இந்த மாதிரி மனைவி அமைவதெல்லாம் வரம்.. கணவன், மனைவி ஒன்னு சேர்ந்தா எதுவும் சாத்தியமாகும் போலையே..

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' இந்த பழமொழிக்கு ஏற்ற மனைவியே ஓர் நபருக்கு அமைந்திருக்கின்றார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மிகப் பெரிய சாதனையைப் படைத்திருக்கின்றனர். பெரு நிறுவனங்களே செய்ய தயங்கும் ஓர் வேலையை அவர்கள் செய்து காட்டியிருக்கின்றனர். வேறு ஒன்றும் இல்லைங்க கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஓர் வழக்கமான காரை டபுள் டக்கர் வாகனமாக மாற்றியிருக்கின்றனர். இந்த மாதிரியான தொழிலை இந்தியாவில் எந்தவொரு கார் உற்பத்தி நிறுவனம் இதுவரை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே டொயோட்டா இன்னோவா (Toyota Innova) காரை தங்கும் வசதிக் கொண்ட வாகனமாக தம்பதியினர் மாற்றியிருக்கின்றனர். அதாவது, இன்னோவா காரை நடமாடும் வீடாக மாற்றியிருக்கின்றனர். இந்த தனித்துவமான வேலையின் காரணமாகவே ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை அவர்கள் கவர்ந்திருக்கின்றனர். காருடனிருந்து அந்த தம்பதியினர் அளித்த பேட்டியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவர்களுக்கு ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.

Karnataka couple converts car into home

இந்த தம்பதியினர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆறு மாத சாலை பயணத்தை முன்னிட்டே அவர்கள் தங்களின் டொயோட்டா இன்னோவா காரை தங்கும் வசதிக் கொண்ட வாகனமாக மாற்றியிருக்கின்றனர். காரின் மேற்கூரை மீதே தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதன் உள்ளே செல்வதற்காக தனியாக ஏணியும் இடம் பெற்றிருக்கின்றது.

மேல் அடுக்கை இரும்பு சட்டகத்தாலேயே அவர்கள் தயார் செய்திருக்கின்றனர். தொடர்ந்து, கூடாரத்திற்காக அவர்கள் டெண்ட் பயன்படுத்தி இருக்கின்றனர். இதனை தேவையில்லை என்றால் மடித்துக் கொள்ள முடியும். அப்போது, அது இன்னோவா கார் மீது ஓர் பெட்டி வைத்திருப்பதை போலவே தெரியும். இந்த கூடாரத்தில் இரண்டு பேர் வரை படுத்துறங்க முடியும்.

இதற்காக மெத்தையும் அங்கே வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, காருக்குள் அடுப்பாங்கறை வசதி போன்றவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. வெளியூர்களில் தங்கும்போது பிடித்த உணவை சமைத்து சாப்பிட இது பெரும் உதவியாக இருக்கும். தண்ணீர் கேன், அடுப்பு, சமையல் பாத்திரம் என சகல வசதிகளை பின் பக்கத்தில் நிலை நிறுத்தியிருக்கின்றனர்.

இதுமட்டுமல்ல, தங்களின் மின்சார தேவைக்காக அவர்கள் ஓர் சோலார் பேனலையும் வைத்திருக்கின்றனர். இதன் வாயிலாக, மின்சாரத்தை சேமித்து காருக்குள் இருக்கும் கூடுதல் மின்சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக கூடாரத்தில் இருக்கும் லைட் மற்றும் மின்விசிறிகளுக்கான மின்சாரத்தை இதன் வாயிலாகவே பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த ஒட்டுமொத்த வசதியையும் இந்த தம்பதியினர் ரூ. 2 லட்சம் செலவிலேயே ஏற்படுத்தி இருக்கின்றனர். இதன் வாயிலாகவே தங்களின் சுற்றுப் பயணத்தை மிக சிறப்பாகவும், வசதி நிறைந்ததாகவும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த இந்த தம்பதியினர் மஹா கும்ப மோளாவில் கலந்துக் கொள்வதற்காக பிரக்யராஜ்-இல் உள்ளனர்.

இங்கேயே பலரின் கவனத்தை அவர்கள் கவர்ந்திருக்கின்றனர். உள்ளூர் வாசிகளை மட்டுமல்ல, இணையவாசிகள் மற்றும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவையும் இவர்கள் கவர்ந்திருக்கின்றனர். மஹா கும்ப மேளாவை அடுத்து இவர்கள் மீண்டும் தங்களின் சாலை பயணத்தை தொடங்க இருக்கின்றனர். நேபாளத்திற்கே இவர்கள் தங்களின் பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இது ஓர் நீண்ட கால பயணமாக இது அவர்களுக்கு இருக்கப் போகின்றது. இந்த மாதிரியான பயணங்களுக்காக தங்களின் டொயோட்டா இன்னோவா காரை டபுள் டெக்கர் வாகனமாக மாற்றியிருக்கின்றனர். அதாவது அடுக்குமாடி குடியிருப்பைப் போல மாற்றி இருக்கின்றனர். மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டு இருப்பது பழைய தலைமுறை டொயோட்டா இன்னோவா ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று கார்களை தங்கும் வசதிக் கொண்டதாக மாற்றும் சம்பவம் அரங்கேறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. குறிப்பாக சமீப காலமாக இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டில் அதிகள அளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலிலேயே கணவன்-மனைவி இருவரும் இணைந்து தங்களின் பயணத்திற்கான வாகனத்தை தாங்களே ஓர் நிறுவனத்தின் வாயிலாக தயார் செய்திருக்கின்றனர். கணவன் மனைவி நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு சான்றாக இந்த நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, January 27, 2025, 5:00 [IST]
English summary
Karnataka couple transforms toyota innova into mobile home for rs 2 lakh inspiring anand mahindra
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+