சித்தாரமைய்யாவால் நடக்க முடியவில்லை.
கர்நாடக முதல்வரை டொயோட்டா வெல்ஃபையர் காரை வாங்க கூறி அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார். இந்த டொயோட்டா காரை பற்றி பார்த்தோமேயானால், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.22 கோடியில் இருந்து ரூ.1.33 கோடி வரையில் உள்ளன. வெல்ஃபையரில் 2.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு மாநில முதலமைச்சர் பயன்படுத்தும் அளவிற்கு வெல்ஃபையர் சவுகரியமான காரா என கேட்டால், நிச்சயமாக ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம், அவரது பாதுகாப்புக்கும் ஏற்ற கார், வெல்ஃபையர் ஆகும். இருப்பினும், இத்தகைய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தனது கால் முட்டி வலியில் இருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறோம்.


Click it and Unblock the Notifications








